ரமலானில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நேரங்களில் சாப்பிடக்கூடிய உணவுகளில் முக்கியமான இடத்தில் உள்ளது "கஞ்சி"தான்! பெரும்பாலான நாடுகளில் அவரவர் உணவு வழக்கத்திற்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு கஞ்சி வகையை இஃப்தாருக்கென தயார் செய்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அதிகாலைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் ஒரு மிடரு தண்ணீர்கூட அருந்தாமல் சூரியன் மறையும்வரை இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்துவிட்டு, இறைவன் அனுமதித்த நேரமான சூரியன் மறைந்தவுடனே நோன்பை முடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறோம். அப்போது சுவையறியும் நாவில் ஆரம்பித்து, உணவுக் குழாய், வயிறு என அத்தனையும் நீண்ட நேர ஓய்வில் இருப்பதால் எளிதாக செரிமானம் ஆகக்கூடியதும், சுலபமாக தயாரிக்கக்கூடியதும், முடிந்தவரை சத்துக்கள் அதிகம் நிறைந்ததும், கூடவே சுவையானதுமான :) உணவை நாம் எடுத்துக் கொள்வது அன்றைய பொழுதின் முதல் வேலை உணவான இஃப்தாரில் இதமானதாக இருக்கும்; ஆரோக்கியத்திற்கும் நல்லது!
தேவையான பொருட்கள்:
லிஸ்ட் 1:-
கொண்டைக் கடலை (ஊறியது) - 3 பிடி (சுமார் 100~125 கிராம்)
மக்ரோனி (கோதுமை சைஸ்) - 3 பிடி (சுமார் 75~100 கிராம்)
தக்காளி கூழ் - 2 டேபிள் ஸ்பூன்
ஹரிஸா (மிளகாய் + பூண்டு மிக்ஸ்) பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் ஸ்டோக் - 1 க்யூப்
ஃபுல் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
லிஸ்ட் 2:-
செலரி - 1 சிறிய தண்டு (சுமார் 250 கிராம்)
தக்காளி - 2 (சுமார் 150 கிராம்)
வெங்காயம் - 2
சிகப்பு குடமிளகாய் - 1 (நடுத்தரமானது)
கேரட் - 1 (நடுத்தரமானது)
பூண்டு - 2 பல்
மல்லிக் கீரை - 1 கொத்து
புதினா - 1 தழை
லிஸ்ட் 3:-
(எலும்புடன் கூடிய) மட்டன் - 200 கிராம்
(கொத்திய) மட்டன் கறி - (100 + 150) 250 கிராம்
வெள்ளை மிளகுத் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு மிளகுத் தூள் - ½ டேபிள்ஸ்பூன்
சிக்கன் ஸ்டோக் தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ½ டீஸ்பூன்
உப்பு - ¼ டீஸ்பூன்
பப்ரிகா (Paprika) தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
1. முதலில் வெங்காயத்தை கேரட் துருவலில் (உள்ள பெரிய சைஸ் ப்ளேடில்) துருவிக் கொள்ளவும்.
2. கேரட், தக்காளி, குடமிளகாய், பூண்டு, மல்லி, புதினா அனைத்தையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். செலரியை சுத்தம் செய்து இலைகளை நீக்கி வைக்கவும். (செலரி இலை கொழுந்தாக இருந்தால் அதையும் பொடிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.)
3. துருவிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியில் உள்ள (எக்ஸ்ட்ரா) சாறைப் பிழிந்து தனியாக வைக்கவும்.
1. குக்கரில் எண்ணெய் விட்டு (1 இன்ச் அளவில் வெட்டிய, எலும்புடன் கூடிய) மட்டன் துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் வதக்கி,
2. 100 கிராம் கொத்திய கறியையும் அதனுடன் சேர்த்து வதக்கவும்.
1. நறுக்கிய பூண்டு மற்றும் புதினாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
2. செலரியைப் பொடிதாக நறுக்கி அத்துடன் துருவிய வெங்காயத்தையும் சேர்த்து 2~3 நிமிடம் வதக்கவும்.
3. நறுக்கிய தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
4. பப்ரிகா தூள், சிக்கன் க்யூப், வெள்ளை & கறுப்பு மிளகுத் தூள் வகைகள், ஹரிஸா, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
1. நறுக்கி வைத்துள்ள கேரட், குடமிளகாய், மல்லிக் கீரை சேர்த்து 2~3 நிமிடம் வதக்கவும்.
2. தனியாக எடுத்து வைத்த தக்காளி & வெங்காய சாற்றினை இப்போது சேர்க்கவும்.
3. சுமார் 1¼ ~ 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கர் வெய்ட் போட்டு 4, 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
1. கொத்திய மட்டன் கறியில் மீதியுள்ள 150 கிராமில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிக்கன் ஸ்டோக் தூள், உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக (கோலி அளவில்) உருட்டி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் மக்ரோனியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் எடுத்து வடித்து வைக்கவும்.
1. நான்கைந்து விசில் முடிந்த பிறகு ஊறிய கொண்டைக் கடலையை சேர்க்கவும்.
2 & 3. ஃபுல் க்ரீம் & தக்காளி கூழ் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. [முக்கால் வேக்காட்டில்] வேகவைத்த மக்ரோனியைப் போட்டு ஒன்றோடொன்று ஒட்டாமல் கலக்கி விடவும்.
1. இப்போது உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை மெதுவாக போடவும்.
2. ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, கறி உருண்டை வெந்தவுடன் இறக்கவும்.
வித்தியாசமான வாசனைக் கொண்ட, சுவையான ஃபெரீக் ரெடி!
"ஃபெரீக்" என்று சொல்லப்படும் இந்த வகை கஞ்சி 'அல்ஜீரியன்' மக்களின் பாரம்பரை உணவுகளில் ஒன்று. நாம் ஒரே வகையான கஞ்சியை தொடர்ந்து சாப்பிடுவதைவிட சற்று மாற்றமான வகைகளிலும் கஞ்சி தயார் செய்துக் கொண்டால் ரமலானில் பலவகை உணவுகளைக் குறைத்துக் கொள்ளும் நமக்கு, எல்லாவிதமான சத்துக்களும் கஞ்சி மூலமே பெரும்பாலும் கிடைத்துவிடும். இந்த முறையிலும் தயார் செய்து பாருங்கள்.
இந்த குறிப்பு Ramadan Friendly Recipes Event க்கும்
joy from fasting to feasting-v event க்கும் அனுப்பப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு & பிற்ச்சேர்க்கை:-
இந்த அரேபியன் கஞ்சி தென்னிந்திய நோன்பு கஞ்சியைவிட செய்வதற்கு சுலபமானதும், குறைந்த நேரத்தில் செய்யக் கூடியதுமாகும். விளக்கப் படங்களுடன் கூடிய குறிப்பு தெளிவாக புரியவேண்டும் என்பதால் மேலே அதிக ஸ்டெப்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பின்னூட்டத்தில் தோழிகள் சொன்னதுபோல் இதை தயாரிக்க வேலையோ, நேரமோ அதிகமாகாது. காய்கறிகள் நறுக்கி தயார் செய்து வைக்க 15 ~ 20 நிமிடங்களும், வேக வைத்து எடுக்க அதேபோல் 15 ~ 20 நிமிடங்களும் மட்டுமே ஆகும். இன்னும் குறைவான நேரத்தில் செய்ய சிம்பிள் முறையை கீழே படங்கள் இல்லாமல் கொடுத்துள்ளேன். இப்போ தைரியமா களத்தில் இறங்கலாம் :-)
மிக சுலபமான முறையில் செய்ய:
1. முதலில் வெங்காயத்தை கேரட் துருவலில் (உள்ள பெரிய சைஸ் ப்ளேடில்) துருவிக் கொள்ளவும். கேரட், தக்காளி, குடமிளகாய், செலரி, பூண்டு, மல்லி, புதினா அனைத்தையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய் விட்டு மட்டன் துண்டுகளையும், (100 கிராம்) கொத்திய கறியையும் போட்டு அத்துடன் நறுக்கிய வைத்துள்ள காய்கறிகள், ஊறிய கொண்டைக் கடலை, துருவிய வெங்காயம் மற்றும் சிக்கன் க்யூப், தூள் வகைகள், ஹரிஸா, ஃபுல் க்ரீம், தக்காளி கூழ், உப்பு அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, சுமார் 1¼ ~ 1½ லிட்டர் தண்ணீரையும் சேர்த்து குக்கர் வெய்ட் போட்டு 4, 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
3. (நான்கைந்து விசில் வருவதற்குள்) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் மக்ரோனியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் எடுத்து வடித்து வைக்கவும். (தண்ணீர் கொதி வந்து மக்ரோனி வேகும் நேரத்தில்) மீதியுள்ள 150 கிராம் கொத்திய மட்டன் கறியில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிக்கன் ஸ்டோக் தூள், உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக (கோலி அளவில்) உருட்டி வைக்கவும்.
4. விசில் வந்து முடிந்த பிறகு [முக்கால் வேக்காட்டில்] வேகவைத்த மக்ரோனியையும் உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளையும் போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இதற்கு அதிகபட்சம் ½ மணி நேரம் மட்டுமே ஆகும்.
Very Good... Nutritious Healthy and Tasty recipe.
ReplyDelete@ Uday
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//4. ரெட் பெப்பர் தூள், சிக்கன் க்யூப், வெள்ளை & கறுப்பு மிளகுத் தூள் வகைகள், ஹரிஸா, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.//
ReplyDeleteஆத்தி! செம காரமா இருக்கும் போல :-)
எக்கசக்க வேலையா இருக்கே அஸ்மா! வீட்டுக்கு யாராவது வந்தா அப்ப செய்யலாம் (நான் இல்ல... அவங்களதான் செய்ய சொல்லணும் அவ்வ்வ்வ்வ்வ்)
//ஆத்தி! செம காரமா இருக்கும் போல :)//
Deleteஸாரி ஆமினா! பப்ரிகா தூளுக்கு, ரெட் பெப்பர்னு கொடுத்துட்டேன் :) திருத்திவிட்டேன், தேங்க்ஸ்! அரபிகளுக்கு அதிக காரம் பிடிக்காதுபா. சோ... இந்த ஃபெரீக் காரமில்லாமல் குழந்தைகள்கூட சாப்பிடுமளவுதான் இருக்கும் :)
//எக்கசக்க வேலையா இருக்கே அஸ்மா!//
இல்லபா. பிற்ச்சேர்க்கையைக் கொஞ்சம் பாருங்க :)
//வீட்டுக்கு யாராவது வந்தா அப்ப செய்யலாம் (நான் இல்ல... அவங்களதான் செய்ய சொல்லணும் அவ்வ்வ்வ்வ்வ்)//
நான் வந்தா செய்து தர்றேன் இன்ஷா அல்லாஹ். ஏன்னா இது ரொம்ப ஈசியா இருக்கும், அதனாலதான் ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமி!
பெரிய வேலையாக இருந்தாலும் பார்த்தாலே சுவை அள்ளுதே!
ReplyDelete//பெரிய வேலையாக இருந்தாலும் பார்த்தாலே சுவை அள்ளுதே!//
Deleteரொம்ப சிம்பிள் வேலைதான் ஸாதிகா அக்கா. விளக்கமாக இருக்கணுமே என ஸ்டெப்ஸ் அதிகமாக கொடுத்தேன். உங்கள் எல்லோருடைய கமெண்ட்ஸ் பார்த்ததும் பிற்ச்சேர்க்கையில் விபரம் கொடுத்துள்ளேன் :-) இது வித்தியாசமான சத்துக்களோடு உண்மையில் ரொம்ப டேஸ்ட்டிதான் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா!
அக்கா புதுவகையான கஞ்சி சூப்பர்.. ஆனால் ரொம்ப பெரிய வேலை போல் இருக்கு. நீங்க ரொம்ப பொறுமையாக செய்திருக்கிங்க.. மாஷா அல்லாஹ்
ReplyDelete//அக்கா புதுவகையான கஞ்சி சூப்பர்..//
Delete:):)
//ஆனால் ரொம்ப பெரிய வேலை போல் இருக்கு. நீங்க ரொம்ப பொறுமையாக செய்திருக்கிங்க.. மாஷா அல்லாஹ்//
அட... நீங்களுமா? :-) பெரிய வேலைலாம் இல்ல ஃபாயிஜா, சிம்பிள்தான். 'லிஸ்ட் 2' ல் சொல்லப்பட்டுள்ள காய்கறிகளை வெட்டுவதும், அடுப்பில் ஏற்றி இறக்குவதும் மட்டுமே வேலை :) மற்ற எல்லாமே ரெடிமேட் பொருட்கள்தானேபா? பிற்ச்சேர்க்கையும் பாருங்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபாயிஜா!
சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளுங்கள்.
ReplyDelete//சகோ... எனது பிளாக்கிற்கு வந்து விருதை ஏற்று கொள்ளுங்கள்//
Deleteவிருதுக்கு மிக்க நன்றி சகோதரி ராதா :) இதோ வந்து பெற்றுக் கொள்கிறேன். கூடவே செக் அல்லது கவர் ஏதும் உண்டா? ;)))