அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
இத்தனைக்கும் அவர் சில மருந்துகளை மட்டுமே தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி, பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது.
அவர் கொண்டு வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வந்தவருடைய தகவல் தெரியாமல் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரின் குடும்பத்தினரும் குழப்பத்திலிருக்க, பிறகு விசாரணைக்காக அழைத்து செல்லப்படிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு பலகட்ட விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பயணியின் கடவுச்சீட்டை (Passport) காவல்துறையினர் தரவில்லை.
மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன்தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்துச் சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இப்படி சாதாரண மருந்தைக் கொண்டு வந்ததற்காக பலவாறாக அலைக்கழிக்கப்பட்டு, பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார் அந்த அப்பாவி.
இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்துகளைக் கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
இந்த விவரம், இந்தியாவின் மாபெரும் நகரம் ஒன்றான சென்னையில் இருப்பவருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு, குறிப்பாக அமீரகத்திற்கு வருவோர் எப்படி கவனமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை! இருந்தாலும், மருந்துப் பொருட்களை கொண்டுவர விரும்புவோர் அதற்குரிய ஃபார்மாலிட்டிகளை முன்கூட்டியே செய்து விடுவது நல்லது.
அபராதம், சிறைத் தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் அதாவது காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், pain killer மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்.
ACTIFED compound linctus, ACTIFED DM, ADOL cold, ADOL COLD HOT THERAPY போன்ற மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.
இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துகள் இன்றும் விற்பனையில் உள்ளன(?!) என்னென்ன மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அமீரகத்தின் அமெரிக்கத் தூதரகம் (American embassy of UAE) வெளியிட்டுள்ளது.
தகவல்- அபு நிஹான்
(இதை மெயிலில் அனுப்பியவருக்கு நன்றி!)
அஸ்மா!
ReplyDeleteஇந்த மெயில் எனக்கும் வந்தது. பாவம் அந்த நபர். உதவி செய்ய போய் உபத்திரமாக அமைந்துவிட்டது :(
வருத்தமான செய்தி.
ReplyDeleteஇந்த தடையினால் இருதய அறுவை சிகிச்சைப் பெற்றுக் கொண்ட மனிதர்களின் பாடு பெரும்பாடாக மாறக்கூடும்.
அவர்கள் தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
இந்தக் கொடுமையை யாரிடம் போயி சொல்லுவது ?
முதலில் அந்த அந்த நாட்டு சட்டதிட்டங்களை தெரிஞ்சி வைத்தால் இந்த மாதிரி கஷ்டங்கள் வராது.
ReplyDelete@ ஆமினா...
ReplyDelete//அஸ்மா!
இந்த மெயில் எனக்கும் வந்தது. பாவம் அந்த நபர். உதவி செய்ய போய் உபத்திரமாக அமைந்துவிட்டது :(//
அந்த ஆளும் பாவம்தான், மருந்து சேரவேண்டியவருக்கு அது கிடைக்காமல் போனதும் பாவம்தான்! தன் நாட்டின் பாதுகாப்புக்கென்று ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டம். என்ன செய்ய முடியும்?
@ Mohamed Ayoub K ...
ReplyDelete//வருத்தமான செய்தி.
இந்த தடையினால் இருதய அறுவை சிகிச்சைப் பெற்றுக் கொண்ட மனிதர்களின் பாடு பெரும்பாடாக மாறக்கூடும்.
அவர்கள் தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
இந்தக் கொடுமையை யாரிடம் போயி சொல்லுவது ?//
இருதய அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நம் நாட்டில் கிடைக்கும் மருந்துகளைப் போல் அங்கு கிடைக்காதா? எனக்குத் தெரிந்து இந்தியாவின் சித்த, ஆயுர்வேத மருந்துகள்தான் வெளிநாடுகளில் சரியாக கிடைக்காது. ஆங்கில மருந்துகளைப் பொறுத்தவரை Alternative medicine எப்படியும் கிடைக்கும். இது கொடுமையில்லை நானா :) அந்த நாட்டு சட்டம், என்ன செய்வது..?
வருகைக்கு நன்றி நானா!
@ ஜெய்லானி...
ReplyDelete//முதலில் அந்த அந்த நாட்டு சட்டதிட்டங்களை தெரிஞ்சி வைத்தால் இந்த மாதிரி கஷ்டங்கள் வராது//
நீங்க சொல்ற மாதிரி நாம் போகும் நாட்டின் சட்டங்களை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும்தான். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது:( கருத்துக்கு நன்றி நானா!
இருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து நடப்பது நலம்.
ReplyDelete@ vanathy...
ReplyDelete//இருக்கும் நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து நடப்பது நலம்//
நிச்சயமா அப்படி தெரிந்து வைத்திருந்தால்தான் சமாளிக்க முடியும். இங்கு (ஃபிரான்ஸில்) கூட அதற்கென ஒரு வெப்சைட் உள்ளது. அதில் நாம் ரெஜிஸ்டர் பண்ணிக்கொண்டால், அவ்வப்போது உள்ள சட்டங்கள், அரசாங்க செய்திகளை நமக்கு மெயில் பண்ணுவார்கள். வருகைக்கு நன்றி வானதி.
..இங்கு நடப்பது எங்களுக்கே தெரிவதில்லை ஆனால் நீங்க போட்டுடறீங்க..உபயோகமான தகவல்
ReplyDelete@ தளிகா...
ReplyDelete//..இங்கு நடப்பது எங்களுக்கே தெரிவதில்லை ஆனால் நீங்க போட்டுடறீங்க..உபயோகமான தகவல்//
மெயிலில் வரக்கூடிய தகவல்கள் எல்லோருக்கும் பயன்படுமே என்று போட்டேன் தளிகா :) இதுபோன்ற பயனுள்ள தகவல்களை நமக்கு அனுப்புபவர்களுக்குதான் நன்றி சொல்லணும்.