ஒரு ஹதீஸை ஸஹீஹ் - சரியானது என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து நிபந்தனைகள் இருக்கவேண்டும்:
1 . அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்கவேண்டும் – اتصال السند
2 . அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கவேண்டும் – عدالة الرواة
3 . அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்கவேண்டும். (நூலில் ஹதீஸை எழுதிவைத்தவர் என்றால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்) – ضبط الرواة
4 . குறிப்பிட்ட செய்தி, மற்ற மிக பலமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருக்கக்கூடாது – عدم الشذوذ
5 . வேறு நுணுக்கமான குறைபாடு இருக்கக்கூடாது – عدم العلة
ஹஸன் தர ஹதீஸ்கள்
ஆரம்பக்கால ஹதீஸ்கலை அறிஞர்கள் ஹதீஸ்களை இருவகையாக மட்டுமே குறிப்பிடுவர்.
1 . ஸஹீஹ் - சரியானது (மக்பூல் - ஏற்கத்தக்க ஹதீஸ்)
2 . ளயீஃப் - பலவீனமானது (மர்தூத் - ஏற்கத்தகாத ஹதீஸ்)
இதில் பலவீனமான ஹதீஸ் இரு வகை:
1 . சில காரணங்களால் அந்த பலவீனம் நீங்கிவிடும். எனவே இந்த வகை செய்திகளை ஏற்று அமல் செய்யலாம்.
2 . எந்த நிலையிலும் பலவீனம் நீங்காத செய்திகள். இவற்றை ஏற்று அமல் செய்யக்கூடாது.
