இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்!
அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சகனுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!
இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே... ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் என் உறவுகள் அத்தனை பேருக்கும் அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள்வானாக!
இதுவரை ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் போன (என்னைப் போன்ற :( )அனைவருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!
அன்பு சகோதரிக்கு தியாக திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயங்கனிந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDelete@ ஹைஷ்126...
ReplyDelete//அன்பு சகோதரிக்கு தியாக திருநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்//
முதலாவதாக வந்த தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹைஷ் அண்ணா!
@ kavisiva...
ReplyDelete//ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் அஸ்மா!//
வாழ்த்து சொன்ன தோழி கவிக்கு மிக்க நன்றி!
@ Mohamed Ayoub K...
ReplyDelete//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்//
நன்றி சகோ! அதேபோல் தாங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தினருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்!
@ மின்மினி RS...
ReplyDelete//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி! உங்களோடு உங்கள் குடும்பத்தினரும் சந்தோஷமாக இந்நன்னாளைக் கொண்டாட என் இனிய வாழ்த்துக்கள்!
@ Barakath...
ReplyDelete//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயங்கனிந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!//
நன்றி பரக்கத்! நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாகக் கொண்டாட என் இனிய வாழ்த்துக்கள்!
This comment has been removed by the author.
ReplyDeleteபிரான்ஸ்-இல் என்று பெருநாள் அஸ்மா அக்கா..?
ReplyDeleteHasan1
@ Hasan1...
ReplyDelete//பிரான்ஸ்-இல் என்று பெருநாள் அஸ்மா அக்கா..?//
இன்று அரஃபா நோன்பு, நாளை(செவ்வாயன்று)பெருநாள் சகோ.
இதுவரை ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் போன (என்னைப் போன்ற :( )அனைவருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!//
ReplyDeleteஆமீன்....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈதுல் அல்ஹா நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஈதுல் அல்ஹாவுக்குப் பதிலா, ஈதுல் அல்வானு, சாதிக்கா அக்கா அடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்,அதான் பின் வலிச்சிட்டாங்கள் முதல் வாழ்த்தை.
ReplyDeleteஆமா..அத்ஹாவா..இல்லை அல் ஹாவா?
ReplyDeleteஇங்கு இந்தியா-வில் 17(புதன்)என்று சிலரும், 18(வியாழன்) என்று சிலரும் குழப்புகிரார்களே...?:(
ReplyDeleteHASAN1
@ Anonymous...
ReplyDeleteவருகைக்கு நன்றி!
@ ஸாதிகா...
ReplyDelete//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஈதுல் அல்ஹா நல் வாழ்த்துக்கள்//
நன்றி ஸாதிகா அக்கா! என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் குடும்பத்தாருக்கும் சமர்ப்பித்துவிடுங்கள் :)
@ Mohamed Ayoub K...
ReplyDelete//ஈதுல் அல்ஹாவுக்குப் பதிலா, ஈதுல் அல்வானு, சாதிக்கா அக்கா அடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்,அதான் பின் வலிச்சிட்டாங்கள் முதல் வாழ்த்தை//
இல்ல சகோ, அவங்க மின்மினி சகோவுக்கு அடித்ததை தவறுதலாக இங்கு போட்டுவிட்டதால் டெலிட் பண்ணியுள்ளார்கள் :)
//ஆமா..அத்ஹாவா..இல்லை அல் ஹாவா?//
அரபி வார்த்தையை தமிழில் சொல்லும்போது பல விதமாக மக்கள் உச்சரிக்கிறார்கள். "அத்ஹா", "அள்ஹா", "அழ்ஹா", "அல்ஹா"...இப்படி! அந்த எழுத்து தமிழில் இல்லாததே இதற்கு காரணம். அதனால் உங்களுக்கு அரபியில் இங்கே தருகிறேன். "عيد الأضحى" இதில் உள்ள "ض" என்ற எழுத்தை தமிழ் எழுத்துக்களில் எழுதும்போது கவனிப்பதைவிட வாயால் உச்சரிக்கும்போது சரியாக சொன்னால் போதும்.
@ HASAN1...
ReplyDelete//இங்கு இந்தியா-வில் 17(புதன்)என்று சிலரும், 18(வியாழன்) என்று சிலரும் குழப்புகிரார்களே...?:(//
பிறை விஷயத்தில் நபிவழியில் முடிவெடுக்காமல், அவரவர்களுக்கு சரியென்று தோன்றுவதைக் கடைப் பிடிப்பதால் வரும் விளைவுகள் இவை! நீங்கள் "அரஃபா நோன்பு" பற்றிய விளக்கங்களைப் படித்தால் போதுமான தெளிவு உங்களுக்கு கிடைக்கும் என நினைக்கிறேன். படித்துவிட்டு சந்தேகம் இருந்தால் கேளுங்க சகோ. சரியா?
அழகிய தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியின் வரலாற்றை மற்றவர்கள் புரியும் படி அழகாக சொல்லியிருக்கிங்க..
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@ சிநேகிதி...
ReplyDelete//அழகிய தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியின் வரலாற்றை மற்றவர்கள் புரியும் படி அழகாக சொல்லியிருக்கிங்க..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்//
நன்றி ஃபாயிஸா! நானும் என் அன்பான நல்வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும், கதீஜா & ஃபேமிலிக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete@ Abdul Basith...
ReplyDelete//தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!//
வாழ்த்துக்கு நன்றி தம்பி! உங்களுக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் என் சலாமும் வாழ்த்துக்களும் கூறிவிடுங்கள்.
@ ஆமினா...
ReplyDelete//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆமினா! என்னுடைய இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் தோழி.
அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளுக்கு தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete@ anbu...
ReplyDelete//அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளுக்கு தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.