அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 26 November 2010

செல்ஃபோன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி

ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை இப்போது அவசியமாகிவிட்டன. அவசியத் தேவைகளுக்கான பொருட்கள் அதிகமாகிப் போனதால், அத்துடன் அவற்றைப் பாதுகாக்கவேண்டிய சூழலும் அவசியமாகிவிட்டது. அதனால் நமக்கு அவசியமான பொருட்களை பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்துக் கொள்வதும் இப்போது அவசியமல்லவா..? சரி, விஷயத்திற்கு வருவோம்!

பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் பொருட்கள் என்று கருதப்பட்டு, இப்போது அனைவராலும் புழங்கப்படக்கூடிய பொருட்களின் பட்டியலில் இன்று செல்ஃபோன் முக்கிய இடம் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே! செல்ஃபோன் புழங்குவதை ஆச்சரியமாக வாய்பிளந்து பார்த்த காலம் மாறி, இப்போது ஏழை எளிய மக்களும் சுல‌பமாக பயன்படுத்தும் வகையில் மிகவும் நியாயமான விலைகளில், குறைவான‌ கட்டணங்களோடு கிடைப்பது சந்தோஷமான விஷய‌ம்தான். இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முத‌ல், பால்காரர்கள், பஞ்சு மிட்டாய் - முறுக்கு வியாபாரிகள், தெருக்களில் வந்து மீன் விற்கும் மீன்காரம்மாக்கள் உட்பட எல்லோர் கையிலும் செல்ஃபோனைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது! அதே சமயம், செல்ஃபோன்கள் இவ்வளவு எளிதாகக் கிடைக்கும்போது அவற்றைத் திருடுபவர்கள் மட்டும் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் என்றில்லை, எல்லா நாடுகளிலும் இந்த செல்ஃபோன் திருட்டு நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


'திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பல்லவியை எதுவரைதான் பாடிக் கொண்டு இருப்பது? முதலில் செல்ஃபோனுக்கு மட்டுமாவது இந்த நிலை மாறட்டுமே! அதற்காகதான் 'செல்ஃபோன் திருடன் திருந்தாவிட்டால் அந்த செல்ஃபோனே அவனுக்கு ஆப்பு வைக்கும்' என்ற இந்த‌ செய்தி!

இதற்கு முன்னால் சிலர் இதைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் மெயிலில் வந்த இந்த செய்தி எனக்கு புதியதாக இருந்ததால், இதுவரை அறிந்திராதவர்கள் பயன்பெறட்டும் என்று அந்த‌ தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இதோ அந்த செய்தி:

உங்களின் MOBILE PHONE தொலைந்துவிட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.காவல் நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்றுஅழைக்கப்படும்(INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம். இந்த IMEI NO தான் நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது.உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கிக் கொள்வார்கள். (இந்த முதல் பகுதி முன்னரே அனைவரும் அறிந்ததுதான். இதோ தொடர்ந்து வரும் இரண்டாவ‌து பகுதிதான் புது செய்தி)

GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாடு முடக்கப்படலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது. எனவே அது சிக்கலான‌ விஷயம்.

அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து தன்னுடைய‌ SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும். எனவே அவர் தப்பிக்க முடியாது. எத்தனை முறை அவர் SWITCH ON/OFF செய்தாலும் அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவலாக வந்துக்கொண்டே இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துக்கொள்ளுங்கள்.

GUARDIAN software ஐ DOWNLOAD செய்ய இங்கே CLICK செய்யுங்கள்.

இதைப் பயன்படுத்திப் பார்த்து, பலன் இருந்தால் அனைவரோடும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் செல்ஃபோன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

14 comments:

  1. @ ராஜவம்சம்...

    //பயனுள்ள தகவல்//

    பயன்பட்டது சந்தோஷம். வருகைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

    நல்ல தகவல் அஸ்மா. இதுவரை கேள்விபடாதவையாகவே இருந்தது .......

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு அஸ்மா.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியவை.

    ReplyDelete
  4. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

    நல்ல தகவல் அஸ்மா. இதுவரை கேள்விபடாதவையாகவே இருந்தது .......//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... நீங்களும் புதிதாக கேள்விப்பட்டதில் சந்தோஷம் :) நன்றி ஆமினா!

    ReplyDelete
  5. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //நல்ல பகிர்வு அஸ்மா.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியவை//

    நிச்சயமா..! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானா.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. @ asiya omar...

    //பகிர்வுக்கு நன்றி//

    வருகைக்கு நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  8. @ vanathy...

    //very good informations//

    நன்றி வானதி.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  10. @ Hasan1...

    //பயனுள்ள தகவல்//

    வருகைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  11. http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
    அஸ்மா,உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  12. @ asiya omar...

    //அஸ்மா,உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்//

    மிக்க சந்தோஷம், உங்கள் விருதைப் பெற்றுக் கொண்டேன். உங்களின் அன்பான விருதுக்கு நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை