ரமலானே வருக!

புனித ரமலானே வருக!
குர்ஆனை இறக்குவதற்கு
தேர்ந்தெடுத்தான் இறைவன்
உந்தன் நாட்களை!
அதனாலல்லவோ நீ
புனிதமும் கண்ணியமும்
ஒருங்கே பெற்றாய்...?

பக்கத்தில் நீ நெருங்குவதால்
பக்தி பரவேசத்துடன் இப்போதே
ஆயத்தமாகிறோம் நாங்கள்...
அமல்களோடு உனை வரவேற்க!
முத்தான உன் முப்பத்து நாட்களையும்
முறையாக முழுமையாக எங்களுக்கு
நிறைவேற்ற வேண்டுகிறோம் இறைவனை!

வீணுக்கோ விளையாட்டுக்கோ
விளைத்திடவில்லை இறைவன் எங்களை!
வெறுமனே எதையும் தராமல்...
வீசியெறிந்திடவுமில்லை இவ்வையகத்தில்!
எண்ண எண்ணக் குறையாமல் ‍- அவன்
அள்ளிக் கொடுத்த அருட்கொடைகளில்
ஒன்றல்லவா நீயும் எங்களுக்கு...?

கத்ருடைய இரவினை - ‍இறைவனின்
கருணையால் பெற்றிட - ‍உன்
கடைசிப்பத்தின் இரவுகளில்...
கண்விழித்து அமல் செய்யவே
அன்பளிப்பாக்குகிறான் இறைவன்
ஆயிரம் மாதங்களுக்குமேல் நன்மைகளை!
அர்ரஹ்மான் அவனல்லவோ...!

நாவைப் பேணாமல் வரும்
பாவம் முதற்கொண்டு...
நரகில் தள்ளும் தீமைகளனைத்தையும்
புறந்தள்ளி நாங்கள் - சுவனத்தின்
நல்லறங்கள் செய்யும்...
நற்பயிற்சி நாட்களாக உன் மாதத்தில்
பதினோரு மாதங்களுக்கும் எங்களை
பண்படுத்தும் விதமாக...

புனித ரமலானே நீ...
வருக! வருகவே....!

8 comments

உங்களோடு சேர்ந்து நாங்களும் வரவேற்கின்றோம் .

சந்தோஷம், இளம் தூயவன்! பதிவுக்கு நன்றி.

அருமையாக எழுதிருக்கீங்க.பாராட்டுக்கள்.மாண்புடன் நோன்பு நாட்களை கழிக்க வாழ்த்துக்கள்.

ரமலான் மாதம் ரஹ்மத்துகள் நிறைந்த மாதம்.. இறைவன் நம் எல்லோருக்கும் ரஹ்மத்தும் பரக்கத்தும் தந்தருள்வானாக.. ஆமீன்.

ரமலானே இனிதே வரவேற்போம்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆசியாக்கா!

உங்கள் வருகைக்கு நன்றி, சகோதரர் ஸ்டார்ஜன்!

//இறைவன் நம் எல்லோருக்கும் ரஹ்மத்தும் பரக்கத்தும் தந்தருள்வானாக// ஆமீன்.

//நாவைப் பேணாமல் வரும்
பாவம் முதற்கொண்டு...
நரகில் தள்ளும் தீமைகளனைத்தையும்
புறந்தள்ளி நாங்கள் - சுவனத்தின்
நல்லறங்கள் செய்யும்...
நற்பயிற்சி நாட்களாக உன் மாதத்தில்
பதினோரு மாதங்களுக்கும் எங்களை
பண்படுத்தும் விதமாக...//

ஆமீன்.

வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி, ராஜவம்சம்!

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!
EmoticonEmoticon

.