முதல் பாகத்தைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.
சென்ற பாகத்தில் ஸ்டார் (ஒயர்)கூடை பின்னலின் இரண்டாவது லைன் ஆரம்பிப்பது வரை பார்த்தோம். தொடர்ந்து அந்த வரியைப் பின்னி முடித்த பிறகு எவ்வாறு மூன்றாவது லைனுக்கு செல்வது என்பதிலிருந்து, அடுத்தடுத்து வரக்கூடிய வரிகளை எப்படி பின்னவேண்டும் என்பதை சற்று நிதானமாக பார்ப்போம். ஏனெனில் இந்த ஸ்டார் கூடை பின்னலில் முதல் 3 வரிகள் முடியும்வரை ஒவ்வொரு முனை திருப்பும்போதும் வித்தியாசமான இணைப்புகள் வரும். (இந்த பாகத்தில் கூடைக்கு 'அடி போடுவது' நிறைவடையும்.)
இரண்டாவது லைனைப் பின்னி முடித்த பிறகு அதே சுற்று ஒயரைக் கொண்டு , (வளைத்து) முதல் லைனின் ஒயரோடு இணைத்து சோவி போடவும்.
இப்போது இரண்டு லைன்களும் சேர்ந்து ஒரு சோவி உருவான இடத்தில் மூன்று சோவிகள் முக்கோண வடிவில் இணைந்திருக்கும். அடுத்து அந்த சுற்று ஒயரின் மீது முதல் லைனின் முதல் சோவி ஒயரை இணைத்து இன்னொரு சோவி பின்னவும்.
இந்த சோவிதான் 3 வது லைனின் முதல் சோவியாகும். அப்படியே 3 வது லைன் முழுவதும் பின்னி முடிக்கவும்.
3 லைன்களும் முடிந்த பிறகு அந்த சுற்று ஒயர் மீது நடு லைனின் ஒயரை இணைத்து ஒரு சோவி பின்னவும்.
இப்போது வலது பக்க லைனின் அடுத்ததாக உள்ள (முதல்) சோவியின் முடிச்சைத் தளர்த்திக் கொண்டு, சுற்று ஒயரை அதனுள் வரும்படி இணைத்துப் பின்னவும். அதாவது 3 வது லைன் வளைந்து வந்து முதல் லைனின் முதல் சோவியுடன் இணையவேண்டும். (விளக்கத்திற்கு படத்தைப் பெரிதாக்கி பார்க்கவும்)
அதற்கு பிறகு அப்படியே 4 வது லைனையும் தொடரவும்.
இப்போது பின்பக்கம் திருப்பிப் பார்த்தால் சுற்று ஒயரை முதல் லைனுடன் இணைத்த இடம் இவ்வாறு இருக்கும்.
இனி 10 லைன்கள் வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பின்னலாம். அதாவது முதலில் ஆரம்பித்த லைனை நடு லைனாக கணக்கு வைத்துக் கொண்டு, அதன் இரு பக்கமும் 10 வரிகள் என மொத்தம் 20 வரிகள் பின்னி முடிக்கவும். இத்துடன் 'அடி போடுவது' முடிந்தது. இப்போது சுற்று ஒயரை 4 இன்ச் விட்டு வெட்டிவிடவும். இனி சுற்று ஒயரும் தேவைப்படாது.
இப்போது அடிப்பாகத்தின் 2 முனைகளும் கூம்பு வடிவில் வந்து இருக்கும். அடுத்து, வெட்டிய சுற்று ஒயரையும் இதன் 2 பக்கங்களிலும் இருக்கக்கூடிய நடு லைனின் ஒயரையும் பின்னலுக்குள் உள்பக்கமாக சொருகவும்.
குறிப்பு: அடி போடுவதுதான் கூடைக்கு அஸ்திவாரம் என்பதால் மிக கவனமாக பின்னவேண்டும். ஒரு சோவி மாறினாலும் கூடை சரியான வடிவில் வராது.

//குறிப்பு: அடிபோடுவதுதான் கூடைக்கு அஸ்திவாரம் என்பதால் மிக கவனமாக பின்னவேண்டும். ஒரு சோவி மாறினாலும் கூடை சரியான வடிவில் வராது//
ReplyDeleteஎனக்கு இதான் வரவே வராது..வயரை வீனாக்கிடுவேன்னு சொல்லி கையில தரவே மாட்டாங்க...!!
எப்படியும் நாலு ஆபரேஷனாவது செஞ்சிதான் இதுல டாக்டர் பட்டம் வாங்க வேண்டி வருமோ..!! :-)
@ ஜெய்லானி...
ReplyDelete//எனக்கு இதான் வரவே வராது..வயரை வீனாக்கிடுவேன்னு சொல்லி கையில தரவே மாட்டாங்க...!!//
நன்கு கவனித்து செய்தால் நீங்களும் தைரியமா போடலாம் சகோ.
//எப்படியும் நாலு ஆபரேஷனாவது செஞ்சிதான் இதுல டாக்டர் பட்டம் வாங்க வேண்டி வருமோ..!! :)//
:)))) அவ்வளவு கஷ்டமெல்லாம் இல்ல சகோ :) வருகைக்கு நன்றி.
படங்களுடன் அருமையான விளக்கம்,கூடை கலர் காம்பினேஷன் அழகு.
ReplyDeleteமிக அருமையான விளக்கம் அஸ்மா. , பழைய நினைவு வருது, இப்ப எங்க கூடை பிண்ண நேரம் இருக்கு. பார்த்ததும் ஆசையா இருக்கு,
ReplyDelete@ asiya omar...
ReplyDelete//படங்களுடன் அருமையான விளக்கம்,கூடை கலர் காம்பினேஷன் அழகு//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஆசியாக்கா.
@ Jaleela Kamal...
ReplyDelete//மிக அருமையான விளக்கம் அஸ்மா. , பழைய நினைவு வருது, இப்ப எங்க கூடை பிண்ண நேரம் இருக்கு. பார்த்ததும் ஆசையா இருக்கு//
எல்லோருக்கும் 'ஒயர் கூடை பின்னல்' பழைய நினைவாகவே ஆகிவிட்டது ஜலீலாக்கா :)) நேரமில்லாவிட்டாலும் சொல்லிக் கொடுக்கவாவது பின்னுவோமே என்றுதான் பின்ன ஆரம்பித்தேன் :) வருகைக்கு நன்றி.
akka chinna vayasula nanum koodai pinni iruken. 6th, 7th padikumpothu. clg vanthathum atha pathi maranthu poiten. enga patium athaium intha koodai pinnuvanga. ippa ketta maranthutatha solranga.computer vangina nalla irunthu theduren kidaikala. inniki kalaila chumma koduthu parthen. nedu nal thedia puthayal kidaitha santhosam enaku. innike arambika poren.21/2 mr sonnenga. enta 30cm scale than iruku. athuku ethana suthu edukanum? akka please seekirame next segment podunga. we are waiting for gthat.pls.advance ramalan valthukal.clg mudinjathu. v2la irunthu bore adikuthenu ninaichen. ini oru koodai podura varai i am busy. appointment vangithan enna pakanum. thankyou
ReplyDelete//akka chinna vayasula nanum koodai pinni iruken. 6th, 7th padikumpothu. clg vanthathum atha pathi maranthu poiten. enga patium athaium intha koodai pinnuvanga. ippa ketta maranthutatha solranga.computer vangina nalla irunthu theduren kidaikala. inniki kalaila chumma koduthu parthen. nedu nal thedia puthayal kidaitha santhosam enaku//
Deleteநீங்கள் நீண்ட நாட்களாக தேடியது என் வலைப்பூவில் உங்களுக்கு கிடைத்ததில் மிக்க சந்தோஷம் :)
//innike arambika poren.21/2 mr sonnenga. enta 30cm scale than iruku. athuku ethana suthu edukanum?//
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 2½ மீட்டர் என்றால் 30 செ.மீ. ஸ்கேலால் 8 முறை அளந்து, அதனுடன் இன்னொரு 10 செ.மீ. கூடுதலாக சேர்த்து வெட்டிக் கொள்ளுங்கள்.
//akka please seekirame next segment podunga. we are waiting for gthat.pls//
மொத்தம் 4 பாகங்களும் போட்டு முடிந்து, கூடை ரெடியானதை நீங்கள் பார்க்கவில்லையா சகோதரி? மேலே கடைசிப் பகுதியில் எல்லா Link களும் கொடுத்துள்ளேன் பாருங்கள்.
//v2la irunthu bore adikuthenu ninaichen. ini oru koodai podura varai i am busy. appointment vangithan enna pakanum. thankyou//
:)
Nellikkai pinnal koodai therinthal sollungal please.
ReplyDeleteNellikkai pinnal koodai vilakkavum please.
ReplyDeleteநெல்லிக்கூடை பின்னலும் தெரியும். ஆனால் இங்கே கூடை ஒயர் கிடைப்பதில்லை. மீதமிருக்கும் ஒயரில் பின்ன முடிந்தால் விளக்கப் படத்துடன் தர முயற்சி செய்கிறேன். வருகைக்கு நன்றி.
DeleteHi Asma
DeleteDo you have instructions on nellikoodai? If you have, could you please post it?
thank you
ReplyDeleteBeautifully made
ReplyDeletethank u..
Deleteசாதாரண வயா் கூடை 32-32 என்ற அளவில் பின்னுவதற்கு எத்தனை அடி வயா் வெட்ட வேண்டும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteசாதாரண வயா் கூடை 32-32 அளவில் பின்னுவதற்கு எத்தனை அடி வயா் வெட்ட வேண்டும்.
ReplyDeleteதங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
mahalakshmi..!
Delete32-32 என்ற அளவில் பின்னுவதற்கு என்றால், இது கூடையின் அகலத்தைக் குறிப்பிடுகிறீர்களா? உயரத்தையா?
வெட்டவேண்டிய ஒயரின் அளவைப் பற்றி கேட்பதாக இருந்தால் எவ்வளவு உயரமுள்ள கூடை தேவை எனக் குறிப்பிடுங்கள்.
வெட்டவேண்டிய ஒயரின் எண்ணிக்கையைப் பற்றி கேட்பதாக இருந்தால் எவ்வளவு அகலமுள்ள கூடை தேவை எனக் குறிப்பிடுங்கள்.
Amsa
ReplyDeleteThis is a great posting. I've been looking for the indian wire basket instructions for a while and finally found it. I'm glad that you had such a wonderful posting. I'm also looking for nellikai and biscuit knot basket. Are you familiar with it if yes, could you please provide instructions for those designs as well? Thanks and keep blogging.
Do these instruction exist anywhere in English? lorraineinkalispell@hotmail.com
ReplyDeleteungaluku sivan kan koodai poda theriyuma? Therinja pls solli thanga. Atleast antha knot podavathu solli thanga
ReplyDeleteWire epadi ottu podrathu?
ReplyDelete
ReplyDeleteKoodai kaipidi appadi poduvathu solli thanga
ReplyDeleteKoodai handle appadi poduvathu solli thanga
Sivan kan koodai silliness tharavum
ReplyDeletePlease upload the video how to stitch the star shaped koodai
ReplyDeletePlease upload the video how to stitch the star shaped koodai
ReplyDelete