அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 11 September 2010

நட்ஸ் குல்ஃபி


என் ப்ளாக்கில் கொடுக்கும் முதல் ரெசிபி என்பதால் ஸ்வீட் & கூலாக செலக்ட் பண்ணி இந்த "நட்ஸ் குல்ஃபி" யைக் கொடுத்துள்ளேன். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்!





தேவையான பொருட்கள்:




ஃப்ரெஷ் க்ரீம் ‍ - 300 மில்லி
கன்டன்ஸ்டு மில்க் (சுகர் சேர்த்தது) - 500 மில்லி
விப்பிங் க்ரீம் - 200 மில்லி
கன்டன்ஸ்டு மில்க் (சுகர் இல்லாதது) - 350 மில்லி
ஏலக்காய் பொடி ‍- 3/4 ஸ்பூன்
பாதாம் பருப்பு(தோல் எடுத்து, பொடிதாக நறுக்கியது) - 5 ஸ்பூன்
பிஸ்தா (பொடிதாக நறுக்கியது) - 3 ஸ்பூன்

குங்குமப்பூ - 1 பின்ச்
சீனி ‍‍ - 2 ஸ்பூன்

செய்முறை:


முதலில் குங்குமப்பூவை சீனியுடன் சேர்த்து (கிச்சன் உரலில் போட்டு)பொடியாக்கவும்.



மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி, அத்துடன் பொடியாக்கிய குங்குமப்பூவை சேர்க்கவும்.




பிறகு ஒரு பீட்டரால் நன்கு கலக்கவும்.



பருப்பு வகைகள் அடியில் தங்கும் முன்பே ஒரு குல்ஃபி மோல்டில் ஊற்றவும்.



சுமார் 2 மணி நேரம் ஃப்ரீஜரில் வைக்கவும்.



2 மணி நேரம் கழித்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிட்டு மீண்டும் 1 மணி நேரம் வைக்கவும்.



பிறகு மோல்டின் வெளிப்பக்கம் தண்ணீர் விட்டு, எடுப்பதற்கு சுலபமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.


குழந்தைகளின் ஃபேவரைட்டான இந்த நட்ஸ் குல்ஃபியை நம் வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு:- பாதாம் பருப்பு தோல் எடுத்து, பொடிதாக நறுக்கியது அப்படியே ரெடிமேடாக கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.

19 comments:

  1. சாப்பிட்டு பார்க்காமலேயே டேஸ்ட்டா இருக்கு.

    ReplyDelete
  2. @ ராஜவம்சம்...

    //சாப்பிட்டு பார்க்காமலேயே டேஸ்ட்டா இருக்கு.//

    அப்படியா....? அப்போ பார்த்ததே போதும் செய்து சாப்பிடாதீங்க :-)

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. சூப்பர் குல்ஃபி. குட்டியர் சூப்பரா போஸ் குடுக்கிறார்.

    ReplyDelete
  4. @ அஹமது இர்ஷாத்...

    //Your Blog Nice.. Recipe also..//

    தளத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. @ vanathy...

    வாங்க வானதி, நலமா? ரமலானுக்கு பிறகுதான் சமையல் பகுதி பக்கமே வரணும் என்றிருந்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!

    //குட்டியர் சூப்பரா போஸ் குடுக்கிறார்// அவரை ஃபோட்டோ எடுப்பதற்கு அவ்வளவு கிராக்கியாக இருந்தது போங்க‌!

    ReplyDelete
  6. bolts gulfi

    அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா , நீங்கள் செய்து கண்பிபதை விட விட்டிற்கு பார்சல் அனுபிவிட்டால் சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததால் செய்து பார்க்கிறோம்

    ReplyDelete
  7. நலமா?
    ரொம்ப நல்லா இருக்கு அஸ்மா.
    நானும் இதேபோல் தான் செய்வேன், ஆனல் ஒரு கண்டென்ஸ்ட் மில்க் தான் சேர்ப்பேன்.
    குட்டி பையன் சூப்பர்.
    www.vijisvegkitchen.blogpsot.com

    ReplyDelete
  8. @ Anonymous...

    வ அலைக்குமுஸ்ஸலாம், அனானிமஸ்! (ஸாரி...உங்கள் பெயர் தெரியவில்லை)

    //நீங்கள் செய்து கண்பிபதை விட விட்டிற்கு பார்சல் அனுபிவிட்டால் சாப்பிட்டு விட்டு ருசியாக இருந்ததால் செய்து பார்க்கிறோம்//

    அனுப்பிட்டா போச்சு! ஆனா உங்களுக்கு குல்ஃபி கிடைக்காது, 'குல்ஃபிஷேக்'தான் கிடைக்கும் :-) அதுசரி...உங்க பெயரே சொல்லாட்டா நான் எப்படி அனுப்புறது..?

    ReplyDelete
  9. @ Vijiskitchen...

    விஜி! நான் நல்லா இருக்கேன். நீங்க நலமா? நீங்கள் ஒரு கண்டென்ஸ்ட் மில்க் தான் சேர்ப்பீர்களா? சுகரா, நான்-சுகரா? நான்-சுகர் மட்டும் சேத்தால் தனியாக சீனி சேர்க்கவேண்டும் அல்லவா? இந்த முறையில் சீனி எக்ஸ்ட்ரா தேவைப்படாது.

    //குட்டி பையன் சூப்பர்//

    ரொம்ப தேங்ஸ் விஜி!

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டால் குல்ஃபி தான் கிடைக்கும் எங்களுக்கு ஒடனே அன்னுபிவிடவோம் plez

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டால் குல்ஃபி தான் கிடைக்கும் எங்களுக்கு ஒடனே அன்னுபிவிடவோம் அத்துடன் பெருநாள் பசியரைம் கொடுதுவிடவிம் plez

    ReplyDelete
  12. @ Anonymous...

    // அஸ்மா நபீஸ்யிடம் கொடுத்துவிட்டால் குல்ஃபி தான் கிடைக்கும்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் அனானிமஸ்!

    ஆஹா... இது யாரோ என்னை நல்லா தெரிந்த ஆள்தான் பெயர் சொல்லாமல் வர்றீங்க குல்ஃபி கேட்டு :) இருங்க முடிந்தால் கண்டுபிடிக்கிறேன். நானே கண்டுபிடித்தால் குல்ஃபிலாம் ஃப்ரீயா கிடையாது. நீங்களா வந்து உங்க பெய‌ரை சொல்லிட்டா ஒரு பெரிய கன்டைனரோடு குல்ஃபி உங்களுக்கு டோர் டெலிவரி பண்ணப்படும் :-)

    ReplyDelete
  13. அட அட..குல்ஃபியை பார்த்தே ஆடிப் போயிருக்கேன் இதுல அது உருகி வேற நிக்கிறது..பார்த்து பொறுக்க முடியவில்லை..இதோ கதவை திறங்க வந்து விட்டேன்....துரு துரு பைய்யனா தெரியுறார் கொடுத்து வைத்தவர்

    thalika

    ReplyDelete
  14. மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்புகளின் மேல் என்றுமே முதல் கமென்ட் மேல் ஏறி நிற்கிறது அஸ்மா..அது என்ன வென்று பார்க்கவும்

    thalika

    ReplyDelete
  15. @ thalika...

    //அட அட..குல்ஃபியை பார்த்தே ஆடிப் போயிருக்கேன்//ஏன் தளிகா...என்னாச்சு? குல்ஃபியை பார்த்தா பயமா இருக்கா :-) ?

    //இதுல அது உருகி வேற நிக்கிறது..பார்த்து பொறுக்க முடியவில்லை..இதோ கதவை திறங்க வந்து விட்டேன்....// உங்களுக்காக எங்க வீட்டு கதவு எப்போதுமே திறந்துதான் இருக்கும்:) தாராளமா வாங்க!

    //துரு துரு பைய்யனா தெரியுறார் கொடுத்து வைத்தவர்// துரு துருப்பு மட்டுமல்ல‌, அறிவான‌ சிந்தனை + ரொம்ப அமைதி, மாஷா அல்லாஹ்! தேங்ஸ் தளிகா.

    ReplyDelete
  16. @ thalika...

    //மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்புகளின் மேல் என்றுமே முதல் கமென்ட் மேல் ஏறி நிற்கிறது அஸ்மா..அது என்ன வென்று பார்க்கவும்//

    எனக்கு நன்றாக தெரிவதால், நீங்க சொல்வது என்ன ப்ராப்ளம் என்று என்னால் புரிந்துக்கொள்ள முடிய‌வில்லை தளிகா! மீண்டும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete
  17. vow superrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  18. @ jenitta...

    //vow superrrrrrrr!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கு முடியும்போது மீண்டும் வாங்கமா :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை