அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 23 August 2011

குஜராத்தி கஞ்சி



ரமலான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சியை பல விதங்களில் தயார் பண்ணிப் பார்த்திருப்போம். ஆனால் அத்தனையும் சுவையிலும் சத்துக்களிலும் குறையில்லாதவையாக இருந்தாலும், தமிழ்நாட்டு பாரம்பரிய முறைகளில் மட்டுமே இருந்திருக்கும். இப்போது குஜராத்தி முறையில் செய்யப்படும், அரிசி சேர்க்கப்படாத இந்தக் கஞ்சியையும் செய்து பாருங்கள். செய்வதற்கு மிகவும் சுலபம்தான். அத்துடன் சுவையும் வித்தியாச‌மாகவும், அருமையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:




போன்லெஸ் சிக்கன் - 350 கிராம்
சோளம் - 150 கிராம்
சிகப்பு குடை மிளகாய் - 150 கிராம்
புரோக்கோலி - 200 கிராம்
(உடைத்த) சேமியா (spaghetti) - 150 கிராம்
தேங்காய்ப் பால் - 150 மில்லி

கறி மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெங்காயம் - 1 (பொடிதாக நறுக்கியது)
மல்லிக் கீரை - 2 பிடி
சமோசா பேப்பர் சிப்ஸ் - 3 கப் (பொரித்து, நொறுக்கியது)

வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 அல்லது 6 (பொடிதாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
லெமன் - தேவைக்கு

செய்முறை:



1. சிகப்பு குடை மிளகாயையும், ப்ரோக்கோலியையும் கழுவி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், நீளமாக நறுக்கிய வெங்காயம் இரண்டையும் தாளிக்கவும்.

3. வெங்காயம் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லிக் கீரை (1 பிடி மட்டும்) சேர்த்து தாளிக்கவும்.




1. இப்போது போன்லெஸ் சிக்கன், சோளம், சிகப்பு குடை மிளகாய், புரோக்கோலி ஆகியவற்றைக் கொட்டி சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.

2. பிறகு கறி மசாலாத்தூள், மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு சேர்த்து மீண்டும் 1 நிமிடம் வதக்கவும்.

3. இப்போது காய்கறிகள் மூழ்குமளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.




1. நன்கு கொதித்து வரும்போது உடைத்த சேமியா (spaghetti) சேர்த்து கலக்கிவிட்டு, திறந்து வைத்தே வேக வைக்கவும். (மூடி போடக்கூடாது)

2. சேமியா வெந்ததும் தேங்காய்ப் பால், தேங்காய்ப் பவுடர், மீதியுள்ள மல்லிக்கீரை சேர்த்து கிளறி, 2 நிமிடங்கள் கழித்து இறக்க‌வும்.




சுவையான, சத்து நிறைந்த குஜராத்தி கஞ்சி ரெடி! இந்தக் கஞ்சி அரிசி கஞ்சிபோல் இல்லாமல், சூப் கலந்ததுபோல் இருக்கும். முறையாக பரிமாறும்போது அந்தக் கலவை திக்கானதுபோல் ஆகிவிடும்.

பரிமாறும் முறை:


1. ஒரு பவுலில் இந்தக் கஞ்சியை ஊற்றிக் கொண்டு, பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் (தேவைக்கு) தூவி, அதன் மேல் ஒரு துண்டு லெமன் பிழியவும்.

2. அதற்கு மேல், பொரித்த சமோசா தாளில் உடைத்து வைத்திருக்கும் சிப்ஸை பரவலாக தூவவும்.

3. அப்படியே ஒவ்வொரு பகுதியாக கலக்கிவிட்டு சாப்பிடவும். சிப்ஸும், வெங்காயமும் காலியானால் மீண்டும் தூவிக்கொண்டு சாப்பிடலாம் :)

குறிப்பு: 

1. காரத்தின் தேவைக்கேற்ப பச்சை மிளகாயைக் கூட்டியோ/குறைத்தோ கொள்ளலாம்.

2. இரவு நேர உணவாக தயார் செய்யவும் இது ஏற்றது.


16 comments:

  1. கலர் ஃபுல்லாகவும் வித்த்யாசமாகவும் உள்ளது.கண்டிப்பாக சுவைக்கும் பஞ்சம் இருக்காது.அவசியம் சமைத்துப்பார்க்கிறேன் அஸ்மா.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ரிச்சான கஞ்சி....

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    வித்த்யாசமான கஞ்சி.

    ReplyDelete
  4. வாவ்...அழகாக தெளிவாக எழுதி இருக்கின்றிங்க..

    ரொம்ப ஹெல்தியான கஞ்சி...

    ReplyDelete
  5. அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ் )

    இதை வீட்டில காட்டினா சப்பாத்திக்கு , இட்லிக்கு குழம்பா ஆக்கிடுவாங்கபோலிருக்கே .அவ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  6. @ ஸாதிகா...

    //கலர் ஃபுல்லாகவும் வித்த்யாசமாகவும் உள்ளது.கண்டிப்பாக சுவைக்கும் பஞ்சம் இருக்காது//

    நிச்சயமா ;))

    //அவசியம் சமைத்துப்பார்க்கிறேன் அஸ்மா//

    இன்ஷா அல்லாஹ் செய்து பாருங்க! நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  7. @ ஆமினா...

    வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //ரிச்சான கஞ்சி....//

    நன்றி ஆமினா :) ட்ரை பண்ணிப் பாருங்க.

    ReplyDelete
  8. @ ஆயிஷா அபுல்...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //வித்த்யாசமான கஞ்சி//

    நன்றி ஆயிஷா :)

    ReplyDelete
  9. @ GEETHA ACHAL...

    //வாவ்...அழகாக தெளிவாக எழுதி இருக்கின்றிங்க..

    ரொம்ப ஹெல்தியான கஞ்சி...//

    நன்றி கீதாச்சல் :)

    ReplyDelete
  10. @ ஜெய்லானி...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //இதை வீட்டில காட்டினா சப்பாத்திக்கு , இட்லிக்கு குழம்பா ஆக்கிடுவாங்கபோலிருக்கே .அவ்வ்வ்வ் :‍))//

    சப்பாத்தி, இட்லிக்கு குழம்பாவா..? சகிக்காது போங்க :-))

    ReplyDelete
  11. paarthal pasi theeruma? salam..!

    ReplyDelete
  12. அருமையான சத்தான கஞ்சி
    எல்லா பொருட்களையும் வாங்கும் போது செய்து பார்க்க்கிறேன்.

    ReplyDelete
  13. @ சக்தி...

    //paarthal pasi theeruma? salam..!//

    சலாம் :) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  14. @ Jaleela Kamal...

    //அருமையான சத்தான கஞ்சி
    எல்லா பொருட்களையும் வாங்கும் போது செய்து பார்க்க்கிறேன்//

    நன்றி ஜலீலாக்கா. செய்து பார்த்து சொல்லுங்க.

    ReplyDelete
  15. அருமையான சத்தான கஞ்சி Jazakkallahu Khair

    ReplyDelete
  16. அருமையான சத்தான கஞ்சி, நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை