"டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கும்" என மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் நடந்த சிறுநீரகவியல் துறை முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில் சென்னை டாக்டர் முத்துசேதுபதி பேசினார்.
அவர் கூறியதாவது : இன்று அதிக மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. டாக்டர் ஆலோசனையில்லாமல், வலி மாத்திரைகளை அதிகமாக எடுப்பதால் சிறுநீரக நோய் வரும். சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முறையாக பரிசோதனை செய்து,டாக்டர் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொண்டால் இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிறுநீர், ரத்தப் பரிசோதனைகளைச் செய்யவேண்டும். சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது வலியால் அழுவர். சிலசமயம் சிறுநீரில் ரத்தம் வெளியாகும். இவ்வாறு இருந்தால் டாக்டரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கால்வீக்கம்,எழுந்தவுடன் முகம் வீங்குதல் போன்றவை சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள் என்றார். டாக்டர்கள் ராஜசேகரன், ஜெயகுமார், முரளி, சம்பத்குமார் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
source: dinamalar
பயனுள்ள பதிவு
ReplyDeletewww.samaiyalattakaasam.blogspot.com
@ Jaleela Kamal...
ReplyDelete//பயனுள்ள பதிவு//
வருகைக்கு நன்றி ஜலீலாக்கா!
பயனுள்ள பதிவு அஸ்மா.ஆமாம் என் கணவர் கூட நான் வந்தபின்பு தான் இதனை பற்றி பயப்பட ஆரம்பித்திருக்கிறார்..அதற்கு முன் தொட்டதுக்கெல்லாம் விழுங்குவாராம்.பெண்பிள்ளைகளுக்கு மாதாந்திர தொந்தரவுக்கு கூட பெற்றோர்களே வலிநிவாரணியை மருத்துவர் ஆலோசனையின்றி சாதாரணமாக கொடுக்கிறார்கள்..
ReplyDelete@ தளிகா...
ReplyDelete//பெற்றோர்களே வலிநிவாரணியை மருத்துவர் ஆலோசனையின்றி சாதாரணமாக கொடுக்கிறார்கள்..//
இந்த தவறுகள் எல்லோரிடத்திலும் சர்வ சாதாரணமாக நடக்கிறது தளிகா. 'பாராசிடமால்'தானே என்று தன் இஷ்டத்துக்கு எடுத்து போட்டுக் கொள்கிறார்கள். இதனால் பலவித பாதிப்புகளும் கண்கூடாக பலபேருக்கும் நடந்துள்ளது. மேலேயுள்ள செய்தியுடன் அவற்றையெல்லாம் விரிவாக எழுதலாம் என்றிருந்தேன். நேரமில்லாமல் அப்படியே கொடுத்துவிட்டேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்.
தன்னால மாத்திரை கேட்டா மெடிக்கலில் உள்ளவங்க கொடுக்காம நிராகரிக்கணும். இல்லைன்னா பின்விளைவு அதிகமுள்ள மாத்திரைகளை டாக்டர் அனுமதி இல்லாமல் கொடுக்க கூடாது என்ற வரமுறை வகுக்கணும்....
ReplyDeleteஇப்படியே கொடுத்து பழக்கம் பண்ணதுனால தான் சின்னதா தல வழிக்குதுன்னு மாத்திர போட ஆரபிச்சு பெருசா தலைவழி வரும் போது டாக்டர்கிட்ட போறாங்க. கேன்சரால் பாதிக்கப்பட்ட என் உறவினரும் கூட இப்படியே தான் மாத்திர உட்கொண்டு கடைசி முற்றிய தருணத்தில் மருத்துவரிடம் சிகிச்சை பெற போனார். இத்தகைய விஷயங்களில் கண்டிப்பாக கவனம் தேவை!!!!
நல்ல பகிர்வு அஸ்மா. மிக்க நன்றி
பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி..
ReplyDelete@ ஆமினா...
ReplyDelete//தன்னால மாத்திரை கேட்டா மெடிக்கலில் உள்ளவங்க கொடுக்காம நிராகரிக்கணும். இல்லைன்னா பின்விளைவு அதிகமுள்ள மாத்திரைகளை டாக்டர் அனுமதி இல்லாமல் கொடுக்க கூடாது என்ற வரமுறை வகுக்கணும்....//
இங்கு(ஃபிரான்ஸில்)நீங்கள் சொல்வதுபோல் லிமிட் வைத்திருக்கிறார்கள். என்னதான் தலைகீழ நின்னு கேட்டாலும் அந்த மாதிரி டேப்லெட்ஸ் Doctor's Prescription இல்லாமல் தரமாட்டார்கள். ஆனா நம்ம மக்களுக்கு சொல்லியா கொடுக்கணும்..? ஏற்கனவே டாக்டர் எழுதிக் கொடுத்த டேப்லெட்ஸை வைத்திருந்து, அடுத்த முறை தேவைப்படும்போது தன்னால எடுத்து போட்டுக் கொள்கிறார்கள் :( என்னத்த சொல்ல...!
கருத்துக்கு நன்றி ஆமினா!
@ ஹரிஸ்...
ReplyDelete//பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி..//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
நோய் தானா வருவது இல்லை !
ReplyDeleteவாய் கண்டதை உண்பதால் நோயிக்கு இல்லை எல்லை !
சுயமா மருந்து உட்கொள்பவர் !
நயமாய் விருந்தை உண்டவர் !
பல்லுக்கும்,அவர் மேலுக்கும் மருத்துவர்தான் பணிக்காரர் !
சொல்லுக்கும், செயலுக்கும் ஒப்பு இல்லை, அவர்தான் பணக்காரர் !
இல்லாத ஏழைக்கு, மருத்துவ கூடம்.. இமய மலை !
ஏற முடியாத சூழ்நிலையில் !
மருந்து கடைதான் பூஞ்சோலை !
பத்து ரூபா மருந்திற்காக !
பித்து பிடித்த மருத்தவரிடம் போனால் !
சொத்து சுகங்களை விர்க்கவேண்டி வரும் !
ஒற்றை குடிசையை விற்று விட்டு !
ஒற்றையடி பாதையிலா போவது ?
கருணை வையுங்கள்... எங்கள் மீதும் !
மறுத்தவர் கட்டணம் வேண்டாம் என்று !
நாங்களும் உங்களைப் போன்று மனிதர்கள்தான் !
வறுமையும்,கொடுமையும்,கண்ணீரும்தான்,எங்களின் சொத்து !
ஏழை வீடு,எங்கள் வீடு !அதான் கருத்து சொல்ல வரவில்லையோ ?
விளக்கியதற்கு நன்றி !
@ அந்நியன் 2...
ReplyDelete//ஏழை வீடு,எங்கள் வீடு !அதான் கருத்து சொல்ல வரவில்லையோ?//
அப்படிலாம் இல்ல :) நாட்டாமையே இப்படி சொன்னா எப்படி? :) தங்களின் கருத்தான கவிதை அருமை! நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசமுகத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு. அதிகமாக ஏழைகளே டாக்டரிடம் சென்று சிகிச்சைக்காணாமல் இவ்வாறு எதிர்ப்படும் மெடிக்கல் ஷாப் போன்றவற்றில் தானாக மருந்து வாங்கி உட்கொள்கிறார்கள் இதற்கு அடிப்படைக்காரணம் அவர்களின் வாழ்வின் வசதிக்குறைப்பாடே அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆக்கங்கள் தந்ததுப்போல அங்காங்கே இலவசமாக ஏழை மக்கள் பயன்பெறும் பொருட்டு நடைப்பெறும் மருத்துவ முகாம் குறித்த செய்தியையும் இன்ஷா அல்லாஹ் வெளியிட்டால் என்னைப்போன்ற ஏழைக்கள் பலரும் படித்து பயனடைய ஏதுவாக இருக்கும்
@ G u l a m...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இதற்கு அடிப்படைக்காரணம் அவர்களின் வாழ்வின் வசதிக்குறைப்பாடே//
ஏழைகள்தான் அதிகமாக இதுபோல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், இதில் வசதியுடையவர்களும் விதிவிலக்காக இல்லை என்பதும் நிதர்சனமான உண்மையே! டாக்டரிடம் சென்று, பல மணி நேரங்கள் கூட்டத்தில் காத்திருந்து, பிறகு பர்மாஸியிலும் கூட்டத்தில் நின்று மருந்து வாங்கி வரணுமே என்ற அலுப்பினால் தங்கள் இஷ்டத்துக்கு டேப்லெட் போட்டுக் கொள்கிறார்கள்.
//அங்காங்கே இலவசமாக ஏழை மக்கள் பயன்பெறும் பொருட்டு நடைப்பெறும் மருத்துவ முகாம் குறித்த செய்தியையும் இன்ஷா அல்லாஹ் வெளியிட்டால்..//
பொது சேவைகள் சிறிய அளவில் என்றாலும் நம்மால் முடிந்தவரை செய்வோம், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தம்பி.