அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 23 November 2010

வாழைப்பூ கீரை கடைசல்

இந்த கடைசலில் வாழைப்பூவுடன் முருங்கைக் கீரையும் சேர்ந்திருப்பதால் பல சத்துகள் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் வெள்ளைச் சோறோடு சேர்த்து கொடுக்கலாம்.




தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
முருங்கைக் கீரை - 4 கப்
பாசிப் பருப்பு - 75 மில்லி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இறால் ஸ்டோக் - பாதி (சுமார் 5 கிராம்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு ‍- 1/2 ஸ்பூன்


செய்முறை:

வாழைப்பூவை அதிலுள்ள (தீக்குச்சி போன்ற) நரம்பை நீக்கிவிட்டு, பொடிதாக நறுக்கி உப்பு கல‌ந்த தண்ணீரில் 1/2 மணி நேரம் போட்டு வைக்க‌வும்.




வாண‌லியில் எண்ணெய் விட்டு, அதில் பச்சை மிளகாயைப் பொரியவிட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி போட்டு தாளிக்கவும்.






பிறகு உப்பு தண்ணீரில் ஊற வைத்துள்ள வாழைப்பூவை வடிகட்டி அதனுடன் சேர்த்து நன்கு வத‌க்கவும்.





வாழைப்பூ வதங்கியவுடன் சுத்தம் செய்த முருங்கைக் கீரையை கொட்டி வதக்க‌வும்.




2,3 நிமிடங்கள் வதங்கிய பிறகு வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டி நன்கு கடையவும்.




இப்போது இறால் ஸ்டோக், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் போட்டு மீண்டும் குழையும்வரை நன்கு கடையவும்.






குழைந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்



குறிப்பு:‍-

- பொதுவாக சமையலுக்கு மொந்தன் வாழைப்பூவும், ரஸ்தாலி வாழைப்பூவும் அருமையாக இருக்கும். துவர்ப்பும் குறைவாக இருக்கும்.

- கீரை மற்றும் வாழைப்பூவை சுத்தம் செய்யும்போதே பருப்பை வேகவிட்டால் நேரம் மிச்சமாகும்.

- இறால் ஸ்டோக்கில் உப்பு சேர்த்திருப்பதால் உப்பு போடும்போது (வாழைப்பூவின் அளவைப் பொறுத்து) பார்த்து போடவும்.

- இறால் ஸ்டோக் விரும்பாதவர்கள் வெஜ் ஸ்டோக் சேர்த்துக் கொள்ளலாம்.

22 comments:

  1. ஓஹோ.. வாழைப்பூவோட‌ முருங்கைகீரை சேர்த்துருக்கீங்களா.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. பார்க்க பார்க்க.. அப்படியே சாப்பிடணுன்னு தோணுது.. இதை பாக்கும்போது சின்ன வயசுல எங்க பெரியம்மா வாழைப்பூ உசிலி செய்து தருவாங்க.. ரொம்ப டேஸ்டா இருக்கும்.

    ReplyDelete
  2. வாழைப்பூவை பொடியா நறுக்கி அரிசி களைந்த கழனி தண்ணீரில் ஊற வைப்பாங்க..

    ReplyDelete
  3. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //ஓஹோ.. வாழைப்பூவோட‌ முருங்கைகீரை சேர்த்துருக்கீங்களா.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க.. பார்க்க பார்க்க.. அப்படியே சாப்பிடணுன்னு தோணுது..//

    :-)

    //இதை பாக்கும்போது சின்ன வயசுல எங்க பெரியம்மா வாழைப்பூ உசிலி செய்து தருவாங்க.. ரொம்ப டேஸ்டா இருக்கும்//

    இதுவும் செம டேஸ்ட்டா இருக்கும் நானா! இன்ஷா அல்லாஹ் ஊருக்கு போகும்போது சாப்பிட்டு பாருங்க. வருகைக்கு நன்றி நானா.

    ReplyDelete
  4. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //வாழைப்பூவை பொடியா நறுக்கி அரிசி களைந்த கழனி தண்ணீரில் ஊற வைப்பாங்க..//

    அப்படியா..? ஒருவேளை துவர்ப்பு குறைவதற்காக இருக்குமோ?

    ReplyDelete
  5. இதைலாம் இப்பத்தான் பார்க்கிறேன்.....முருங்ககீரை கடைசல்,வாழைப் பூ கூட்டு, இதுதான் தெரியும்.
    ரொம்ப நன்றி தொகுத்தமைக்கு

    ReplyDelete
  6. அருமை அஸ்மா.காம்பினேஷன் நல்லாயுருக்கு.

    ReplyDelete
  7. வாழைப்பூ +முருங்கைக்கீரை..வித்தியாசமான காம்பினேஷன்.வித்த்யாசமான ரெஸிப்பி.

    ReplyDelete
  8. அஸ்மா என்ன கேமரா கொண்டு எடுக்கறீங்க படங்கள் ரொம்ப அழகா இருக்கு..நல்லதொரு சத்தான குறிப்பும் கூட

    ReplyDelete
  9. @ Mohamed Ayoub K...

    //இதைலாம் இப்பத்தான் பார்க்கிறேன்.....முருங்ககீரை கடைசல்,வாழைப் பூ கூட்டு, இதுதான் தெரியும்.
    ரொம்ப நன்றி தொகுத்தமைக்கு//

    :-) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யூப் நானா!

    ReplyDelete
  10. @ asiya omar...

    //அருமை அஸ்மா.காம்பினேஷன் நல்லாயுருக்கு//

    டேஸ்ட்டும் நல்லா இருக்கும், செய்து பாருங்க ஆசியாக்கா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. @ ஸாதிகா...

    //வாழைப்பூ +முருங்கைக்கீரை..வித்தியாசமான காம்பினேஷன்.வித்த்யாசமான ரெஸிப்பி//

    வாழைப்பூ வாங்கும்போதே முருங்கைக் கீரை நினைப்பும் கூடவே வந்துடும் :) நீங்களும் செய்து பாருங்க ஸாதிகா அக்கா! கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ தளிகா...

    //அஸ்மா என்ன கேமரா கொண்டு எடுக்கறீங்க படங்கள் ரொம்ப அழகா இருக்கு..நல்லதொரு சத்தான குறிப்பும் கூட//

    cyber-shot camera தான் தளிகா. அதுவும்கூட சிலவேளை மேகமூட்டமான குளிர் சீசனாக இருந்தால், வீடெல்லாம் இருட்டா இருக்கும்போது படம் தெளிவா இருக்காது. ஏனென்றால் என் கேமரா 4 pixel தான். அது மாதிரி சமயங்களில் எந்த ரெசிபியும் ஃபோட்டோ எடுக்கவே எரிச்சலாக இருக்கும். 6 மாதங்கள் இருட்டாக இருப்பதால் snap எடுக்கவேண்டிய சமயங்களில் எப்படியோ எடுத்துதானே ஆகணும் :) வருகைக்கு நன்றி தளிகா.

    ReplyDelete
  13. வாழைப்பூல வடை மட்டும்தான் சாப்பிட்டு பழக்கம் அஸ்மா. இன்னொரு த்டவை இங்க இது கிடைச்சா டிரை செஞ்சிட்டு சொல்றேன் :)

    ReplyDelete
  14. @ அன்னு...

    //வாழைப்பூல வடை மட்டும்தான் சாப்பிட்டு பழக்கம் அஸ்மா. இன்னொரு த்டவை இங்க இது கிடைச்சா டிரை செஞ்சிட்டு சொல்றேன் :)//

    இன்னொரு தடவை கிடைச்சாவா...? ரொம்ப அரிதாதான் கிடைக்குமா அன்னு அங்க?! ஓகே, இன்ஷா அல்லாஹ் கிடைத்தால் கண்டிப்பா இதுபோல் செய்து பாருங்க. நன்றி அன்னு.

    ReplyDelete
  15. எங்க வீட்டுக்காரம்மா கண்ணுல இந்த பதிவு பட்டுற கூடாது யாஅல்லாஹ் என்ன காப்பத்து
    அவுக படிக்கிறது மாதிரி இதுவரை செஞ்சு தந்தது கேடயாது
    இதுல நான் டெஸ்ட் பாத்து சொல்லனும்
    ரோம்ப கஷ்டம்

    ReplyDelete
  16. இரால் ஸ்டோக்கைப் போடுவதற்கு பதில் ஃபிரெஷா ராலையேப் போட்டால்?? இங்கே வாழைப்பூ ரொம்ப அபூர்வமா கிடைக்குது (கிலோ எட்டு ரியால்) இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்க சொல்லிட வேண்டியது தான். குட் காம்பினேசன். வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  17. அய்யூப் நானா ?

    நீங்கள் இல்லை,நாந்தேன் அயுப்..ஹா..ஹா..இது எப்படி இருக்கு ?
    நானும் பார்த்த்கிட்டு இருக்கேன் எப்பப் பார்த்தாலும் அயுப் நானா ...அயுப் நானா என்று கேக்குறியே.அதான்..

    ReplyDelete
  18. @ ஹைதர் அலி...

    //எங்க வீட்டுக்காரம்மா கண்ணுல இந்த பதிவு பட்டுற கூடாது யாஅல்லாஹ் என்ன காப்பத்து
    அவுக படிக்கிறது மாதிரி இதுவரை செஞ்சு தந்தது கேடயாது
    இதுல நான் டெஸ்ட் பாத்து சொல்லனும்
    ரோம்ப கஷ்டம்//

    :)))) போனாப்போகுது விடுங்க! இத மட்டும் கொஞ்சம் செய்து கேட்டுப் பாருங்க. வருகைக்கு நன்றி ச‌கோ.

    ReplyDelete
  19. @ எம் அப்துல் காதர்...

    //இரால் ஸ்டோக்கைப் போடுவதற்கு பதில் ஃபிரெஷா ராலையேப் போட்டால்?? இங்கே வாழைப்பூ ரொம்ப அபூர்வமா கிடைக்குது (கிலோ எட்டு ரியால்) இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்க சொல்லிட வேண்டியது தான். குட் காம்பினேசன். வாழ்த்துகள் சகோ!//

    ஃபிரெஷ் இறால் போடலாம். ஆனால் வெஜ் சாப்பிடுவதுபோல் ஃபீலிங் இருக்காது :) அதான் வேறொன்றுமில்லை. இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  20. @ Mohamed Ayoub K...

    //அய்யூப் நானா ?

    நீங்கள் இல்லை,நாந்தேன் அயுப்..ஹா..ஹா..இது எப்படி இருக்கு ?//

    நல்லா இருக்கு நாட்டாமை :))

    //நானும் பார்த்த்கிட்டு இருக்கேன் எப்பப் பார்த்தாலும் அயுப் நானா ...அயுப் நானா என்று கேக்குறியே.அதான்..//

    யா அல்லாஹ்.. எங்க ஊர் வழக்குல பேச முடியலயே...! நானா= அண்ணன்= காக்கா= தமயன்= சகோதரன்= etc... ஸ்ஸ்ஸ்... முடியல :)

    ReplyDelete
  21. சூப்பரான குறிப்பு , படங்கள் பளிசின்னு இருக்கு.

    ReplyDelete
  22. @ Jaleela Kamal...

    //சூப்பரான குறிப்பு , படங்கள் பளிசின்னு இருக்கு//

    தங்களின் கருத்தும் வருகையும் சந்தோஷமாக உள்ளது. நன்றி ஜலீலாக்கா!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை