"காக்கி" என்ற "ஷரன் ஃப்ரூட்"
நுங்கின் வழவழப்பும் சப்போட்டாவின் சுவையும் கலந்ததுபோல் இருக்கும், சத்துக்கள் நிறைந்த "காக்கி"(Kaki) பழத்தைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சத்துக்களையும் பற்றி பார்ப்போம்.
ஜப்பான், சீனா போன்ற நாடுகளை தாய்நாடாகக் கொண்ட இந்தப் பழத்தில் சுமார் 800 வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் "sharon fruit" என்றும் "Persimmon" என்றும் அழைக்கப்படுகிறது.
சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் "காக்கி"யில், நாட்டுத் தக்காளி வடிவம், சிம்லா ஆப்பிள் போன்ற வடிவம், உருளை வடிவம் என பல வடிவங்கள் உள்ளன. இவை -5°C முதல் -20°C வரை குளிரைத் தாங்கக்கூடியது. (கீழுள்ள படங்களைப் பார்க்கவும்.) இவ்வளவு கடுமையான குளிரிலும் கூட காக்கி பழம் பதமான நிலையில் பழுக்குமாம்!
இலையுதிர் காலங்களிலும், அதைத் தொடர்ந்து வரும் பனிக் காலங்களிலும் இலைகள் பழுத்து விழுந்த பிறகும் கூட, பழங்கள் மட்டும் கிளைகளில் பிடித்து நிற்பது கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளிக்கும்.
இதிலுள்ள 'Costata', 'Fuyu' மற்றும் 'Muscat' போன்ற வகைகள் மகரந்த சேர்க்கை எதுவுமில்லாமலேயே காய் - கனியாவது, இறைவன் இவ்வுலகில் கொட்டி வைத்திருக்கும் அற்புதங்களில் ஒன்றாகும்! இவை சற்று தாமதமாக பூத்தாலும், விளைச்சல் அதிகமாகக் கொடுக்கக் கூடியவை. பச்சை நிற மொட்டிலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கும் அதன் பூவையும், காயாகி, கனியாகும் அழகையும் பாருங்கள்!
இதன் வகைகளில் 'sharon fruit' தான் உலகெங்கிலும் அதிகமாக விளையக் கூடியதாக இருக்கிறது. இதில் சில வகைப் பழங்கள் நார்த்தன்மை உடையதும், தோலில் துவர்ப்புத் தன்மையும் கொண்டிருக்கும். அழுத்தினால் லேசாக அழுந்தும் நிலையில் , ஆனால் சற்று அழுத்தமான பதத்தில் பழுத்த பழம்தான் அப்படியே தோலுடன் வெட்டி சாப்பிடுவதற்கு ஏற்றதாகும். மிகவும் பழுத்து (தண்ணீர்ப்பை போன்ற நிலையில்) இருந்தால் தோலுடன் சாப்பிட முடியாது. (தோல் துவர்ப்பாகிவிடும்)
இவை பாதி காயவைத்த நிலையிலும், நன்றாக காய்ந்த பழங்களாக (dry fruit)வும் கூட விற்பனைக்கு வருகின்றன.
சத்துக்கள்:
'காக்கி'யில் பலவகையான மினரல்களும், வைட்டமின் C யும் நிறைந்துள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், கால்ஷியம், மக்னீஷியம், சோடியம் மற்றும் B1 & B2 போன்ற வைட்டமின்களும், ஃபோலிக் ஆசிட் (வைட்டமின் B9) போன்றவையும், சிறிய அளவில் இரும்புச் சத்தும் அடங்கியுள்ளன.
(படங்கள் இணையத்திலிருந்து)
கூடுதல் தகவல்கள்:
எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய இதன் மரம், 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை வளரக்கூடியது. அதிலும் சில வகை 15 மீட்டர் வரை வளரும். ஆனால் தோட்டத்தில் சிறிய அளவு இடமே இதற்கு போதுமானது. தோட்டத்தில் சிறிய ஒரு இடத்தில் பாத்தி கட்டியும் வளர்க்கலாம். தோட்டமே இல்லையென்றாலும் பால்கனி, மொட்டை மாடிகளில் கூட குறைந்த தண்ணீர் பாய்ச்சி, தகுந்த தொட்டிகளில் வளர்க்கலாம். தோட்டங்களில் வளர்ப்பவர்கள் முதல் வருடம் மட்டுமே கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வந்தால் போதுமானது. வருடம் முழுவதும் எல்லாக் காலங்களிலும் இதை பயிரிடலாம் என்றாலும், வசந்த காலமே பயிரிட ஏற்றதாகும். உறையும் நிலையிலுள்ள கடுமையான குளிர் காலங்களில் பயிரிடுவது நல்லதல்ல. ஆனால் மரம் தழைத்து வளர்ந்த பிறகு, அதிகமான விளைச்சல் தரக்கூடிய தகுந்த காலங்கள், இலையுதிர் மற்றும் பனிக்காலங்களாகும். அதாவது இந்த காலங்களில்தான் காக்கி பழத்தின் சீசனாகும். வீடுகளில் வளர்ப்பதற்கு எல்லோருக்கும் வசதிகள் இருக்காது என்றாலும், வளர்க்க வசதியுள்ளவர்களுக்கு இந்த தகவல்கள் நிச்சயம் உதவும்.
இந்த காக்கி பழத்தில் செய்யக்கூடிய சுவையான, சுலபமான மில்க் ஷேக் தயாரிப்பு முறையை இங்கே காணவும்.
வாவ்வ்வ்வ்வ்வ்வ்! ஷரன் ப்ரூட் பூப்பூத்து,காய்த்து,கனியாகும் படங்கள் எல்லாமே அழகா இருக்குன்னு சொன்னா போதாது! அருமையா இருக்குங்க அஸ்மா! இதெல்லாம் நீங்க எடுத்த படங்களா? நல்லா இருக்குங்க!
ReplyDeleteஒரு பழம் பற்றிய பதிவுதானே என்று அசுவாரசியமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன் அஸ்மாக்கா. ஆனால், பனியிலும் கூட காய்த்துக் குலுங்கும் இந்த அற்புதப் படைப்பு என அறிந்தபோது ஆச்சர்யம் தாளவில்லை!! நல்லவேலை மிஸ் பண்ணவில்லை இந்தப் பதிவை.
ReplyDelete@ மகி...
ReplyDelete//வாவ்வ்வ்வ்வ்வ்வ்! ஷரன் ப்ரூட் பூப்பூத்து,காய்த்து,கனியாகும் படங்கள் எல்லாமே அழகா இருக்குன்னு சொன்னா போதாது! அருமையா இருக்குங்க அஸ்மா! இதெல்லாம் நீங்க எடுத்த படங்களா? நல்லா இருக்குங்க!//
இயற்கையின் அழகை வர்ணித்துக் கொண்டே இருக்கலாம் மகி, இறைவனின் வல்லமை அப்படி!! ஃபோட்டோஸ் நான் எடுக்கலபா.. மேலே குறிப்பிட்டுள்ளேனே, நீங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன். எல்லாம் இணையத்திலிருந்து சுட்டதுதான் :) உங்களை மாதிரி ஃபோட்டோகிராஃபரா இன்னும் ஆகலபா.. :)
@ ஹுஸைனம்மா...
ReplyDelete//ஒரு பழம் பற்றிய பதிவுதானே என்று அசுவாரசியமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன் அஸ்மாக்கா. ஆனால், பனியிலும் கூட காய்த்துக் குலுங்கும் இந்த அற்புதப் படைப்பு என அறிந்தபோது ஆச்சர்யம் தாளவில்லை!! நல்லவேலை மிஸ் பண்ணவில்லை இந்தப் பதிவை//
மற்றவர்களும் உங்களைப்போல் அசுவாரசியமாக நினைத்துவிடுவார்கள் என்பதால், தலைப்பையே மாற்றிவிட்டேன், ஹுஸைனம்மா:) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிமா.
அறியாத தகவல்.அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அஸ்மா.
ReplyDeleteபழமும் அருமை,படமும் அருமை
ReplyDeleteநீங்கள் அதை சொன்ன விதம்
எல்லாவற்றையும் விட
அருமை.
வாழ்த்துக்கள்
@ ஸாதிகா...
ReplyDelete//அறியாத தகவல்.அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி அஸ்மா//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா!
@ abul bazar/அபுல் பசர்...
ReplyDelete//பழமும் அருமை,படமும் அருமை
நீங்கள் அதை சொன்ன விதம்
எல்லாவற்றையும் விட
அருமை.
வாழ்த்துக்கள்//
அப்படியா...! ரொம்ப நன்றி சகோ. ஆயிஷாவை விசாரித்து சலாம் சொல்லுங்கள்.
அருமையான தகவல். இந்த பழத்த போட்டோலையும் இப்ப தான் முதல் முதலா பாக்குறேன்
ReplyDeleteநல்லா இருக்குங்க உங்கள் விளக்கம், சீத்தாப்பழம்,கொய்யாப்பழம்,மாம்பழம்,வாழைப் பழத்தை கண்ட என் கண்கள் இந்த பழத்தை இப்பத்தான் பார்க்கின்றது.
ReplyDeleteவாழ்த்துக்கள் !
போட்டோ எடுத்ததுக்கு இல்லை,சுட்டதுக்கு
@ ஆமினா...
ReplyDelete//அருமையான தகவல். இந்த பழத்த போட்டோலையும் இப்ப தான் முதல் முதலா பாக்குறேன்//
இப்பதான் பார்க்கிறீங்களா ஆமினா? நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் வாங்கி சாப்பிட்டு பாருங்க. என்ட்ரி கொடுத்ததற்கு நன்றி ஆமினா :)
@ அந்நியன் 2...
ReplyDelete//நல்லா இருக்குங்க உங்கள் விளக்கம், சீத்தாப்பழம்,கொய்யாப்பழம்,மாம்பழம்,வாழைப் பழத்தை கண்ட என் கண்கள் இந்த பழத்தை இப்பத்தான் பார்க்கின்றது.
வாழ்த்துக்கள் !
போட்டோ எடுத்ததுக்கு இல்லை,சுட்டதுக்கு//
ஃபோட்டோவ சுடுவதுன்னா என்ன அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா..? சொல்ல வந்த விஷயத்தை நாம் நினைத்தபடி வரிசைப்படுத்த தளம் தளமா அலைந்து, ஃபோட்டோவ குறி தவறாம சுட்டு ... :) உங்களுக்கெல்லாம் 'காக்கி' கண்காட்சியே ஏற்பாடு செஞ்சிருக்கோம்.. கஷ்டத்த புரிஞ்சிக்கிட்டு வாழ்த்தியதற்கு ரொம்ப நன்றி சகோ :))
இது என்ன பழம்னே தெரியல.. முதல்முறையாக ஃபோட்டோல பார்க்கறேன்.. அனைத்துப் படங்களும்.. பழத்தைப் பற்றி நீங்க விளக்கியிருப்பதும் நல்லாயிருந்தது..
ReplyDelete@ பதிவுலகில் பாபு...
ReplyDelete//இது என்ன பழம்னே தெரியல.. முதல்முறையாக ஃபோட்டோல பார்க்கறேன்.. அனைத்துப் படங்களும்.. பழத்தைப் பற்றி நீங்க விளக்கியிருப்பதும் நல்லாயிருந்தது..//
இந்தியாவில் குளிர்ப் பிரதேசங்களில் இவை விளைவதாக எங்கேயோ படித்தேன். ஒருவேளை ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கூட கிடைத்தாலும் கிடைக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
அஸ்மா...கடும்பனியிலும் காய்க்கும் பழங்களின் படங்கள் அருமை.... மாஷா அல்லாஹ்...
ReplyDeleteபடங்களைச் சுட நீங்கள் பட்ட பாடு வீண் போகவில்லை அஸ்மா...விளக்கமும் தலைப்பும் நன்றாக இருக்கிறது.
@ enrenrum16...
ReplyDelete//அஸ்மா...கடும்பனியிலும் காய்க்கும் பழங்களின் படங்கள் அருமை.... மாஷா அல்லாஹ்...
படங்களைச் சுட நீங்கள் பட்ட பாடு வீண் போகவில்லை அஸ்மா...விளக்கமும் தலைப்பும் நன்றாக இருக்கிறது//
:)) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி பானு.
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
ReplyDeletehttp://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
பெற்றுக்கொண்டேன் :) மிக்க நன்றி சகோ.
ReplyDelete-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்
ReplyDeleteகாக்கா பழம் அடிக்கடி வாங்கி சாப்பிடுவது தான்
ஆனால் சரியான பெய்ர் தெரியாததால் குறிப்பே போடல,
உங்கள் பதிவின் மூலம் ஷரன் ஃப்ரூட் என்று தெரிந்து கொண்டேன்.
@ Jaleela Kamal...
ReplyDelete//நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்//
சந்தோஷமாக பெற்றுக் கொண்டேன், நன்றி ஜலீலாக்கா!
//காக்கா பழம் அடிக்கடி வாங்கி சாப்பிடுவது தான்
ஆனால் சரியான பெய்ர் தெரியாததால் குறிப்பே போடல,
உங்கள் பதிவின் மூலம் ஷரன் ஃப்ரூட் என்று தெரிந்து கொண்டேன்//
அப்படியா... சந்தோஷம் ஜலீலாக்கா!