இந்த தேங்காய்ப்பூ சோமாஸ் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய இல்லங்களில் மிகவும் பிரபலமானது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவைக் கொண்டது. (முறையாக பாதுகாத்தால்) 1 வாரம் வரைகூட வைத்து சாப்பிடலாம்.
[குறிப்பு: இதனுள் வைக்கப்படும் உள்ளடத்தை (பூரணத்தை) சுவையாக செய்தால்தான் சோமாஸ் சுவையாக அமையும். அத்தகைய சுவையான உள்ளடம் செய்முறை, என் (மூத்த) சிறிய தாயார் சொல்லித்தந்த முறை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்]
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 500 மில்லி
பசு நெய் - 50 மில்லி
ரோஜா பன்னீர் - 2 ஸ்பூன்
சீனி - 100 கிராம்
பொட்டுக் கடலை - 1 பிடி
கிஸ்மிஸ் - 1 பிடி
முந்திரிப் பருப்பு - 1 பிடி
கசகசா - 2 ஸ்பூன்
கறுப்பு எள் - 2 ஸ்பூன்
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
உள்ளடம் (பூரணம்) செய்முறை:
1-3. ஒரு வாணலியில் பசுநெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொண்டு, கிஸ்மிஸை வறுக்கவும். அதே நெய்யில் கசகசா மற்றும் கறுப்பு எள்ளை வாசம் வரும்வரை (தீயாமல்) வறுக்கவும்.
4. பொட்டுக் கடலையை வறுப்பதாக இருந்தால், கசகசா & கறுப்பு எள்ளை வறுப்பதற்கு முன்பே வறுத்து எடுத்துக் கொள்ளவும். (வறுக்காமலும் சேர்க்கலாம்.)
1. அதே வாணலியில் தேங்காய்ப்பூவை 3 ஸ்பூன் நெய்விட்டு அடுப்பை நிதானமாக வைத்து கைவிடாமல் தொடர்ந்து வறுக்கவும்.
2. கோல்டன் கலரில் வந்தவுடன் உப்பு, ஏலப்பொடி சேர்த்து பிரட்டி வேறு பாத்திரத்தில் உடனே மாற்றவும். (பாத்திரத்தை மாற்றாமல் வைத்திருந்தால் அடிப்பக்கத்தில் உள்ள தேங்காய்ப்பூ அந்த சூட்டில் கருகிவிடும்.)
1. பிறகு அந்த வாணலியை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தமாக துடைத்துவிட்டு சீனியும், அதில் பாதியளவு தண்ணீரும் சேர்த்து, ரோஜா பன்னீர் சேர்க்கவும்.
2. சீனி நன்கு கரைந்து பாகு கொதிக்கும்போது வறுத்து வைத்துள்ள தேங்காய்ப் பூவைக் கொட்டி, பூ முழுவதும் பாகு படும்படி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
3. ஏற்கனவே நெய்யில் வறுத்து வைத்துள்ள பொருட்களை இதனுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
1. இப்போது இந்த உள்ளடத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு மரக் கரண்டியால் நன்கு அழுத்தவும்.
2. ஆறி, இறுகும்வரை க்ளியர் ராப் பேப்பர் போட்டு மூடி வைக்கவும். (இந்த உள்ளடத்தை முந்திய நாள்கூட செய்து வைக்கலாம்.)
மாவு தயார் பண்ணி மடிக்கும் முறை:
1. தேவையான பொருட்கள்:
மைதா - 600 மில்லி
தண்ணீர் - 150 மில்லிக்கு சற்று கூடுதலாக
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
சீனி - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
2. கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பூரிமாவுபோல் பிசைந்து, எலுமிச்சை அளவுக்கு சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
3. சப்பாத்திக் கட்டையில் சிறிது மைதாவைத் தூவிக்கொண்டு, சற்று மெல்லியதாக தேய்க்கவும்.
4. சோமாஸ் அச்சு அல்லது வட்டமான ஒரு பொருளைக் கொண்டு வெட்டி எடுக்கவும்.
1. தேய்த்து, வெட்டிய மாவில் ஒட்டியிருக்கும் மைதாவினை தட்டிவிட்டு வைக்கவும். (மாவு அதிகமாக ஒட்டியிருந்தால் எண்ணெயில் இறங்கி, எண்ணெய் சீக்கிரமாக கறுத்துவிடும்.)
2. இப்போது தண்ணீரில் மைதாவினை சிறிது குழைத்து, வெட்டி எடுத்த மாவினை சோமாஸ் அச்சில் வைத்து, ஒரு பக்கமாக உள்ளடத்தை வைத்து, குழைத்த மைதா பேஸ்ட்டை ஓரங்களில் தடவவும்.
3. மெதுவாக அச்சினை மூடி ஓரங்கள் நன்கு ஒட்டும்படி அழுத்தி எடுக்கவும். பிரியாதபடி மீண்டும் ஒருமுறை விரல்களால் அழுத்தவும்.
4. சோமாஸ் அச்சு இல்லாவிட்டால் வட்டமாக வெட்டி, உள்ளடம் வைத்த பிறகு கையினாலேயே இதுபோல் மடிக்கலாம். அப்படி மடிக்கும்போது விரல்களால் ஓரங்களை வரிசையாக கிள்ளிவிடவும். (4 வது எண் படத்தில் உள்ளது, அச்சு இல்லாமல் கைகளால் மடித்து, கிள்ளியது.)
1. ஓரங்களை சரியாக ஒட்டியவுடன், சூடான எண்ணெயில் போட்டு அதன் மேல் எண்ணெயை ஜாரணியால் மெதுவாக அள்ளி, அள்ளி விடவும். அப்போதுதான் நன்கு உப்பி பொரியும்.
2. போதுமான அளவு பொரிந்தவுடன் எடுக்கவும்.
3. வலைத்தட்டில் வைத்து எண்ணெயை நன்கு வடியவிடவும்.
சுவையான தேங்காய்ப்பூ சோமாஸ் ரெடி!
குறிப்பு: வெளியில் ஆறியதுபோல் இருக்கும், ஆனால் உள்ளே உள்ள சூடு சீக்கிரம் குறையாது. சூடாக மூடினால் மறுநாளே நமத்துவிடும். அதனால் நன்கு ஆறும்வரை (சுமார் 4,5 மணி நேரங்கள்) திறந்தே வைக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் இறுக மூடி வைத்தால் 1 வாரமாக இருந்தாலும் நமத்துப் போகாமல் இருக்கும்.
டிஸ்கி: இந்த ரெசிபி akilaskitchen நடத்தும் "CELEBRATE SWEETS~STUFFED SWEETS" ஈவெண்ட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகும்.

சூப்பரா இருக்குங்க அஸ்மா! இந்த அச்சை வாங்கிவைச்சு பலநாளா சும்மா கிடக்குது. நீங்க சொல்லியிருக்கும் பொருட்களில் கசகசா மட்டும் வீட்டில் இல்லை,அது இல்லாம செய்துபார்க்கிறேன். :)
ReplyDeleteநன்றி!
இதை எங்கள் பகுதியில் பூரியாண் என்று சொல்வார்கள். மிகவும் ருசியாக இருக்கும். செல்வம் வர வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதை செய்து பாத்திஹா ஓதுவார்கள். ஆனால் மூடப்பழக்கம்.
ReplyDeleteபாத்திஹா இல்லாமல் சாதாரணமாக செய்து சாப்பிடலாம். ருசியான பதார்த்தம்.
ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு...சூப்பரான தெளிவான விளக்கம்...
ReplyDeleteஅஸ்மா அக்கா படங்களை பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல இருக்கே...
ReplyDelete@ Mahi...
ReplyDelete//சூப்பரா இருக்குங்க அஸ்மா!// நன்றி மஹி.
//நீங்க சொல்லியிருக்கும் பொருட்களில் கசகசா மட்டும் வீட்டில் இல்லை,அது இல்லாம செய்துபார்க்கிறேன். :)//
கசகசா சேர்ப்பது ஒரு வித்தியாசமான மணமும் சுவையும் கொடுக்கும். ஆனா கசகசா இல்லாமலும் செய்யலாம், பிரச்சனையில்லை. நன்றி மஹி.
@ சுவனப்பிரியன்...
ReplyDelete//இதை எங்கள் பகுதியில் பூரியாண் என்று சொல்வார்கள்.//
எங்க ஊரிலும் பூரியான் என்றுதான் சொல்வோம். சமோசாவுக்கும் பூரியான் என்று சொல்வதால், வித்தியாசத்திற்காக இந்த தேங்காய்ப்பூ சோமாஸை 'ஃபாத்திஹா பூரியான்' என்று சொல்வார்கள். அதனால் அந்த (பூரியான் ஃபாத்திஹா) பெயரை மறக்கடிக்கவே இப்படி 'தேங்காய்ப்பூ சோமாஸ்' என்று பெயரை மாற்றி வைத்தோம் சகோ :-)
//பாத்திஹா இல்லாமல் சாதாரணமாக செய்து சாப்பிடலாம். ருசியான பதார்த்தம்.//
ஆமா சகோ, அருமையான பதார்த்தம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
@ GEETHA ACHAL...
ReplyDelete//ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு...சூப்பரான தெளிவான விளக்கம்...//
அப்படியா... :-) நன்றி கீதாச்சல்!
@ சிநேகிதி...
ReplyDelete//அஸ்மா அக்கா படங்களை பார்க்கும் பொழுதே சாப்பிடனும் போல இருக்கே...//
சாப்பிடணும்போல் இருந்தா சாப்பிடுங்கபா, நம்ம வீடுதான் :)) நன்றி ஃபாயிஜா!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteசின்ன புள்ளையில இத சுட்டு பாத்திஹா ஓதி கொடுப்பார்கள் அதுக்காகவே விடிய விடிய விறகு வேட்டி கிசாவை கேட்க போவோம்
இப்ப அதை நினைவுப் படுத்தி விட்டீர்கள்
@ ஹைதர் அலி...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..
//சின்ன புள்ளையில இத சுட்டு பாத்திஹா ஓதி கொடுப்பார்கள் அதுக்காகவே விடிய விடிய விறகு வேட்டி கிசாவை கேட்க போவோம்
இப்ப அதை நினைவுப் படுத்தி விட்டீர்கள்//
எப்போ ஃபாத்திஹா ஓதி முடிப்பார்கள் பந்தியில் உட்கார என்ற அந்த குழந்தைப் பருவ எதிர்ப்பார்ப்போடு சரி நமக்கெல்லாம், கிஸ்ஸாவெல்லாம் கேட்க போவதில்லை :) எப்படியோ.. அந்த மூடப் பழக்கத்திலிருந்து தப்பித்து வெளியேறியவரை, (அல்ஹம்துலில்லாஹ்) சந்தோஷம். ஆனா இந்த பூரியானை மட்டும் யாரும் மறக்க முடியாது :-) வருகைக்கு நன்றி சகோ.
@ குணசேகரன்...
ReplyDelete//nice...//
தங்களின் கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
ReplyDeleteஎப்படி இருக்கீங்க..? எனக்கு இங்கே நெட் கனெக்ஷன் வந்து உங்கள் பக்கம் இன்றுதான் பார்வையிட முடிந்தது.ஆஹா நமது ஊர் ஸ்பெஷல் திண்பண்டம் ஆச்சே... கண்ணு நேரா இங்குதான் வந்து நின்றது.
மிகவும் அருமையான விளக்கப் படங்களுடன் அழகாக செய்து காட்டியிருக்கீங்க...
ஒருவாரம் முன்புதான் நாங்கள் செய்து சாப்பிட்டோம்.(இதே முறையில்..)என்ன மைதா மாவு மட்டுமே...சோளமாவு சேர்க்க மாட்டோம்....
நல்ல குறிப்பை எல்லோரோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள் அஸ்மா....
அன்புடன்,
அப்சரா.
@ apsara-illam...
ReplyDeleteவஅலைக்குமுஸ்ஸலாம் அப்சரா!
அல்ஹம்துலில்லாஹ், நான் நலமே! மீண்டும் நீங்கள் இணைய பக்கம் வந்தது சந்தோஷம் அப்சரா :)
//ஆஹா நமது ஊர் ஸ்பெஷல் திண்பண்டம் ஆச்சே... கண்ணு நேரா இங்குதான் வந்து நின்றது
மிகவும் அருமையான விளக்கப் படங்களுடன் அழகாக செய்து காட்டியிருக்கீங்க...//
இதை பிடிக்காதவர்கள் ரொம்ப சிலர்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்சரா.
அஸ்ஸலாமு அழைக்கும் அஸ்மா ,
ReplyDeleteஇந்த இனிப்பு சமோசாவ செஞ்சு தின்னு பார்த்துட்டு டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்றேன்
@ mohammed uthuman...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம்.
//இந்த இனிப்பு சமோசாவ செஞ்சு தின்னு பார்த்துட்டு டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்றேன்//
நல்லது சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அஸ்மா மேடம்,
ReplyDeleteஉங்களின் பயனுள்ள வலைத்தளத்திற்கு மிகவும் நன்றி.சமையல் குறிப்புகளில் அளவுகள்,செய்முறைகள்,படங்கள் எல்லாம் மிக மிக தெளிவாக கொடுத்திருக்கீங்க,எங்களைப் போன்ற சமையல் தெரியாதவங்க கூட உங்களின் தெளிவான குறிப்பைப் பார்த்தால் செய்திடுவோம்னு நம்பிக்கை இருக்கு.
இந்த சோமாஸ் சிறுவயதிலிருந்தே எனக்கு ரொம்பவும் பிடித்த இனிப்பு.வெளிநாடு வந்தபிறகு நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.நீங்கள் செய்துள்ள சோமாஸ் படங்களைப் பார்க்கும்போது செய்து பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது.
தொந்தரவுக்கு மன்னிக்கவும். ஒரு சந்தேகம் உள்ளது.பதில் தருவீங்களா ப்ளீஸ்.
1.//பொட்டுக் கடலை - 1 பிடி
கிஸ்மிஸ் - 1 பிடி
முந்திரிப் பருப்பு - 1 பிடி//
என்று தேவையான பொருட்களில் கொடுத்திருக்கீங்க.பிடி என்பது விளங்கவில்லை.
மூன்று அளவுகளையும் கிராம் அல்லது டேபிள்ஸ்பூன் அளவில் தந்து உதவ இயலுமா.எங்களுக்கு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
weekendல் செய்துவிட்டு கருத்துக்களை உங்களோடு பின்னூட்டம் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.மீண்டும் நன்றி.
@ arun
Delete//எங்களைப் போன்ற சமையல் தெரியாதவங்க கூட உங்களின் தெளிவான குறிப்பைப் பார்த்தால் செய்திடுவோம்னு நம்பிக்கை இருக்கு//
நன்றி சகோ :)
//1.பொட்டுக் கடலை - 1 பிடி
கிஸ்மிஸ் - 1 பிடி
முந்திரிப் பருப்பு - 1 பிடி
என்று தேவையான பொருட்களில் கொடுத்திருக்கீங்க.பிடி என்பது விளங்கவில்லை//
'பிடி' என்றால் ஒரு கையால் அள்ளும் அளவு; ஒரு 'கைப் பிடி' சகோ.
//மூன்று அளவுகளையும் கிராம் அல்லது டேபிள்ஸ்பூன் அளவில் தந்து உதவ இயலுமா.எங்களுக்கு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்//
ஒரு பிடிக்கு சுமார் 6 டேபிள்ஸ்பூன் வரும். கொஞ்சம் கூடுதல், குறைந்தாலும் பரவாயில்லை சகோ. பொட்டுக்கடலை மட்டும் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
//weekendல் செய்துவிட்டு கருத்துக்களை உங்களோடு பின்னூட்டம் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்//
கண்டிப்பாக வந்து சொல்லுங்கள் :)
அஸ்மா மேடம்,
ReplyDeleteமிகுந்த ஆர்வக்கோளாறில் நிறைய தடவை open பண்ணி பார்த்துவிட்டோம் பதில் வந்திருக்கிறதா என்று.
நாளை அல்லது ஞாயிறன்று செய்ய மிகுந்த ஆவலாக இருக்கிறோம்.
சந்தேகத்திற்கு முடிந்தால் பதில் தருவீங்களா மேடம்.
எங்களுக்கு சிறப்பாக செய்வதற்கு மிக மிக உதவியாக இருக்கும்.
தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
நன்றி.
@ arun
Delete//மிகுந்த ஆர்வக்கோளாறில் நிறைய தடவை open பண்ணி பார்த்துவிட்டோம் பதில் வந்திருக்கிறதா என்று//
////தொந்தரவுக்கு மன்னிக்கவும்//
தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோ. வேலைப்பளுவின் காரணமாக உடனே பதில் தர இயலவில்லை. மற்றபடி தொந்தரவு எதுவுமில்லை. நீங்கள் தாராளமாக வந்து சந்தேகங்கள் கேட்கலாம்.
உங்களுக்கு முன் மற்ற பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்களுக்குக் கூட இன்னும் பதில் தரவில்லை. இப்போது உங்களின் அவசரம் கருதி முதலில் உங்களுக்கு பதில் தந்தாச்சு. ஆல் தி பெஸ்ட் :)
அஸ்மா மேடம்,
ReplyDelete//உங்களின் அவசரம் கருதி முதலில் உங்களுக்கு பதில் தந்தாச்சு. ஆல் தி பெஸ்ட் :)//
எங்களின் அவசரம்,இயலாமை கருதி உடனே பதில் தந்து உதவியதற்கும் , வாழ்த்துக்கும் மனதார்ந்த நன்றிகள் மேடம்.
இன்று உங்கள் செய்முறைக்குறிப்பின் படி தேங்காய்ப்பூ சோமாஸ் செய்தோம்.சுவை மிக மிக மிக அருமையாக இருந்தது.ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எங்கள் அனைவருக்கும்.
எங்களிடம் அச்சு இல்லை ,ஆனாலும் அச்சு இல்லாமல் நீங்கள் குறிப்பிட்டுள்ள(படத்தில் உள்ள) இன்னொரு முறையின்படி செய்தோம்.நன்றாகவே வந்தது.அடுத்தமுறை indiaக்கு vacation போகும்போது கண்டிப்பாக அம்மாவிடம் சொல்லி அச்சு வாங்கி வந்துவிடுவேன்.
உங்களின் சுவையான குறிப்பிற்கும்,இத்தகையதொரு குறிப்பை வலைப்பூவில் பகிர்ந்து கொண்டதற்கும்,என் அவசரம் கருதி பதிலளித்ததற்கும் நன்றிகள் மேடம்.
@ arun
Delete//இன்று உங்கள் செய்முறைக்குறிப்பின் படி தேங்காய்ப்பூ சோமாஸ் செய்தோம்.சுவை மிக மிக மிக அருமையாக இருந்தது.ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எங்கள் அனைவருக்கும்.//
சுவை மிக மிக மிக அருமையாக இருந்ததில் மிக மிக மிக சந்தோஷம் :)))
//அடுத்தமுறை indiaக்கு vacation போகும்போது கண்டிப்பாக அம்மாவிடம் சொல்லி அச்சு வாங்கி வந்துவிடுவேன்.//
நீங்கள் ஜெர்மனியில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சண்டே மார்க்கெட் போன்ற இடங்களில் இந்த அச்சு கிடைக்கிறது. நானும் இங்கே வாங்கியதுதான். அந்த அச்சு இல்லாவிட்டாலும் வட்ட வடிவமான ஏதாவது ஒரு மூடியினால் வெட்டி, கைகளாலேயே சுலபமாக செய்யலாம்.
//உங்களின் சுவையான குறிப்பிற்கும்,இத்தகையதொரு குறிப்பை வலைப்பூவில் பகிர்ந்து கொண்டதற்கும்,என் அவசரம் கருதி பதிலளித்ததற்கும் நன்றிகள் மேடம்.//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. அவ்வப்போது வந்து தளத்தைப் பார்த்து பயன்பெறுங்கள் :)
அஸ்மா அக்கா,
ReplyDeleteஉங்களின் blog நல்ல கருத்துக்களைக் கொண்டதாகவும்,மிகவும் பயனுள்ளதாகவும் ,நல்ல விஷயங்களை சிந்தித்து பார்க்க தூண்டுவதாகவும் இருக்கிறது.
உங்களின் சமையல் குறிப்புகள் ரொம்பவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன(செய்முறை,அளவுகள் முதற்கொண்டு).
செய்முறை விளக்கங்களையும்,படங்களையும் பார்க்கும்போதே செய்யும் ஆவலாக உள்ளது.
இந்த குறிப்பில்(கசகசா,கறுப்பு எள்,ஏலப்பொடி,உப்பு,சீனி,ரோஜா பன்னீர் ) போன்றவை ஸ்பூன் அளவுகளில் கொடுத்திருக்கீங்க.ஸ்பூன் அளவு என்பது டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.
//சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்// என்று கொடுத்திருக்கீங்க.
டேபிள் ஸ்பூன் என்று தனியாக mention பண்ணியிருப்பதால்,
ஸ்பூன் அளவு என்பது டீஸ்பூன் அளவா.
நீங்கள் உங்கள் சமையல் குறிப்புகளில் பயன்படுத்தும் ஸ்பூன், டீஸ்பூன், டேபிள்ஸ்பூன், கப் போன்றவை மில்லி அளவில் தரமுடியுமா.
சமையலில் அனுபவமுள்ளவர்கள் பார்க்கும் மாத்திரத்திலேயே செய்து விடுவார்கள்.சமையலில் சுத்தமாக அனுபவமில்லாதவர்கள், ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ,எங்களைப் போன்று வெளிநாட்டில் நாங்கள்தான் சமைத்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சிறு விஷயங்களில் கூட தெளிவு தேவைப்படும்.
உங்களின் குறிப்புகளை செய்து பார்க்க ஆவலாக இருக்கிறோம்.நன்றி.
Assalamualaikum wrb. hi Asma akka how r u? ur coconut samosa is mouthwatering yar. its very nice surely im going to try it today itself insha allah. plz keep sharing ur awesome receipes with us.. i tried that NANDU CURRY it came out very tasty thanks alot.. May Amighty Allah reward u akka.
ReplyDeletewaasalam,
Shereenmydeen
//Assalamualaikum wrb. hi Asma akka how r u? ur coconut samosa is mouthwatering yar. its very nice surely im going to try it today itself insha allah. plz keep sharing ur awesome receipes with us..//
Deleteவ அலைக்குமுஸ்ஸலாம் ஷெரீன்.
அல்ஹம்துலில்லாஹ், நல்லா இருக்கோம்ப்பா :) இந்த இனிப்பு சமோசா பார்க்க மட்டுமில்ல.. இந்த முறையில் செய்தா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். நிச்சயம் செய்து பார்த்து எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க. இதுபோல நிறைய ரெசிபிகள் ஃபோட்டோ எடுத்து ரெடியா இருக்கு. கொடுக்கதான் முடியல இன்னும். இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக கொடுக்க ட்ரை பண்றேன் :)
//i tried that NANDU CURRY it came out very tasty thanks alot.. May Amighty Allah reward u akka//
ஓ.. நண்டு கறியும் சூப்பரா வந்துச்சா..? :) உங்களின் ஊக்கத்திற்கும் துஆவுக்கும் தேங்க்ஸ்மா.
assalamualaikum wrb. hi Asma akka how r u? ur coconut samosa is mouthwatering yar. its very nice surely im going to try it today insha allah. plz keep sharing ur awesome receipes with us.. and ur presentation is really wonderfull aka.
ReplyDeletewaasalam,
Shereenmydeen
உடனே பதில்தர முடியல.. ஸாரிமா.
Delete//ur presentation is really wonderfull aka//
ப்ரெசண்டேஷன் நல்லா இருக்கா.. அதுல ரொம்ப இன்ட்ரெஸ்ட் எனக்கு, அதான் :-)
முக்கியமா கசகசாவை வறுக்காம போட்டுவிடாதீங்க. ஏன்னா வறுத்தாதான் அதிலுள்ள போதை தன்மை மாறும்னு சொல்வாங்க. அப்படி மாறாம நாம் சாப்பிடக் கூடாதல்லவா? அதற்காக சொல்றேன்.
Assalam aka how r u? apart from this how can i contact u??????????? when u r free tell me we ll have a video chat in skype:) and 1 request aka, i want some very nice and tasty french recipes... plz post it when u r free...
ReplyDeletei heard of duchess potatoes a combo of egg and potato how to make it aka?
waassalam
shereen

//Assalam aka how r u? apart from this how can i contact u??????????? when u r free tell me we ll have a video chat in skype:)//
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் ஷெரீன்.
டோண்ட் வொர்ரிமா :) என்னுடைய மெயில் ஐடியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதன் மூலம் இனி நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் ஃப்ரீயா இருக்கும்போது ஒருநாள் ஸ்கைப்பிலும் வர்றேம்ப்பா. உங்கள் அன்புக்கு நன்றி :-) ஜஸாகல்லாஹ் ஹைரா.
//and 1 request aka, i want some very nice and tasty french recipes... plz post it when u r free...
i heard of duchess potatoes a combo of egg and potato how to make it aka?//
நிறைய ரெசிபிகள் செய்து ஃபோட்டோஸ் தயாராக உள்ளது. போஸ்ட் பண்ணதான் வாய்ப்பில்லாமல் போகுது :( இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பாருங்க.. இடையிடையில் ரெசிபி வரும் :) Step-by-Step ஃபோட்டோஸுடன் மட்டுமே ரெசிபிகள் இங்கு கொடுப்பதால், நீங்கள் கேட்ட ரெசிபி ஒருநாள் செய்துவிட்டு ஃபோட்டோ ரெடி பண்ணிய பிறகு இங்கே போஸ்ட் பண்ணுகிறேன். ஓகேவா..? :)
ok aka thank u sooooooooo much :)
Deleteகிட்டத்தட்ட நான் செய்வதைப்போன்றே உள்ளது.இதனை நாங்கள் மடக்கு பூரி என்று சொல்லுவோம்.
ReplyDelete//கிட்டத்தட்ட நான் செய்வதைப்போன்றே உள்ளது//
Deleteஉங்களின் செய்முறையும் கொடுங்களேன் ஸாதிகா லாத்தா? அல்லது எனக்கு தனியாவாவது சொல்லிடுங்க :)
அட,அஸ்மா இவ்வளவு ரிச்சா செய்து தந்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.சூப்பர் பூரியான்..
ReplyDelete//அட,அஸ்மா இவ்வளவு ரிச்சா செய்து தந்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்.சூப்பர் பூரியான்..//
Deleteஅதானே..? யார் வேண்டாம்னு சொன்னது? அதனால.. உங்க கையால செய்து எனக்கு பார்சல் அனுப்பிடுங்க, எனக்கு வேல மிச்சம்.. ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா :)