ஸ்டார் ஹோட்டல்கள் மற்றும் விமான பயணங்களில் பரிமாறப்படும் இந்த ஸ்பெஷல் டெஸர்ட், கடைகளில் வாங்கும்போது சில சமயங்களில் ஹலால் அல்லாத/உண்ணத் தகாத சில பொருட்கள் கலந்திருப்பதால் இதை வீட்டிலேயே செய்துக் கொள்ளும்போது, மன திருப்தியுடன் சுகாதாரமும் கிடைக்கும் :) சுவையிலும் சற்றும் குறையாது! ட்ரை பண்ணிப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
முட்டை - 3
ஐஸிங் சுகர் - 120 கிராம்
உப்பு - 1 பின்ச்
மஸ்கார்போன் சீஸ்/Mascarpone Cheese - 250 கிராம்
வனிலா சுகர் - 1 பாக்கெட்
ஸ்பாஞ்ச் ஃபிங்கர் பிஸ்கட் [Sponge Finger Biscuits (or) Lady's Finger Biscuits] - 20
காஃபி பவுடர் - 6 டீஸ்பூன்
சீனி - 5 டீஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
கறுப்பு சாக்லேட் பார் - 1
கோகோ - மில்க் (மிக்ஸட்) பவுடர் - தேவைக்கு
செய்முறை:-
ஸ்டெப் 1 |
முதலில் முட்டையின் மஞ்சள் கருவை (கலங்காமல்) தனியாக பிரித்து வைக்கவும்.
ஸ்டெப் 2 |
1) வெள்ளைக் கருவில் 1 பின்ச் உப்பு சேர்த்து கலக்காமல்,
ஸ்டெப் 3-1 |
தனியாக பிரித்த மஞ்சள் கருவுடன் இப்போது ஐஸிங் சுகர் சேர்க்கவும்.
ஸ்டெப் 3-2 |
எக் பீட்டரால் முதலில் ஸ்லோ ஸ்பீடில் கலக்கவும். பிறகு நார்மல் ஸ்பீட் வைத்து நன்கு கலக்கவும்.
ஸ்டெப் 4-1 |
2) இப்போது மஸ்கார்போன் சீஸை சேர்க்கவும்.
ஸ்டெப் 4-2 |
சீஸும் மஞ்சள் கரு கலவையும் நன்கு சேரும்படி கலக்கவும். கட்டிகள் இல்லாமல் க்ரீம் போல் ஒன்றுசேர்க்கவேண்டும்.
ஸ்டெப் 5-1 |
இப்போது ஃப்ரிஜ்ஜில் வைத்த வெள்ளைக் கருவை பீட்டரால் ஹை ஸ்பீடில் கலக்கவும்.
சுமார் 8-10 நிமிடங்கள் இடைவிடாமல் கலக்கிய பிறகு ஸ்நோ போன்று ஆகிவிடும். (பார்க்க: 2 வது படம்)
அந்த பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தாலும் வெள்ளைக் கரு கீழே விழாது. அதுதான் சரியான பதம். (பார்க்க: 3 வது படம்)
ஸ்டெப் 5-2 |
இப்போது அந்த வெள்ளைக் கருவை எடுத்து ஏற்கனவே கலக்கி வைத்துள்ள (ஸ்டெப் 4-2) கலவையுடன் போட்டு, வெள்ளைக் கருவின் மேல் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி ஊற்றி மெதுவாக கலக்கவும். (வேகமாக கலக்கக் கூடாது.) முழுவதும் கலக்கிய பிறகு மீண்டும் க்ரீம் பதத்தில் (கட்டியில்லாமல்) இருக்கவேண்டும்.
ஸ்டெப் 6-1 |
1) & 2) சற்று நீளமான கப்பில் காஃபி தூள், சீனியுடன் (அளந்து வைத்துள்ள) தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டுடன் ஊற்றி, நன்கு கரையும்வரை கலக்கி வைத்துக் கொள்ளவும்.
3) கலக்கிய காஃபியில் ஸ்பாஞ்ச் ஃபிங்கர் பிஸ்கட்டினை 2 செகண்ட்கள் மட்டும் நனைக்கவும்.
4) மறுபக்கம் புரட்டி அதேபோல் 1 செகண்ட் நனைக்கவும். (அதிக நேரம் நனைத்தால் பிஸ்கட் ஊறி, உடைந்துவிடும்.)
ஸ்டெப் 6-2 |
1) & 2) 10 பிஸ்கட்கள் கொள்ளளவு கொண்ட ஒரு பாக்ஸில், ஒவ்வொன்றாக நனைத்த பிஸ்கட்களை அடுக்கவும்.
3) முதல் அடுக்கு நிறைந்தவுடன் கலக்கி வைத்துள்ள க்ரீமில் பாதியை பரவலாக ஊற்றவும்.
4) முழுவதும் ஊற்றிய பிறகு (இடுக்குகளில் க்ரீம் செல்வதற்காக) பாக்ஸை தூக்கி மெதுவாக தட்டவும்.
ஸ்டெப் 6-3 |
2) & 3) இப்போது (ஸ்டெப் 6-2 வில் செய்து காட்டியதுபோல்) ஸ்பாஞ்ச் ஃபிங்கர் பிஸ்கட்களை மீண்டும் காஃபியில் நனைத்து, மெதுவாக அடுக்கி, க்ரீம் கலவையை ஊற்றவும்.
4) இடுக்குகளில் க்ரீம் செல்வதற்காக பாக்ஸை தூக்கி மெதுவாக தட்டும்போது, சிலசமயம் (படத்தில் குறியிட்டு காட்டியுள்ள இடங்களைப்போல்) சிறிய காற்று குமிழ்கள் விழும். அதுபோன்ற இடங்களில் க்ரீமை கூடுதலாக ஊற்றவும்.
ஸ்டெப் 6-4 |
ஸ்டெப் 7 |
2) 8 மணி நேரத்திற்கு பிறகு கத்தியில் கொஞ்சமாக தண்ணீர் தடவிக் கொண்டு, சதுர துண்டுகளாக வெட்டவும்.
3) விருந்தாளிகளுக்கு பரிமாறும்போது சிறிது சாக்லேட் பவுடரை விரும்பும் வடிவத்தில் தட்டையில் தூவிக் கொண்டு,
4) வெட்டிய துண்டுகளை வைத்து, அதன் மேல் சீவி வைத்துள்ள சாக்லேட் சீவல்களைத் தூவி பரிமாறவும்.
அருமையான சுவையும், இதமான மணமும் கொண்ட "திரமிஸு" உங்கள் இல்லங்களிலேயே ரெடி! விருந்தாளிகளுக்கும் செய்துக் கொடுத்து அசத்தலாம் :)
aamaa....antha "heart" shape eppadi seyyirathunnu sollalaikkaa??????
ReplyDeletethank u very much kkaa :)
:)
ramadan busyilum engalukkaaga intha recipe.......kurippaa enakku rombbbbba pidicha recipe seythu thanthathukkaaga romba romba romba romba romba thanks kka..... eid kku Black forest cake pottudareengalaa.......aww... :))
திரமிசு விளக்கபடங்களுடன் மிக அருமை அஸ்மா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,செய்முறையும்,விளக்கமும்,படங்களும் அருமை அவசியம் செய்து பார்க்கிரேன். muhsi.
ReplyDeletevery nice
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...