முள்ளு முறுக்கு

தேவையான பொருட்கள்:


முறுக்கு மாவு - 400 மில்லி
அரிசி மாவு - 1/2 கிலோ
தேங்காய்ப் பால் - 150 மில்லி
நெய் -  3 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்
சீனி - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்குசெய்முறை:


முறுக்கு மாவையும் அரிசி மாவையும் ஒன்றாக கலந்துக் கொண்டு, அதில் நெய் சேர்த்து, சீனி மற்றும் உப்பை தேங்காய்ப் பாலில் கலக்கி அதையும் சேர்க்கவும்.நன்கு கலந்துவிட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத‌த்தில் பிசைந்து வைக்கவும்.முறுக்கு உரலில் ஸ்டார் அச்சில் மாவைப் போட்டு, ஒரு தட்டில் முறுக்கைப் பிழிந்துக் கொள்ளவும்.(இப்படி தட்டில் பிழியும்போது முறுக்கு ஒரே வடிவத்தில் அழகாக இருக்கும்)எண்ணெய் சூடானவுடன் தட்டில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை மெதுவாக எண்ணெயில் சரித்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்க‌வும்.
சரியான பதத்தில் முறுகியவுடன் எண்ணெய் வடிய‌விட்டு எடுக்கவும். கடினமில்லாத, மொறு மொறுப்பான முள்ளு முறுக்கு தயார்.

குறிப்பு: -

1. முறுக்கு மாவை பல முறைகளில் தயார் பண்ணலாம். இதில் பயன்படுத்தியுள்ள முறுக்கு மாவு தயாரிப்பை இங்கே காணலாம்.


2. தேங்காய்ப் பால் திக்காக இருக்கவேண்டும்.


3. மாவை பிசைந்து வைத்து நீண்ட நேரம் பிழியாமல் வைத்திருந்தால் மாவு இறுக்கமாகி, பிழிய கஷ்டமாகிவிடும். அதனால் உடனே பிழிவது நல்லது.


4. மாவு டின்கள், பிஸ்கட் டின்கள் அல்லது சாக்லேட் டின்கள் போன்றவற்றின் உள்ளே, மேல் பக்கம் கவர் பண்ணியிருக்கும் அலுமினிய ஷீட்கள் முறுக்கு பிழிவதற்கு பயன்படுத்த சுலபமாக இருக்கும்.16 comments

Wow! super murukku. Please give me some??

@ vanathy...

//Wow! super murukku. Please give me some??//

உங்களுக்கு இல்லாததா வானதி...? கொஞ்சமென்ன, இதோ தட்டில் உள்ளதை அப்படியே எடுத்துக்கோங்க :))

என்னப்பா எல்லோரும் திடீர் திடீர்னு இங்கிலிபீஷ்க்கு மாறுறீங்க...? தமிழ்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு..? :)

rompa nalla iukku asmaa.
oovvoru naalum open seythu eror aaki ippa thaan comment pooda muidnthuthu

/கருத்து சொல்வதாக இருந்தால், தாராளமா சொல்லலாம்!/சொல்லிடறேன்.:)

முறுக்கு சூப்பரா இருக்கு.
சீரகமும் போட்டிருக்கீங்களோ?? நெய்&தேங்காய்ப்பால் ஊற்றி செஞ்சதில்ல,தனியா முறுக்கு மாவு ரெசிப்பி தரேன்னு சொல்லிருக்கீங்க,சீக்கிரம் குடுங்க.

போன கமெண்ட் எழுதறப்ப கிட்டத்தட்ட எல்லா விண்டோவும் மூடிட்டு ஷட் டவுன் பண்ற நேரம் அஸ்மா அதனால்தான் ஆங்கிலத்தில் கமெண்ட். யார் யார் இஸ்லாத்தில வரணும்னு அல்லாஹ்தான் நாடறான். நான் அதுக்காக சொல்லலை. ரைஸ், லார புஷ் போன்றவர்கள் இஸ்லாத்தை பற்றி தரும் ஸ்டேட்மெண்ட்ஸை பார்த்ததுனால சொன்னேன்.

முறுக்கு மாவு பத்தி சீக்கிரம் எழுதுங்க. உடனே செஞ்சு சாப்பிடணும் போல இருக்கு :)

@ Jaleela Kamal...

//rompa nalla iukku asmaa.
oovvoru naalum open seythu eror aaki ippa thaan comment pooda muidnthuthu//

வாங்க ஜலீலாக்கா, இப்போ எரர் இல்லாம ஓபன் பண்ண‌ முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்! இனிமே தொடர்ந்து பாருங்க. நானும் யார் ப்ளாக்குக்கும் கொஞ்ச நாளா போக முடியல. இனிதான் ரவுண்ட் அடிக்கணும் :) உங்கள் கருத்துக்கு நன்றி ஜலீலாக்கா.

(நீங்களும் இன்று தங்கிலீஷா...? :) ரொம்ப பிசியோ?)

@ Mahi...

//கருத்து சொல்வதாக இருந்தால், தாராளமா சொல்லலாம்!/சொல்லிடறேன்.:)// சொன்னதுக்கு நன்றிங்கோ.... :))

//முறுக்கு சூப்பரா இருக்கு// மொறு மொறுப்பா இருந்ததா..? :))

ஆமா சீரகமும் போட்டிருக்கேன் மஹி!
//நெய்&தேங்காய்ப்பால் ஊற்றி செஞ்சதில்ல// அப்படியா..?

//தனியா முறுக்கு மாவு ரெசிப்பி தரேன்னு சொல்லிருக்கீங்க,சீக்கிரம் குடுங்க// ஆமாப்பா... இல்லாட்டி ரொம்ப நீளமா போகுது, அதனால்தான். வருகைக்கு நன்றி மஹி!

@ அன்னு...

//போன கமெண்ட் எழுதறப்ப கிட்டத்தட்ட எல்லா விண்டோவும் மூடிட்டு ஷட் டவுன் பண்ற நேரம் அஸ்மா அதனால்தான் ஆங்கிலத்தில் கமெண்ட்//

பரவாயில்ல அன்னு.. தமிழ்தான் கண்ணுக்கு பளிச்சுன்னு இருக்கு :) அதனால்தான் சொன்னேன்.

//யார் யார் இஸ்லாத்தில வரணும்னு அல்லாஹ்தான் நாடறான். நான் அதுக்காக சொல்லலை. ரைஸ், லார புஷ் போன்றவர்கள் இஸ்லாத்தை பற்றி தரும் ஸ்டேட்மெண்ட்ஸை பார்த்ததுனால சொன்னேன்//

அட, உங்க கமெண்ட்ல குறையொன்றுமில்லை, ரொம்ப‌ சரியாதாம்பா சொல்லியிருக்கீங்க... நிறைய எழுத நினைத்த என் கருத்தை, கமெண்ட்ஸ் பகுதியாக இருந்ததால் சுருக்கமா சொல்லிட்டேன், வேறொன்றுமில்லை :)அன்னு.

//முறுக்கு மாவு பத்தி சீக்கிரம் எழுதுங்க. உடனே செஞ்சு சாப்பிடணும் போல இருக்கு :)//

கண்டிப்பா சீக்கிரம் போடுறேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அன்னு!

முறுக்கு சூப்பர்.முறுக்கு மாவு பற்றி எழுதுங்க,அஸ்மா.நாங்களும் இவ்வளவு அழகாக செய்யணும்.வருமா?

@ asiya omar...

//முறுக்கு சூப்பர்.முறுக்கு மாவு பற்றி எழுதுங்க,அஸ்மா.நாங்களும் இவ்வளவு அழகாக செய்யணும்.வருமா?//

இன்ஷா அல்லாஹ் விரைவில் போடுகிறேன் ஆசியாக்கா! கண்டிப்பா அழகா வரும், நீங்கதான் புதுசு புதுசா செய்வீங்களே... அப்புறமா என்ன :)? செஞ்சு பாருங்க. வருகைக்கு நன்றி ஆசியாக்கா!

இப்பதான் கவனிக்கறேன், உங்க ஸ்டவ் வித்தியாசமா பள்ளமா இருக்கறதை, கேஸ் ஸ்டவ்வா இல்ல எலெக்ட்ரிக்கா?

@ அன்னு...

என்னுடையது கேஸூம் எலெக்ட்ரிக்கும் மிக்ஸ் அன்னு. அதாவது, மேலேயுள்ள 4 பர்னர்களும் கேஸ். கீழுள்ள ஓவன் முழுக்க எலெக்ட்ரிக். இப்படியிருந்தால் அதில் பல வசதிகள் இருக்கும் என்று அப்படிதான் தேடினேன், அல்ஹம்துலில்லாஹ் கிடைத்தது :)

வாவ்.. பார்த்த உடனே சாப்பிடணும்போல இருக்கே.. நல்லாருக்கு.

ரொம்ப நல்லாருக்கு முறுக்கு.. முறுக்கு மாவு எப்படி செய்யணும். கொஞ்சம் சொல்லித்தாங்க அஸ்மா.

@ Starjan ( ஸ்டார்ஜன் )...

//வாவ்.. பார்த்த உடனே சாப்பிடணும்போல இருக்கே.. நல்லாருக்கு//

சாப்பிடணும்போல இருந்தா சாப்பிட்டுடுங்கோ... :‍) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானா.

@ மின்மினி RS...

//ரொம்ப நல்லாருக்கு முறுக்கு.. முறுக்கு மாவு எப்படி செய்யணும். கொஞ்சம் சொல்லித்தாங்க அஸ்மா//

நல்லாருக்கா...? ரொம்ப தேங்ஸ் :) முறுக்கு மாவு நாளை மறுநாள் கண்டிப்பா போடுறேன் மின்மினி! வருகைக்கு நன்றி.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!
EmoticonEmoticon

.