வருஷத்தில் இரண்டு முறை வரக்கூடிய நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்களுக்கும் இந்த அடையை தவறாமல் செய்வது வழக்கம். அதனால் இதன் பெயரே 'பெருநாள் அடை' என்றாகிவிட்டது.
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 படி
கடலைப் பருப்பு - 1/4 படி
சின்ன வெங்காயம் - 1 கிலோ
முட்டை - 10
நெய் - 200 கிராம்
ஈஸ்ட் - சுமார் 10 கிராம் (வெயில் சீஸனாக இருந்தால் தேவையில்லை)
தேங்காய்ப் பால் - 1 டின்(400 மில்லி)
பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 5 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசி, பருப்பை சுத்தம் செய்து ரவா பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, சூடாக்கிய வாணலியில் போட்டு அத்துடன் நெய் சேர்த்து, அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கி, குழைந்தவுடன் பெருஞ்சீரகத்தூள் சேர்த்து 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.
சூடாக இருக்கும்போதே வதக்கிய வெங்காயத்தை அரைத்து வைத்துள்ள மாவில் (அதிலுள்ள நெய்யுடன்) சேர்த்து கொட்டவும்.
உடனே வெங்காயத்தை மாவினால் மூடி சுமார் 1/2 மணி நேரம் வைக்கவும்.
பிறகு எல்லா மாவிலும் வதக்கிய வெங்காயம் படும்படி நன்கு புரட்டி கலந்துவிட்டு, தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
இப்போது முட்டைகளை உப்பு போட்டு கலக்கவும்.
தேங்காய்ப்பால் ஊற்றி வைத்துள்ள மாவில் கலக்கிய முட்டைகளை ஊற்றவும்.
எல்லாம் ஒன்றாக சேரும்வரை கலக்கிவிட்டு, ஈஸ்ட் சேர்த்து நன்கு கலக்கவும். (வெப்ப மண்டலமாக இருந்தால் ஈஸ்ட் சேர்க்காமலே மாவு பதம் வந்துவிடும்.)
அப்படியே இரவு முழுதும் நன்கு மூடி வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலை பொங்கியுள்ள மாவை நன்கு கலக்கிவிட்டு, ஆப்ப சட்டியில் சிறிது எண்ணெய்விட்டு மாவை ஊற்றி பரத்தவும். (ரொம்ப மெல்லியதாக பரத்தக் கூடாது)
அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாக வேகவிடவும்.
அடிப்பக்கம் பொன் முறுகலாகி, மேல் மாவு உப்பி வந்திருக்கும்.
இப்போது புரட்டி போட்டு சிறிது எண்ணெய் விட்டு, அடையை சற்று அழுத்திவிடவும். (மூடி தேவையில்லை.)
மறு பக்கமும் அதேபோல் முறுகியவுடன் எடுத்து, கறி சால்னாவுடன் சூடாக பரிமாறவும்.
(நினைவுக்காக: இதற்குரிய மாவை முந்திய நாளே தயார் பண்ணி வைத்து, மறுநாள்தான் சுடவேண்டும்.)
குறிப்புகள்:-
தேங்காய்ப் பால் ரெடிமேடாக கிடைக்காதவர்கள், பெரிய தேங்காய் ஒன்றில் 400 மில்லியளவு தலைப்பால் எடுத்துக் கொள்ளவும்.
பொதுவாக இந்த மாவிற்கு சோடாப்பு தேவைப்படாது. ஒருவேளை மாவு லேசாக புளித்திருந்தால் மட்டும் மறுநாள் சிறிது சோடாப்பு சேர்த்து கலந்துவிட்டு சுடவும்.
சூடாக சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். அதனால் ஆறிய பிறகு சாப்பிடுவதாக இருந்தால் மீண்டும் சூடுபடுத்திக் கொள்ளவும்.
மாவு மீதமிருந்தால், எல்லா மாவுகளையும்போல் ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடலாம். ஆனால் ஈஸ்ட் போட்டிருப்பதால் உடனே ஃபிரிஜ்ஜில் வைத்துவிடவேண்டும்.
நல்ல இருக்கு அஸ்மா, அப்பா இரண்டு சாப்பிட்டால் போதும் போல மஸ்தா இருக்கு.
ReplyDeleteநாங்க செய்வது பராசாப்பம் இது போல் தான் கீமா சேர்த்து, இதுவும் வித்தியாசமாக இருக்கு.எல்லாதையும் போட்டே இரவு ஊறவைத்து காலையில் சுட்னுமா>
@ Jaleela Kamal...
ReplyDelete//நல்ல இருக்கு அஸ்மா, அப்பா இரண்டு சாப்பிட்டால் போதும் போல மஸ்தா இருக்கு//
ஆமா ஜலீலாக்கா, கொஞ்ச மஸ்தான ஐட்டம்தான் :) அதனால்தான் வருஷத்தில் 2 முறை ஸ்பெஷலாக செய்வோம்.
//நாங்க செய்வது பராசாப்பம் இது போல் தான் கீமா சேர்த்து, இதுவும் வித்தியாசமாக இருக்கு//
அப்படியா.. அந்த பராசாப்பம் ரெசிபி நீங்கள் கொடுத்துள்ளீர்களா? ஆனா நாங்கள் செய்யும் பராசாப்பத்தில் கீமா இருக்காது.
//எல்லாதையும் போட்டே இரவு ஊறவைத்து காலையில் சுட்னுமா//
ஆமா ஜலீலாக்கா, உப்பு உட்பட எல்லாவற்றையும் இரவே கலந்து வைத்துவிடணும். தங்களின் வருகை சந்தோஷமாக உள்ளது, நன்றி ஜலீலாக்கா!
அன்பு சகோதரி அஸ்மா
ReplyDelete//கொஞ்ச மஸ்தான ஐட்டம்தான் :)//கொஞ்சம் அல்ல ரொம்பவே மஸ்தான ஐட்டம்தான். என் நண்பன் நோன்பு திறக்கும் முன்பே சொல்லி அனுப்பிவிடுவார்.
வாழ்க வளமுடன்
பி.கு: தீபாவளி வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
அஸ்மா பாக்கவே சாப்பிட தோணுது. இதுல எனக்கு சில கேள்வி
ReplyDelete1. ஈஸ்ட் கண்டிப்பா போடணுமா?
2. சின்ன வெங்காயம் தான் போடணுமா?
3. மெல்லியதாக பரத்த கூடாது என்பதால் வேக ரொம்ப நேரம் எடுக்கும் இல்லையா?
குறிப்புக்கு மிக்க நன்றி. இதை தான் செய்யணும் வரும் ஹச்சு பெருநாளைக்கு!
அஸ்மா,இந்த அடை ரொம்ப வித்தியாசமாக உள்ளது.படத்தினைப்பார்த்ததும் உடன் செய்து விட வேண்டும் போல் உள்ளது.
ReplyDeleteஆஹா.. பார்க்கும்போதே அப்படியே சாப்பிடணுன்னு தோணுதே.. ஊருக்கு போயி செய்து சாப்பிடணும்.. இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteகோதுமை மாவிலும் செய்யலாமோ.. நன்றி அஸ்மா. ரொம்ப நல்லாருக்கு பெருநாள் அடை.
ரொம்ப நல்லா வந்து இருக்கே அக்கா.. எங்கள் வீட்டிலும் இதே தான் ஓவ்வொரு பெருநாளுக்கும்...
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு!! லிஸ்டை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன் மினிஸ்டரிடம் கொடுத்து விட்டேன். அவங்க பார்த்துக் கொள்வதாகச் சொல்லி ஒரு பார்வை பார்த்தாங்க. பெருநாள் அன்றைக்கு கிடைக்கும் போல!!
ReplyDeleteசகோ.அஸ்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் !!
@ ஹைஷ்126...
ReplyDelete//அன்பு சகோதரி அஸ்மா
...கொஞ்சம் அல்ல ரொம்பவே மஸ்தான ஐட்டம்தான். என் நண்பன் நோன்பு திறக்கும் முன்பே சொல்லி அனுப்பிவிடுவார்//
கரெக்டூ.. :)) இதனுடன் மற்ற ஐட்டங்களையும் சேர்த்து சாப்பிட்ட பிறகு அன்று மாலை வரை எதுவும் சாப்பிடமாட்டோம்ல..? :-) என்னதான் இருந்தாலும் இது செய்யாவிட்டால் பெருநாள் பலகாரங்கள் முழுமையடையாது... :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
சூப்பர் அஸ்மா.நல்ல புதுமையாக அடை செய்து காட்டி அசத்திவிட்டீர்கள்.
ReplyDelete@ ஆமினா...
ReplyDelete//அஸ்மா பாக்கவே சாப்பிட தோணுது. இதுல எனக்கு சில கேள்வி
1. ஈஸ்ட் கண்டிப்பா போடணுமா?
2. சின்ன வெங்காயம் தான் போடணுமா?
3. மெல்லியதாக பரத்த கூடாது என்பதால் வேக ரொம்ப நேரம் எடுக்கும் இல்லையா?//
1. மறுநாள் மாவு உப்பி, சாஃப்ட் கொடுப்பதற்குதான் ஈஸ்ட் போடுவது. அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள டெம்ப்பரேச்சருக்கு ஈஸ்ட் போடாமலே மாவு உப்பி வரும் என்றால் போடத் தேவையில்லை. இந்தியாவில் நல்ல வெயில் காலங்களில் செய்யும்போது மட்டும் நாங்கள் ஈஸ்ட் போடமாட்டோம்.
2. இதன் முக்கியமான அம்சங்களாகிய சுவையும், வாசனையும் கொடுப்பதே சின்ன வெங்காயம்தான்! பெரிய வெங்காயத்தில் செய்யலாம்தான், ஆனா கண்டிப்பா ருசியும் அதன் நறுமணமும் குறையும்.
3. மெல்லியதாக பரத்தக் கூடாது என்றால், அதற்காக ரொம்ப மொத்தமாக ஊற்றிவிடக் கூடாது ஆமினா! திட்டமாக ஊற்றணும். மூடிப் போட்டு சிம்மில் வைப்பதால் வெந்துவிடும். ஆனால் மெல்லியதாக பரத்திவிட்டால் திருப்பும்போது உடைந்துவிடும்.
//குறிப்புக்கு மிக்க நன்றி. இதை தான் செய்யணும் வரும் ஹச்சு பெருநாளைக்கு!//
கண்டிப்பா செய்து பாருங்க. பிறகு வந்து சொல்லுங்க.
@ ஸாதிகா...
ReplyDelete//அஸ்மா,இந்த அடை ரொம்ப வித்தியாசமாக உள்ளது.படத்தினைப்பார்த்ததும் உடன் செய்து விட வேண்டும் போல் உள்ளது//
உள்ளே மெதுவாகவும் வெளியில் நல்ல முறுகலாகவும் அருமையா இருக்கும் ஸாதிகா அக்கா! இந்த பெருநாளுக்கு செய்து பாருங்களேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ Starjan ( ஸ்டார்ஜன் )...
ReplyDelete//ஆஹா.. பார்க்கும்போதே அப்படியே சாப்பிடணுன்னு தோணுதே.. ஊருக்கு போயி செய்து சாப்பிடணும்.. இன்ஷா அல்லாஹ்//
ஊருக்கு போய்தானா..? கொஞ்சம் மெனக்கெட்ட வேலையாக இருப்பதால் பேச்சுலர்ஸ் செய்ய முடியாதுதான், பாவம் :)
//கோதுமை மாவிலும் செய்யலாமோ.. நன்றி அஸ்மா. ரொம்ப நல்லாருக்கு பெருநாள் அடை//
கோதுமை மாவில் செய்தால் டேஸ்ட் அவ்வளவு நல்லா வராது நானா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ சிநேகிதி...
ReplyDelete//ரொம்ப நல்லா வந்து இருக்கே அக்கா.. எங்கள் வீட்டிலும் இதே தான் ஓவ்வொரு பெருநாளுக்கும்...//
நீங்களும் செய்வீங்களா ஃபாயிஜா? இதே மெதட்தானா? சந்தோஷம்! கதீஜாவை விசாரித்து, சலாம் சொல்லுங்கள்.
@ எம் அப்துல் காதர்...
ReplyDelete//ரொம்ப நல்லா இருக்கு!! லிஸ்டை பிரிண்ட் அவுட் எடுத்து கிச்சன் மினிஸ்டரிடம் கொடுத்து விட்டேன். அவங்க பார்த்துக் கொள்வதாகச் சொல்லி ஒரு பார்வை பார்த்தாங்க. பெருநாள் அன்றைக்கு கிடைக்கும் போல!!//
சந்தோஷமாக உள்ளது. மினிஸ்டரெல்லாம் உங்க கஸ்டடியில் இருக்கும்போது பெருநாள் அடை உங்களுக்கு கிடைக்காமலா போய்விடும்? :)) enjoy...!
//சகோ.அஸ்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் !!//
வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ. உங்க கிச்சன் மினிஸ்டருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிடுங்க. உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
@ asiya omar...
ReplyDelete//சூப்பர் அஸ்மா.நல்ல புதுமையாக அடை செய்து காட்டி அசத்திவிட்டீர்கள்//
முடிந்தால் நீங்களும் செய்து பாருங்க ஆசியாக்கா. உடம்பு இப்போ பரவாயில்லையா? அங்கு வந்து கேட்டால் கஷ்டப்பட்டு பதில் போடுவீர்களே என்றுதான் கேட்கவில்லை. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆசியாக்கா.
இந்த அடை ரொம்ப வித்யாசமா இருக்கு.. ஒரு நாள் கண்டிப்பா செய்து பார்க்கணும். பார்க்கும்போதே சாப்பிடணுன்னு தோணுது. நல்ல பகிர்வு தோழி அஸ்மா.
ReplyDelete@ மின்மினி RS...
ReplyDelete//இந்த அடை ரொம்ப வித்யாசமா இருக்கு.. ஒரு நாள் கண்டிப்பா செய்து பார்க்கணும். பார்க்கும்போதே சாப்பிடணுன்னு தோணுது. நல்ல பகிர்வு தோழி அஸ்மா//
ஒரு நாள் என்ன.., முடிஞ்சா பெருநாளுக்கே செய்து பார்த்துட வேண்டியதுதானே? :) ஓகே, எப்போ செய்து பார்த்தாலும் வந்து சொல்லுங்க தோழி! வருகைக்கு நன்றிமா.
இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்!! அடை வித்தியாசமா நல்லாயிருக்குக்கா..ஒருநாள் செய்து பார்க்கனும்..என்னதான் இருந்தாலும் ஒரு சில பலகாரங்கள் அன்றைக்குசெய்து சாப்பிட்டாதான் பண்டிகை முழுமை அடையும் என்பது உண்மைதான் அக்கா...
ReplyDelete@ Mrs.Menagasathia...
ReplyDelete//இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்!!// மிக்க நன்றி மேனகா.
// அடை வித்தியாசமா நல்லாயிருக்குக்கா..ஒருநாள் செய்து பார்க்கனும்..//
செய்து பார்த்து சொல்லுங்க மேனகா. நீங்க நான்வெஜ் என்றால் கறி குழம்போடு சாப்பிடுங்க, சூப்பரா இருக்கும். வெஜிடேரியனாக இருந்தால் காய்கறி குழம்பு கூட இதற்கு நல்லாதான் இருக்கும்.
//என்னதான் இருந்தாலும் ஒரு சில பலகாரங்கள் அன்றைக்குசெய்து சாப்பிட்டாதான் பண்டிகை முழுமை அடையும் என்பது உண்மைதான் அக்கா...//
நிச்சயமா :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிபா!
அன்னைக்கு செஞ்சதுல பிடிச்சு போய் இன்னைக்கும் செய்ய சொல்லி ஒரே பிரஸர். நேத்தே எல்லாமே ரெடி பண்ணிட்டேன்... அப்ப தான் ஞாபகம் வந்துச்சு. இங்கே சொல்லவே இல்லையேன்னு :)
ReplyDelete@ ஆமினா...
ReplyDelete//அன்னைக்கு செஞ்சதுல பிடிச்சு போய் இன்னைக்கும் செய்ய சொல்லி ஒரே பிரஸர்//
உங்களுக்கு ப்ரஷ்ஷர் கொடுத்ததோட செய்து கொடுத்துடுங்க ஆமினா. இல்லாட்டி பிரஷ்ஷர் ஏறிடப் போகுது.. :)))
//நேத்தே எல்லாமே ரெடி பண்ணிட்டேன்... அப்ப தான் ஞாபகம் வந்துச்சு. இங்கே சொல்லவே இல்லையேன்னு :)// வந்து சொன்னதற்கு ரொம்ப நன்றி ஆமினா :)
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,
ReplyDeleteஅடடா.... சூப்பர் ஸ்பெஷல் அடையாக இருக்கே....
பார்க்கும்போதே ஆவலாக இருக்கு.இது போல் எங்கள் ஊர் பகுதிகளில் நாங்கள் செய்தது கிடையாது.
இங்கு ஒரு முறை செய்து பார்த்துவிட்டு அப்புறம் ஊரில் போய் செய்து அசத்திட வேண்டியதுதான்.(இன்ஷா அல்லாஹ்)
வாழ்த்துக்கள் அஸ்மா..
அன்புடன்,
அப்சரா.
@ apsara-illam...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,
அடடா.... சூப்பர் ஸ்பெஷல் அடையாக இருக்கே....
பார்க்கும்போதே ஆவலாக இருக்கு.இது போல் எங்கள் ஊர் பகுதிகளில் நாங்கள் செய்தது கிடையாது//
வ லைக்குமுஸ்ஸலாம் அப்சரா! ஆமா நாட்டுப் புறம் பக்கம் இது கிடையாதுதான். சொல்லப்போனால் நாகூர்தான் இதற்கு பிறப்பிடம். நாகூர் சொந்தங்கள் உள்ள காரைக்கால்வாசிகளுக்கு மட்டும் தெரியும். எங்க ஊரிலும்கூட எல்லோருக்கும் இன்றுவரை இது அறிமுகமில்லை.
//இங்கு ஒரு முறை செய்து பார்த்துவிட்டு அப்புறம் ஊரில் போய் செய்து அசத்திட வேண்டியதுதான்.(இன்ஷா அல்லாஹ்)
வாழ்த்துக்கள் அஸ்மா..//
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்து பாருங்க. விருந்தாளிகளுக்கோ அல்லது ஸ்பெஷலா சமைக்கும் அன்று ஒருநாள் செய்து பாருங்க. கருத்திற்கு நன்றி அப்சரா!
அஸ்மா இதுவா என்று தெரியவில்லை..எங்களுக்கு தெரிந்தவர்கள் இப்படி ஒரு அடை செய்து சிக்கன் குழம்புடன் தந்தாங்க..அதை குட்டி குட்டியா பிச்சு குழம்பில் போட்டு சாப்பிடுவது தான் வழக்கம் என்றார்கள்..இன்று தான் அம்மாவிடம் அதை பற்றி பேசிக் கொண்டிருந்தேன் பார்த்தால் அதே போல குறிப்பு..இந்த அளவு எவ்வளவு பேருக்கானது அஸ்மா
ReplyDeleteThalika
@ Thalika
ReplyDelete//..ஒரு அடை செய்து சிக்கன் குழம்புடன் தந்தாங்க..அதை குட்டி குட்டியா பிச்சு குழம்பில் போட்டு சாப்பிடுவது தான் வழக்கம் என்றார்கள்..//
அது ஒவ்வொருவரின் பழக்கத்தைப் பொறுத்தது ருபீனா :) அந்த அடையை கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு குழம்புடன் மிக்ஸ் பண்ணிதான் சாப்பிடுவாங்க. அவங்க சொல்ற மாதிரி குழம்பில் பிட்டு போட்டாலும் நாங்க செய்ற மாதிரி பிட்டு, மேலே குழம்பு ஊற்றி சாப்பிட்டாலும் ஒண்ணுதான் :) ஆனா கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு சாப்பிடும்போது அதன் சூடு குறையாமல், அந்த கிரிஸ்பியும் நல்லா இருக்கும். இனி செய்முறை மாதிரி சாப்பிடும் முறையும் சேர்த்தே கொடுத்துடலாம் :))) (ச்சும்மா..)
//இந்த அளவு எவ்வளவு பேருக்கானது அஸ்மா//
இது சுமார் 6,7 பேர் சாப்பிடலாம். செய்து பார்த்து சொல்லுங்க :) வருகைக்கு நன்றி ருபீனா.
Look delish. Good luck on your entry to halal foodie.
ReplyDeleteCheers and hugs
Ramadan Recipes