அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 25 April 2012

முஸ்லிம்களின் கவனத்திற்கு ……! (சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு )


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களைத் தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகார இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

விகிதாச்சார இட ஒதுக்கீடு என்பது இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்த பிறகு விகிதாச்சார இட ஒதுக்கீடுக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கும். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில்,

1) ஷேக்
2) சையது
3) தக்னி முஸ்லிம்
4) அன்சார்
5) தூதுகோலா
6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
7) மாப்பிள்ளா

என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது இந்த 7 சாதிகளில் ஒன்றை குறிப்பிட்டு, அது பள்ளி மாற்றுச் சான்றிதழில் இடம் பெற்றால்தான் அந்த குழந்தைக்கு வட்டாட்சியர் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழை வழங்குவார். இந்த சாதிச் சான்றிதழை வைத்துதான் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும் பெற முடியும். பல முஸ்லிம்கள் இந்த விபரம் தெரியாமல் பட்டாணி, சாஹிப், பரிமளம் போன்ற உட்பிரிவுகளையும், குடும்பப் பெயர்களையும் 'சாதி' என்ற இடத்தில் குறித்து விடுகின்றனர். பெற்றோர்கள் தெரியாமல் செய்யும் இந்தத் தவறின் காரணமாக மாணவச் செல்வங்களின் எதிர்காலம் பாழ்பட்டுப் போய்விடுகிறது.

எனவே 'மதம்' என்று குறிப்பிடப்படும் இடங்களில் “இஸ்லாம்” என்றும் 'சாதி' என்று குறிப்பிடப்படும் இடங்களில் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவை மட்டுமே முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டும். வேறு எந்த பெயரையும் குறிப்பிடக் கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பின்போதும் இதே வழிமுறையைதான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சாதி வாரி கணக்கெடுப்போடு சேர்த்து பொருளாதார கணக்கெடுப்பும் எடுக்கப்படுகிறது. சில முஸ்லிம் குடும்பங்களின் மாத வருமானம் 2 ஆயிரம் ரூபாய்தான் இருக்கும். ஆனால் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது எனக் கருதி மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று பொய்யாக சொல்கிறார்கள். இது மாதிரியான பொய்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த ஆண்டு வரை மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்கள் அரசின் கல்வி உதவித் தொகையை பெற வேண்டுமெனில் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த அளவுக்கு உண்மையிலேயே வருமானம் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவர் கவுரவத்திற்காக மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுத்தால் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாயாகி, இவர் ஏழை அல்ல என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு, இவருடைய பிள்ளைகளுக்கு அரசின் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போய்விடும். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அடிப்படை கல்வி உரிமைச் சட்டத்தின் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் கூட 25 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் குடும்பம் வருமானத்தை அதிகப்படுத்தி காண்பித்தால் இந்த இடஒதுக்கீடும் கிடைக்காமல் போய்விடும். இப்படி முஸ்லிம்கள் (கவுரவத்திற்காக‌) சாதாரணமாக சொல்லும் சிறிய பொய் கூட எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும் என்பதை புரிந்துக் கொண்டு பொருளாதார நிலவரங்களை கேட்கும்போது பிள்ளைகளுக்கு கிடைக்கும் அரசின் கல்வி உதவித் தொகை பாதிக்காதவாறு பெற்றோர்கள் நடந்துக் கொள்ளவேண்டும்.
இஸ்லாத்தில் சாதிப் பாகுபாடுகள் கிடையாது. அதனால் சாதி இல்லை என்றுதான் நாங்கள் விபரம் தருவோம் என்று சிலர் அடம் பிடிக்கிறார்கள். இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள். சில விஷயங்கள் நம்மை மீறி நடந்துவிடும். அதில் ஒன்றுதான் சாதி ரீதியான இட ஒதுக்கீடு. இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது சாதி ரிதீயில் தரப்படுகிறதே தவிர மத ரீதியில் தரப்படவில்லை. அப்படி இருக்கும்போது சாதி இல்லை என்று முஸ்லிம்கள் குறிப்பிட்டால் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போய், அவர் தம் சந்ததியினர் கல்வி, வேலைவாய்ப்பில் அறவே ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.

அரசியல் சட்டம் வகுக்கப்படும்போது தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு சாதி ரீதியில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதுபோல் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கவும் வழிவகை செய்யப்பட்டது. அதோடு சேர்த்து இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. அதில் நம் முன்னோர்கள் கோட்டை விட்டு விட்டனர். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ்தான் இருக்கவேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் உரத்து முழக்கமிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் கூட 'முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு சரிப்படாது; மதரீதியான இட ஒதுக்கீடுதான் சாத்தியப்படும்' என்று கொள்கை முழக்கம் செய்யத் தவறிவிட்டார். அதனால் இந்துக்களை சாதி ரீதியாக பிரித்ததுபோல் முஸ்லிம்களையும் சாதி ரீதியாக பிரித்து இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மாற்ற வேண்டுமெனில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி திருத்தம் கொண்டு வந்த பிறகுதான் முஸ்லிம்கள் “சாதி இல்லை” என்று சொல்லவேண்டும்.

அதற்கான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் முஸ்லிம்கள் முன்னெடுத்துச் சென்று வெல்லவேண்டும். அந்த கோரிக்கையில் வென்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பே “சாதி இல்லை” என்று ஒரு முஸ்லிம் குறிப்பிட்டால் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலைவாய்ப்பில் உள்ள இட ஒதுக்கீடுகளையும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை, வங்கி வட்டிக் குறைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பறி கொடுக்க நேரிடும். இதை கவனத்தில் கொண்டு சமூக, பொருளாதார சாதி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் சரிவர நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(tntj.net தளத்தில் வெளிவந்த‌ இந்தக் கட்டுரை அவசியமானதொரு விழிப்புணர்வு கருதி இங்கே பகிரப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் தேவையான விழிப்புணர்வு தந்த TNTJ வுக்கு நன்றிகள்! ஜஸாஹுமுல்லாஹ் ஹைரா!)

10 comments:

  1. இசுலாமியரிடையே சாதிகள் இல்லை என்றார்களே பலர், சுவனப்பிரியன் உட்பட. அப்படி இல்லை என தெளிவாகக் கூறிய இப்பதிவுக்கு நன்றி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
    Replies
    1. திரு.டோண்டு ஐயங்கார் சார்,

      ///என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.///

      ----யாரால்..?

      மாநில அரசால்..! இஸ்லாமால் அல்லவே...!


      {{இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் வேலை இன்றி மேற்படி விஷயத்தை இந்த பதிவு இன்னும் கொஞ்சம் நன்றாக நறுக் என்று மண்டையில் ஓங்கி கொட்டியது போன்று தெளிவாக எழுதி இருக்கலாம். நிச்சயமாக இது ஒரு குறைதான் இப்பதிவுக்கு.}}

      உங்களை ஐயர் என்று வகைப்படுத்தி உங்களுக்கு சாதி சான்றிதழலில் சொன்னது மாநில அரசா..? இல்லையே..!

      நீங்கள் சார்ந்த பார்ப்பனிய ஹிந்து மத வர்ணாசிரம் அல்லவா..? பிறக்கும்போதே ஐயங்க்காராக அல்லவா பிறந்தீர்கள்..?

      நாளையே, "சாதி என்ற இடத்தில் முஸ்லிம்கள் ஏதும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை" என்று அரசு ஆணை பிறப்பித்து விட்டால்,நாங்கள் மொத்த முஸ்லிம்களும் இஸ்லாத்தில் சாதி இல்லை என்பதால், அந்த ஆணைக்கு கட்டுப்பட தயார், "சாதி - இல்லை" என்று சாதி சான்றிதழில் மிக மிக சந்தோஷமாக எழுத..!

      ஆனால்..... டியர் மிஸ்டர் டோண்டு அயங்கார் அவர்களே,

      நீங்கள் இது போன்ற அரசு ஆணைக்கு அடிபணிய தயாரா..? உங்கள் ஐயங்கார் சாதியை விட்டொழிக்க தயாரா..? பூணூலை அறுத்து எறிய தயாரா..? சாதி வர்ணாசிரமத்தை விட்டொழிக்க தயாரா..? சாதிக்கு எதிராக பதிவு எழுத தயாரா..?


      தவளை தன் வாயால் வந்து இப்படி கெடுகிறதே..!

      Delete
    2. @ dondu(#11168674346665545885)

      //இசுலாமியரிடையே சாதிகள் இல்லை என்றார்களே பலர், சுவனப்பிரியன் உட்பட. அப்படி இல்லை என தெளிவாகக் கூறிய இப்பதிவுக்கு நன்றி.//

      இஸ்லாம் பற்றி தெளிவற்ற நிலையில் உள்ள‌ உங்களுக்கு சாதி பற்றி தெளிவு தேவையெனில் இனி வரக்கூடிய பதிவுகளைப் பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள். அவசரப்படாதீர்கள்! சகோ முஹம்மத் ஆஷிக் அவர்களின் விளக்கங்களும் இதுவரை உங்களுக்கு தெளிவைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். வருகைக்கு நன்றி ஐயா.

      Delete
  2. தெள்ளத் தெளிவான பதிவும் விளக்கமும்.உங்களால் மட்டும் எப்படி இப்படி என்பது எனக்கு வியப்பு.நன்றி அஸ்மா

    ReplyDelete
  3. ///என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.///

    ----யாரால்..?

    மாநில அரசால்..! இஸ்லாமால் அல்லவே...!//
    அப்படியா, சாதிப் பெயர்களை அளித்தது இசுலாமியர்கள்தானே. அந்தரத்திலிருந்தா எடுத்து கொடுத்தது அரசு? இப்பிரிவினர் இசுலாமியரிடம் இல்லை என்பதா உங்கள் புரிதல்?

    சாதிகள் தவிர்க்க முடியாதவை என நான் சொன்னதுதானே இங்கும் நடந்திருக்கிறது? அதை ஏற்றுத்தானே இசுலாமியரும் இப்போது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

    அந்த 7 சாதிகளிலும் 1) தக்னி முஸ்லிம் 2) தூதுகோலா 3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் 4) மாப்பிள்ளா
    என்ற நால்வர்தானே பிற்படுத்தப்பட்டவராக காணப்படுகின்றனர் என்பதும் நிஜம்தானே. அவர்கள் நிலைக்கு உங்கள் சமூகத்தில் யார் பொறுப்பாம்?

    அப்புறம் என்ன இழவுக்கு இசுலாத்தில் சாதி இல்லை என ஒப்பாரி வைக்கிறீர். ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?

    //நீங்கள் இது போன்ற அரசு ஆணைக்கு அடிபணிய தயாரா..? உங்கள் ஐயங்கார் சாதியை விட்டொழிக்க தயாரா..? பூணூலை அறுத்து எறிய தயாரா..? சாதி வர்ணாசிரமத்தை விட்டொழிக்க தயாரா..? சாதிக்கு எதிராக பதிவு எழுத தயாரா..?//
    அட அவ்வளவுதானா உமது புரிதல்? எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே, அது இல்லாமலே தலை நிமிர்ந்து முன்னேறுகிறோமே. என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
    Replies
    1. ///அட அவ்வளவுதானா உமது புரிதல்?///---இதை நான் சொல்லி இருக்க வேண்டும்..!

      ///என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?///---இதைத்தான்....இதைத்தான்.... சாதிவெறி.... என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கேன்..!

      அதை உங்களால் விட்டொழிக்க முடியாது....
      ஆனால், எங்களால் விட்டொழிக்க முடியும்..!

      Delete
    2. ///இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?///

      ---ஆண்டாண்டு காலமாக எங்களை கீழ் சாதி என்று அடக்கி ஓட்டாண்டி ஆக்கி வைத்து இருந்ததற்கு பிராயச்சித்தம் தான் இந்த முஸ்லிம்கள் கோட்டா. அதையும் சுதந்திரம் அடைந்த பின்னர் தந்திரமாக பின் தங்கிய வகுப்பு என்று பிரித்துப்போட்டு பத்து சதவீதத்தை அபேஸ் பண்ணியது யார்..?

      இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலை தலித்துகளின் நிலையை விட மோசம் என்று ரங்கநாத் மிஸ்ரா & ராஜேந்திர சச்சார் கமிஷன்கள் இந்திய அளவில் பலவருடம் ஆய்ந்துவிட்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்கள். அது செயல்படுத்தப்படாமல் பரணியில் கிடப்பில் போடப்பட்டதற்கு காரணம் யார் என்று சொல்லவும் வேண்டுமா..?

      இந்த உரிமையை கோரி போராடி வருகிறோம்..!

      Delete
    3. ///சாதிப் பெயர்களை அளித்தது இசுலாமியர்கள்தானே. அந்தரத்திலிருந்தா எடுத்து கொடுத்தது அரசு? இப்பிரிவினர் இசுலாமியரிடம் இல்லை என்பதா உங்கள் புரிதல்? ////

      ---உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்...

      எனது சாதி 'இன்னதுதான்' என்று எனது 15-வது வயதில்... முதலில் சாதியை எனக்கு எழுதியவர் பட்டுக்கோட்டை வட்டாட்சி அலுவலர்தான். பெயரை பார்த்துவிட்டு என்னிடம் 'முஸ்லிமா' என்று கேட்டார்.
      'ஆம்' என்றேன்.
      'ராவுத்தரா மறைக்காயரா என்ன சாதி' என்றார்.
      'தெரியவில்லை' என்றேன்.
      அப்புறம் அவரே யோசித்து ஒரு பெயரை (?) தெரிவு செய்துவிட்டு சொன்னார். அதற்கு முன்னர் அந்த சாதி பெயரை என் வாழ்நாளில் நான் கேட்டதே கிடையாது..!

      ஆகவே, எனது சாதி(?)யை எனக்கு 'இன்னதுதான்; என நிர்ணயித்தது அரசுதான்..! அந்த அரசு அலுவலர்தான்..!

      ஆனால்....

      இதை நான் உபயோகிக்க அவசியமே இன்றி இறைவன் எனக்கு தேவையான அருளை பொழிந்துவிட்டான்...! எல்லா புகழும் இறைவனுக்கே..!

      Delete
    4. ///எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே///

      ---ஹா...ஹா....ஹா.... இதைத்தான் "தவளை தன் வாயால் கெடும்" என்றேன்....


      15% இருக்கும் முஸ்லிம்கள் அரசு வேலையில்... சுமார் 1 % - 4 % இருக்கின்றனர்..! அதனால் முஸ்லிம்கள் போராடுகிறோம்..!

      ஆனால்....


      சுமார் 3.5% இருக்கும் நீங்கள்... அரசு வேலைகளில்... 35 % - 65% இருக்கீகளே ஐய்யா.............

      அப்புறம்....


      உங்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட நீங்கள் என்ன கேனையர்களா...?

      Delete
  4. @டோண்டு //ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?//

    ஆமா, சார் "இல்லாத சாதியை (?)" கல்வி/வேலை வாய்ப்பு என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது திணித்து விட்டார்கள், அப்பாலிக்க, எனக்கு தெரிஞ்சு பிறப்பின் அடிப்படையில் நான் ஆண் ஜாதி மட்டுமே, ஆனாலும் நான் ஆண் என்பதால் எந்தவிதத்திலேயும் உயர்ந்து விட்டேனே என்றால் அதுவும் கிடையாது, நான் நல்லது செய்து, செய் நன்றி மறவாமல் நல்லவனா வாழ்ந்தால் மட்டுமே நான் உயர்ந்த ஜாதி, இல்லைன்னு வைங்க, மனிதனா பிறந்தும் மிருகங்களை விடவும் தாழ்ந்த ஜாதி இதுதானே உண்மையாகவும் இருக்க முடியும், அவன் தானே மற்றவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

    //என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?//

    தமிழ் பதிவுலகில் நெறய, நெறய பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க, அது உங்களுக்குத் தெரியாதா?.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை