அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday, 2 February 2011

அவித்த முட்டை செய்வது எப்படி?! (எச்சரிக்கை!)

தேவையான பொருட்கள்:

முட்டை - 1
அலைபேசிகள் - 2

செய்முறை:

முதலில் இரண்டு அலைபேசிகளுக்கிடையே 65 நிமிடம் தொடர்பு ஏற்படுத்தவேண்டும். பிறகு...  

தொடர்ந்து வரும் செய்தியைப் பார்க்கவும்.

கீழே உள்ள படத்தில் காட்டியது போல இரண்டு அலைபேசிகளுக்கு டையே ஒரு இணைப்பு உருவாக்கப்பட்டது.தொடர்பு ஏற்படுத்தப்பட்டு 65 நிமிடங்கள் வைக்கப்பட்டது.

முதல் 15 நிமிடங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

25 நிமிடங்களுக்கும் பிறகு முட்டையில் சூடேற ஆரம்பித்தது.

45 நிமிடங்களுக்கு பிறகு முட்டை நன்றாக சூடாகிவிட்டது!

65நிமிடங்களுக்கு பிறகு வேக வைக்கப்பட்ட முட்டையாக மாறிவிட்டது!! 

 முடிவு & எச்சரிக்கை

அலைபேசிகளின் மூலம் ஏற்படும் கதிர்கள் முட்டையிலுள்ள புரதச்சத்தை மாற்றும் தன்மையுடையது. அப்படியானால் நீண்ட நேரம் அலைபேசியில் பேசுபவர்களின் மூளையிலுள்ள புரதச்சத்து என்ன ஆகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்!

.தயவு செய்து நீண்ட நேரம் அலைபேசியில் பேசுவதை தவிர்க்கவும்.        
     .இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கவும்.

டிஸ்கி: கிட்டத்தட்ட 9,10 மாதங்களுக்கு முன் மெயிலில் வந்த தகவல் இது. சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்றாலும் அறிந்திராத பலருக்கும் பயன்படவே இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

(வலையுகம் ப்ளாக்) சகோ. ஹைதர் அலி அவர்கள் இதன் பின்னூட்டத்தில் கொடுத்துள்ள பயனுள்ள தகவலும் இத்துடன் பிற்சேர்க்கையாக இணைக்கப்படுள்ளது. பார்க்கவும்.

"மத்திய நிபுணர் குழு:

இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.

செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்..." என பரிந்துரைத்துள்ளது.

மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.

மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.

அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.

மேலே உள்ளது
http://namnidur.blogspot.com/2011/02/blog-post_8363.html

இந்த லிங்கில் இருந்து எடுத்தது உங்களின் பதிவை உண்மைப்படுத்துகிறது."

18 comments:

 1. அஸ்மா,ஏதோ காமெடி போஸ்ட்டுன்னு நினைத்து வந்தேன். சீரியஸான மேட்டரா இருக்கு!
  ம்ஹும்,இதெல்லாம் சில பல வருஷம் முன்னால தெரிஞ்சிருக்கலாம்! என்னவருக்கு STD,ISD பில்லும் குறைந்திருக்கும். ;)

  BTW,உபயோகமான பதிவுங்க!

  ReplyDelete
 2. முட்டை அவியும் ஒகே. கூமுட்டைகள் !

  ReplyDelete
 3. This NOT a true scene but developed one. One more video also is circulated on the same concept (POP-CORN with the Mobile phones heat). Good on its message but fake on the show.

  ReplyDelete
 4. ஆ.... அவித்த முட்டையா? தலைப்பைப் பார்த்ததும் ஓடிவந்தேன், படிக்ககூட நேரமில்லை பின்பு வாறேன்..

  ReplyDelete
 5. ஸலாம் சகோ..அவித்த முட்டை செய்வதற்கான சமையல் குறிப்பு வழங்கியதற்கு பாராட்டுக்கள்..(just kidding)

  சகோ சில டவுட்கள்..
  ரெண்டு மொபைல் வைக்கும் போது தான இந்த பிரச்சனை..அதுவும் அத்துனை நெருக்கத்தில் இருக்கும் போது,...இதுவே அந்த மொபைலை சற்று தூரமாக வைத்தால்,இதே நிலைதானா...

  இல்லை ஒரே ஒரு மொபைலை வைத்தாலும் முட்டை அவிந்துவிடுமா?

  பொதுவாக நாம் இரண்டு தொடர்புடைய மொபைல்களை இத்துனை அருகாமையிம் நாம் பயன்படுத்துவதில்லைதானே,,,

  எனவே இது குறித்து அதிக அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பதே என்கருத்து,,,

  இது சும்மா மித் பஸ்டர்ஸ் உடைய கண்டுபிடிப்பாக இருக்கலாம்...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 6. @ Mahi...

  //அஸ்மா,ஏதோ காமெடி போஸ்ட்டுன்னு நினைத்து வந்தேன். சீரியஸான மேட்டரா இருக்கு//

  ஆமா மஹி, வந்த மெஸ்ஸேஜின் டைட்டில் மாற்றாம அப்படியே போட்டேன் :) ஒரு ஆபத்தான விஷயம் என்றால் முடிந்தவரை அதை பகிர்ந்துக் கொள்வதுதான் நல்லது என்றுதான் இந்த இடுகை.

  //BTW,உபயோகமான பதிவுங்க!// நன்றி மஹி.

  ReplyDelete
 7. @ இனியவன்...

  //முட்டை அவியும் ஒகே. கூமுட்டைகள் !//

  இந்த செய்தியே தவறு என்கிறீர்களா சகோ? சொன்னவர்கள் கூமுட்டைகள்..?! இப்படி சொல்வதின் காரணம் கொஞ்சம் சொல்லுங்களேன் சகோ! எல்லோரும் தெரிஞ்சிக்கலாமல்லவா?

  ReplyDelete
 8. @ vasan...

  //This NOT a true scene but developed one. One more video also is circulated on the same concept (POP-CORN with the Mobile phones heat)//

  ஓ.. அப்படியா? செல்ஃபோனிலிருந்து வெளியாகும் சூடு எப்படியெல்லாம் பாதிக்குதுன்னு அவங்க அவங்க கற்பனைக்கு தகுந்த மாதிரி கொடுக்குறாங்கன்னு நினைக்கிறேன்.

  //Good on its message but fake on the show//

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 9. @ athira...

  //தலைப்பைப் பார்த்ததும் ஓடிவந்தேன், படிக்ககூட நேரமில்லை பின்பு வாறேன்..//

  பொறுமையா வாங்க அதிரா!

  ReplyDelete
 10. @ RAZIN ABDUL RAHMAN...

  //சகோ சில டவுட்கள்..
  ரெண்டு மொபைல் வைக்கும் போது தான இந்த பிரச்சனை..அதுவும் அத்துனை நெருக்கத்தில் இருக்கும் போது,...இதுவே அந்த மொபைலை சற்று தூரமாக வைத்தால்,இதே நிலைதானா...இல்லை ஒரே ஒரு மொபைலை வைத்தாலும் முட்டை அவிந்துவிடுமா?//

  இதில் சொல்லப்பட்டுள்ளது செல்ஃபோனில் சூடு தாக்குவது பற்றிதான் சகோ. அது ஒரு மொபைலாக இருந்தாலும் சரிதான், ஒன் சைட் பாதிக்கப்படலாம். சற்று தூரமாக வைத்தால் சூட்டினால் வரும் பாதிப்பு அந்தளவுக்கு இருக்காதுதான். ஆனாலும் அதைப் பயன்படுத்தும்போது கதிர்வீச்சு கண்டிப்பாக தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் அத்தியாவசிய பொருளாகிவிட்ட செஃபோனை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை:( அதிகமான நேரங்கள் அதைப் பயன்படுத்துவதை அவாய்ட் பண்ணிக்கொள்வது நல்லது!

  //பொதுவாக நாம் இரண்டு தொடர்புடைய மொபைல்களை இத்துனை அருகாமையிம் நாம் பயன்படுத்துவதில்லைதானே,,, எனவே இது குறித்து அதிக அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்பதே என்கருத்து,,,//

  இரண்டு மொபைல்தான் என்றில்லை. சகோ வாசன் அவர்கள் சொன்னதுபோல் ஃபோட்டோவில் அப்படி (டூப்ளிகேட் பண்ணி) காட்டியிருக்கலாம். சொல்ல வந்த மெஸ்ஸேஜ் உண்மையில் நாம் அச்சப்படவேண்டியதுதான் சகோ.

  கார்கோ சர்வீஸ் நடத்தி வந்த 30 வயதுடைய, 2 சின்ன‌ குழந்தைகளுக்கு தகப்பனான‌ ஒரு சகோதரர், அன்றாடம் பயன்படுத்திய செல்ஃபோனினால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 1 வருடமாக கடுமையான ட்ரீட்மெண்ட், கூடவே பயங்கர வேதனை அனுபவித்து இப்போ 2,3 மாத‌த்திற்கு முன்புதான் மரணித்துவிட்டார்.(இன்னாலில்லாஹி..) அவர் கன்சல்ட் பண்ணிய எல்லா டாக்டர்களும் சொன்னது செல்ஃபோனினால் வந்த ப்ராப்ளம்தான் என்று! உங்களுக்கு வேறு கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்கள் சகோ.

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  சகோ அஸ்மா அவர்களுக்கு
  எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பே இந்த மெயில் வந்திருந்தது படித்துவிட்டு நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பியதோடு அந்த மெயிலை மறந்து விட்டேன்.

  ஆனால் நீங்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக பதிவாக போட்டுயிருக்கிறீர்கள்
  (இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக)
  நன்றி சகோ.

  மத்திய நிபுணர் குழு:

  இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

  இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

  மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.

  செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்..." என பரிந்துரைத்துள்ளது.

  மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.

  இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

  செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.

  மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.

  அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

  நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.

  மேலே உள்ளது
  http://namnidur.blogspot.com/2011/02/blog-post_8363.html

  இந்த லிங்கில் இருந்து எடுத்தது உங்களின் பதிவை உண்மைப்படுத்துகிறது

  ReplyDelete
 12. இந்த செய்தியே தவறு என்கிறீர்களா சகோ? சொன்னவர்கள் கூமுட்டைகள்..?! இப்படி சொல்வதின் காரணம் கொஞ்சம் சொல்லுங்களேன் சகோ! எல்லோரும் தெரிஞ்சிக்கலாமல்லவா? //

  தப்பாக சொல்லவில்லை அஸ்மா, சும்மா வேடிக்கையாக சொன்னேன், தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 13. @ ஹைதர் அலி...

  வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

  //இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக// ஆமீன். நன்றி சகோ.

  நீங்கள் கொடுத்துள்ள இந்த பயனுள்ள தகவலை இந்த பதிவில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். ரொம்ப நன்றி சகோ.(ஜஸாகல்லாஹு ஹைரா!)

  ReplyDelete
 14. @ இனியவன்...

  //தப்பாக சொல்லவில்லை அஸ்மா, சும்மா வேடிக்கையாக சொன்னேன், தவறான புரிதலுக்கு வருந்துகிறேன்.//

  இந்த இடுகையின் தகவலில் எதுவும் தவறு இருக்குமோ என்று தெரிந்துக் கொள்ளதான் உங்களிடம் விளக்கம் கேட்டேன் சகோ. உங்களின் ஒற்றை வரி பின்னூட்டத்தோடு ஒரு ஸ்மைலி சேர்த்திருந்தால் எனக்கு விளக்கம் தேவைப்பட்டிருக்காது :) நோ ப்ராப்ளம்! எல்லாம் சமுதாய நலனுக்காகதானே.. வருத்தப்படாதீங்க சகோ :) பதில் தந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,
  நல்ல விழிப்புண்ர்வை ஏற்படுத்தும் பதிவுதான் போட்டுஇருக்கீங்க.... எனக்கும் மெயில் வந்த விஷயம்தான் என்றாலும்... நல்ல தகவல் நம் எல்லோருக்கும் எப்போதுமே பயன்படும்தானே...
  வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 16. @ apsara-illam...

  //நல்ல தகவல் நம் எல்லோருக்கும் எப்போதுமே பயன்படும்தானே...//

  வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நிச்சயமா பயன்படும். நன்றி அப்சரா!

  ReplyDelete
 17. உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
  http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

  ReplyDelete
 18. நன்றி ஆசியாக்கா! உங்கள் விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன் :)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!