அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 21 May 2011

விளையும் பயிர்களே! உங்களுக்காக... (பாடம் 2)

குழந்தைகளுக்கான இஸ்லாமிய பொது அறிவு

அன்புத் தாய்மார்களே! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! சென்ற‌ பாடத்தில் நாம் பார்த்த கேள்வி-பதில்களை இதுவரை உங்கள் குழந்தைகளின் கவனத்திற்கு கொண்டுச்சென்று, அவர்களுக்கு சொல்லித் தந்திருப்பீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! இப்போது இரண்டாவது பாடத்திற்கு செல்வோம்.



1. அல்லாஹ்வுக்கு எத்தனை திருநாமங்கள் உள்ளன? 

99 திருநாமங்கள் (திருப்பெயர்கள்) உள்ளன. அவை அனைத்துக்கும் சொந்தக்காரன் அந்த ஏக இறைவன் மட்டுமே.

2. அவற்றில் 'அர்ரஹ்மான்', 'அர்ரஹீம்' ஆகிய இரண்டு திருநாமங்களையும் பற்றிக் கூறு.

'அர்ரஹ்மான்' என்பதன் பொருள், இவ்வுலகில் வாழும் மனிதர்களில் நல்லவர்கள், தீயவர்கள் அனைவருக்குமே தன் அளவில்லாத அருளை பாரபட்சமில்லாமல் அள்ளி வழங்குபவன். 'அர்ரஹீம்' என்பதன் பொருள், இவ்வுலகில் அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்கி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்த தன் அடியார்களுக்கு மட்டும், மறு உலகில் நிகரில்லாத அன்பு காட்டுபவன்.

3. அல்லாஹ் இஸ்லாமியர்களான நமக்கு மட்டும்தான் இறைவனா?

இல்லை; மனிதன் படைக்கப்பட்ட நாள் முதல், உலகம் அழியும் நாள்வரை உள்ள மனித சமுதாயம் அனைவருக்கும் அவனே ஒரே இறைவன். 

4. அல்லாஹ் அளித்திருக்கும் அருட்கொடைகளில் நம்முள் காணும் ஒருசிலவற்றைக் கூறு.

பரந்து விரிந்த அவனுடைய அருட்கொடைகளில் நம் உயிர், ஐம்புலன்கள், பேச துணை புரியும் நாவு, செயல்பட உதவும் கை/கால்கள், தொழிற்சாலைகளை விடச் சிறந்த‌ உள்ளுறுப்புகள், உண்ணும் உணவு, பருகும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, எல்லாவற்றிற்கும் மேலாக படைப்பினங்களில் மிக உயர்ந்த படைப்பாக நம்மை பகுத்தறிவோடு உண்டாக்கியது அத்தனையுமே அல்லாஹ் நம்முள் வைத்திருக்கும் அருட்கொடைகளில் மிக மிகச் சிலதாகும்.

5. அல்லாஹ் நம்மை எதற்காக படைத்தான்?

அவனை மட்டும் வணங்குவதற்காகவே அல்லாஹ் நம்மைப் படைத்தான். 

6. அப்படியானால் அல்லாஹ்வை சதா வணங்கிக் கொண்டே மட்டும் இருக்கவேண்டுமா? 

அப்படியில்லை; நமக்கு கட்டளையிடப்பட்ட கடமையான வணக்கங்களோடு, அல்லாஹ் அருளிய திருக்குர்ஆனின் அடிப்படையிலும், அவனுடைய தூதர் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படியும் நம்முடைய வாழ்க்கையை அழகிய முறையில் அமைத்துக் கொண்டு வாழ்வதே அவனை வணங்குவதற்கு போதுமானதாகும்.

7. மனிதர்கள் அல்லாஹ்வை வழிபடாமல் இருப்பதாலோ/அவனை ஏற்றுக் கொள்ளாததாலோ (அதாவது மறுப்பதாலோ), அல்லது அவனுக்கு இணையாக வேறொன்றை/மற்றவரை கடவுளாக வணங்குவதாலோ அவனுக்கு ஏதும் நஷ்டம் உண்டாகுமா?

நிச்சயம் அவற்றால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அவனை மறுத்தவர்களும், அவனுக்கு இணை வைத்தவர்களும்தான் மறு உலகில் நஷ்டவாளிகள்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக!)

8. இவ்வுலகில் வாழும்போதே மனிதர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட ஞானத்தால் அல்லாஹ்வை நெருங்கி, 'ஞானி'யாக‌ முடியுமா?

முடியாது; இறையச்சத்துடன் நற்செயல்கள் புரிந்து, தீயவற்றை விட்டும் ஒதுங்கி அவனுடைய ந‌ல்லடியார்களில் ஒருவராக ஆகலாமே தவிர, இறைவனை நெருங்கிவிட்ட, மெய்நிலை கண்ட 'ஞானி' என்று கற்பனையாக சொல்லப்படும் ஒரு நிலை எந்தவொரு மனிதனுக்கும் இல்லை.

9. அல்லாஹ் இவ்வுலகில் ஏதாவது ஒரு உருவில் மனிதர்களுக்கு காட்சித் தருவானா?

எந்த மனித உருவமாக இருந்தாலும் சரி, இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை படைப்பினங்களின் உருவமாக இருந்தாலும் சரி, யாரைப் போலவும்/எதைப் போலவும் அல்லாஹ் இவ்வுலகில் நமக்கு காட்சித் தரமாட்டான்; ஏனெனில் இவ்வுலகிலுள்ள எந்தக் கண்களும் அவனைப் பார்க்க இயலாது.

10. அப்படியானால் அல்லாஹ் உருவம் உடையவனா? உருவமற்றவனா?

அல்லாஹ் உருவம் உடையவனே! ஆனால் மனிதக் கற்பனைக்கும் அறிவுக்கும் எட்டாத அவனுடைய புனித உருவத்தை மறுமையில் மட்டுமே நாம் காணமுடியும்.(இன்ஷா அல்லாஹ்)

10 comments:

  1. அருமை அஸ்மா.அல்ஹம்துலில்லாஹ்.தொடருங்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    அனைத்து கேள்விகளும் மிகவும் பயனுடையதாக இருக்கு...அல்ஹமுதுலில்லாஹ்.
    குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது

    ReplyDelete
  3. @ ஸாதிகா...

    //அருமை அஸ்மா.அல்ஹம்துலில்லாஹ்.தொடருங்கள்//

    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத துஆ செய்யுங்க ஸாதிகா அக்கா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. @ சிநேகிதி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம்.

    //குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது//

    அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம் ஃபாயிஜா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. சிறு வயதிலிருந்தே இஸ்லாம் பற்றி தெளிவான சிந்தனைகளை குழந்தைகளிடம் போதிப்பதன் மூலமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும், இறைவன் நாடினால்..

    அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

    ReplyDelete
  6. @ Abdul Basith...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

    //சிறு வயதிலிருந்தே இஸ்லாம் பற்றி தெளிவான சிந்தனைகளை குழந்தைகளிடம் போதிப்பதன் மூலமே சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும், இறைவன் நாடினால்..//

    நிச்சயமா சகோ. அவ்வப்போது அதுபோன்ற சிறந்த சமுதாயத்தை இறைவன் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறான், அல்ஹம்துலில்லாஹ். வரக்கூடிய தலைமுறை இன்னும் சிறந்து விளங்கவேண்டும் என்றும், மார்க்கத்தின் அடிப்படைக்கூட‌ அறியாமல் குழந்தைகள் இருக்கக்கூடாது என்ற ஆவலிலும்தான் இந்த பகுதி.

    //அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!//

    துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ. (ஜஸாகல்லாஹு ஹைரா)

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிக உபயோகமான பதிவு. இது போன்றவை நிறைய பெற்றோர்களுக்கு ரீச் ஆகி தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க ஏக இறைவன் துணை புரிய வேண்டும்...ஆமீன்

    ----------
    8. இவ்வுலகில் வாழும்போதே மனிதர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட ஞானத்தால் அல்லாஹ்வை நெருங்கி, 'ஞானி'யாக‌ முடியுமா?

    முடியாது; இறையச்சத்துடன் நற்செயல்கள் புரிந்து, தீயவற்றை விட்டும் ஒதுங்கி அவனுடைய ந‌ல்லடியார்களில் ஒருவராக ஆகலாமே தவிர, இறைவனை நெருங்கிவிட்ட, மெய்நிலை கண்ட 'ஞானி' என்று கற்பனையாக சொல்லப்படும் ஒரு நிலை எந்தவொரு மனிதனுக்கும் இல்லை.
    -------

    இம்ம். மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய கருத்து. முடிந்தவரை முதலிலேயே இதனை புரிய வைத்துவிட வேண்டும்.

    அனைத்து கேள்விகளுமே அழகாக தொகுக்கப்பட்டு சிறப்பான முறையில் பதில் அளிக்கப்பட்டு இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  8. //இது போன்றவை நிறைய பெற்றோர்களுக்கு ரீச் ஆகி தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க ஏக இறைவன் துணை புரிய வேண்டும்...ஆமீன்//

    இறைவன் உதவி செய்வான், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. ஸலாம்
    மிகவும் பயனுள்ள பதிவு.ஜஜாக்குமுல்லாஹ்

    ReplyDelete
  10. @ zumaras...

    //மிகவும் பயனுள்ள பதிவு.ஜஜாக்குமுல்லாஹ்//

    ஸலாம். வருகைக்கு நன்றிமா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை