அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 17 October 2011

தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

தமிழ்மணத்தின் பார்வைக்காக மட்டுமே இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பட்டையும் தற்காலிகமாகவே நீக்கப்படாமல் உள்ளது.

கட் பண்ணிடுவோமா? வேண்டாமா? பொறுத்திருந்து முடிவு செய்வோம்.


உள்ளே செல்லும் முன்:


(இணையத்தில் உலாவரும் மக்கள் பெரும்பாலும் தங்களுக்கு தேவையானவற்றையும், விருப்பமானவற்றையும் மட்டும் படித்துவிட்டு சென்றுவிடுவார்கள். (பதிவர்களாகவோ த‌னக்கென ஒரு தளத்தை உடையவர்களாகவோ இல்லாத பட்சத்தில்) அவர்கள் அத்தனை பேருக்கும் 'வலைப்பதிவு', 'பதிவர்கள்', 'சமூக தளங்கள்', 'திரட்டி', 'ஓட்டுப்பட்டை' போன்ற விஷயங்கள்பற்றி தெரிந்திருக்குமா என்றால், சிலரைத் தவிர அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நானும் இந்த தளத்தை ஆரம்பிக்கும் முன் எனக்கும் இவை எதுவுமே அறிமுகம் இல்லாமல்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் (இதைப் பற்றி அறியாத, சாதாரணமாக படித்துச் செல்லும் வாசகர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு குழப்பமாக இந்த இடுகை அமைந்துவிடக் கூடாது என்பதால்) கீழ்க்காணும் இந்த சிறு விளக்கம் தேவைப்படுகிறது.

பல்வகை இணைய தளங்களில் ஒன்றான 'ப்ளாக்கர்'(Blogger/Blogspot/Blog) என்பது கூகுள் த‌ரும் ஒரு இலவச தளமாகும். இதனை தமிழில் 'வலைதளம்', 'வலைப்பதிவு', 'வலைப்பூ' என்கிறோம். ஏராளமான இலவச வலைப்பூ சேவைகள் இருந்தாலும் இந்த ப்ளாக்கர் சேவையின் மூலமே பெரும்பாலானவர்கள் வலைப் பதிவுகள் உருவாக்கி, அவரவர் கருத்துக்களையும் பலவித செய்திகளையும், கலைகளையும் மற்றவர்களுடன் இணையத்தில் பகிர்ந்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட வலைப் பதிவுகளை எல்லாம் ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஒன்று திரட்டித் தரும் இணையத் தளத்திற்குதான் 'வலைத் திரட்டி' (சுருக்கமாக 'திரட்டி') என்பார்கள். தமிழ் மொழி வலைப்பதிவுகளுக்கும் பல திரட்டிகள் உள்ளன. குறிப்பாக 'இண்ட்லி', 'உலவு', 'தமிழிஷ்', 'திரட்டி', 'தமிழ் 10', 'தமிழ்ப் பூங்கா', 'தமிழ்வெளி' போன்றவற்றை சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் 'தமிழ் மணம்' என்ற திரட்டியுமாகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.)

சில நாட்களுக்கு முன் இந்த தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் பதிவுலகின் சக சகோதரர்களை நாகரிகமற்ற வார்த்தைகளில் உரையாடி இழிவுபடுத்தியமைக்கு முதலில் என் கண்டனங்களை பதிவுச்செய்துக் கொள்கிறேன். 

பார்க்க:  http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html

அதைத் தொடர்ந்து அவர் இட்ட‌ ஒரு பின்னூட்டத்தில், இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும் எழுத்துப் பரிமாற்றங்களின்போதும் கூறிக்கொள்ளும் 'முகமன்' வார்த்தைகளையும் இழிவுபடுத்திக் கூறியுள்ளதற்காக தமிழ்மணத்திடம் முஸ்லிம்கள் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழ்மண நிர்வாகிகள் சரியான முறையில் விளக்கம் அளிக்காத வரை தமிழ்மணத்தின் மீதான எதிர்ப்பு தொடரும் என்பதை இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறோம்.

இதோ தமிழ்மணத்தின் அந்த நிர்வாகி கக்கிய விஷம்:

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

தமிழ்மண நிர்வாகிகளே! எங்கள் மார்க்கம் கற்றுத்தந்த, எக்காலத்துக்கும்/ நேரத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு முகமன் வார்த்தையை உங்களில் ஒருவர் கொச்சைப்படுத்துகிறார் என்றால், "இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது" என்பதுபோல் நீங்கள் கண்டும் காணாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது ஒரு நிர்வாகத்தின் பொறுப்பான நிர்வாகிகளாக அவர் சார்பில் இஸ்லாமியர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கப் போகிறீர்களா?


தமிழ்மணத்துக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கு "ஜாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளைப் புறந்தள்ளி இப்பதிவர் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறார்" என 'கிரீன் பேஜ்' (green badge) கொடுக்கிறீர்களே... அடுத்தவர்களுக்கு இடையூறு இன்றி அவரவர் மதங்களைப் பின்பற்றிச் செல்பவர்கள் உங்கள் பாஷையில் 'வெறியர்கள்' என்றால், அநாவசியமாக வலிய வந்து ஒரு மார்க்கத்தின் முகமனை கொச்சைப்படுத்துபவர்கள் 'மகா மட்டமான வெறியர்கள்' அல்லவா? அப்படிப்பட்டவர்களைப் புறந்தள்ளி 'ரெட் பேஜ்' கொடுத்து உங்கள் நிர்வாகத்தைவிட்டும் வெளியேற்றத் தயாரா? (எரிகிறதைப் பிடுங்கினால்தானே கொதிக்கிறது அடங்கும்..?)

தமிழ்மண நிர்வாகிகளே! இஸ்லாமிய முகமனை கேலி செய்துவிட்டதால் அதில் மாசு ஏற்படுத்தி விட்டதாக எண்ணிவிடவேண்டாம். ஒருபோதும் அதன் தூய்மை மாறாது. ஆனால் காற்றுக்கு எதிரே துப்பினால் அது முகத்தில்தான் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்வது தமிழுக்காக செய்யும் சேவை என்று நீங்கள் சொல்வதால், உங்கள் மூலம்தான் எங்கள் பதிவுகள் தூக்கி நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்பவில்லை. உங்களைப்போல் எத்தனையோ திரட்டிகள் உள்ளன என்பது உங்களுக்கும் தெரியும். பதிவர்களின் ஆதரவும் உங்கள் வளர்ச்சியின் ஒரு பங்கு என்பதும் உங்களுக்கு தெரியும். ஆகவே....

இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும், எங்கள் சகோதர பதிவர்கள் பலரை கேவலப்படுத்தி இருப்பதற்கும் தமிழ்மணமாகிய நீங்களும், சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகியும் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே உங்கள் 'ஓட்டுப்பட்டை' தொடர்ந்து எங்கள் பதிவில் நீடிக்கும்; எங்கள் பதிவுகள் உங்கள் திரட்டியில் இணைக்கப்படும். அத்துடன் புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லவும் தயங்கமாட்டோம்..! ஏற்கனவே உங்களின் சேவைக்கு நாங்கள் தெரிவித்துள்ள நன்றியை இங்கே நினைவுபடுத்துகிறோம். 


'தமிழ்மணம்' எங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா என்ற எங்கள் முடிவு உங்கள் கையில்!


இவங்க சொல்றதையும் தவறாம கேளுங்க:


தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... 

தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..! 

தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?

தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா.. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க 

மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..! 

"தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..? தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா 

அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >

தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா??? 

தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்

தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள் 

தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்! 

யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ? 

சீ தமிழ் மனமே ....... 

தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ? 

மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?

அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன‌'ம்36 comments:

 1. ஆம் நண்பரே தமிழ்மணம் நமக்கு வேண்டவே வேண்டாம்

  ReplyDelete
 2. தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

  ReplyDelete
 3. இன்று வரை அந்த திரட்டிக்கு(தமிழ்மணம்)ஒரே,ஒருவர் தான் சார்பாகப் பேசுகிறார்!எதிர்த்துக் கேள்வி கேட் க வேண்டுமாம்!சண்டை போட்டு எங்கள்"உரிமையை நிலைநாட்ட வேண்டுமாம்!கேள்விக்கு நியாயமான பதில் இல்லாத போது.........................................(நான் பதிவரல்ல,வெறும் வாசகன் மட்டுமே!)

  ReplyDelete
 4. தமிழ்மணத்தை விடுங்க
  இண்ட்லி

  தேன்கூடு

  உலவு

  திரட்டி

  தமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

  தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அஸ்மா..

  சரியான பதிலடி கொடுத்திருக்கீங்க.. தெளிவான விளக்கங்கள். என்னோட கண்டனமும் உண்டு.

  ReplyDelete
 7. தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

  ReplyDelete
 8. 1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


  2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


  3.
  தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


  4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  5.
  தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


  6.
  தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


  7.
  தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


  8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


  9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


  10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


  11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


  12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


  13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


  14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


  15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


  16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


  17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


  அட..அட...அட... ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....
  இன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ!!!!

  ReplyDelete
 9. நன்றி சகோ

  எவ்வளவு தான் நாகரீகமற்ற சொல்லாடல் வந்து விழுந்தாலும். அதை அழகான சொற்கள் மூலம் எதிர்க் கொண்ட பதிவு மீண்டும் நன்றி சகோ

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  இதுல 20 மைனஸ் ஓட்டா ...??

  சக்ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html


  தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!

  ReplyDelete
 11. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!

  ReplyDelete
 12. http://www.etisalat.ae/index.jsp?type=proxy

  is the place where you can recommend ETISAT to block Tamilmanam in UAE. I already submitted the request.

  ReplyDelete
 13. தமிழ்மணம் திரட்டி. பற்றி பதிவர்கள்....
  http://seasonsnidur.blogspot.com/2011/10/blog-post_17.html
  "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
  Abdul Basith at ப்ளாக்கர் நண்பன்
  நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி. மேலும் படிக்க.."தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?.

  விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
  தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
  குட்டி சுவர்க்கம்
  சீ தமிழ் மனமே ............................
  தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...  பயணிக்கும் பாதை
  தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  ReplyDelete
 14. சகோ. நிர்வாகி என்ற வார்த்தைக்கு முதலில் அருத்தம் இவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

  ReplyDelete
 15. தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
  பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

  ReplyDelete
 16. for blocking any site in saudi arabia, send mail to the below address

  block@internet.gov.sa

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி நலமா?

  நீண்ட நாள் கழித்து சற்று உலாவலாமே என்று வந்தால் இப்படி இரு பிரச்சனைநடந்திருக்கா!!!.

  ஏந்தான் இப்படி இருக்காங்களோ

  இறைவன் அவர்களுக்கு நேரான வழியை காட்டுவானாக!

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா

  இஸ்லாமிய முகமன் வார்த்தைகளை கேவலப்படுத்திய தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  Thanks to zerotoinfinity. I also submitted the form.

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

  என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

  தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

  மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

  ReplyDelete
 20. thandanai koduga munnaadi antaalu sollara vilakkatayum keelunga
  http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html

  ReplyDelete
 21. கெளம்புங்க... கெளம்பிட்டே இருங்க.

  ReplyDelete
 22. முந்தயது
  "தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

  இரண்டாவதாக
  "சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
  இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.


  பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை
  பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்.

  ReplyDelete
 23. @ raavanan...

  @ வைரை சதிஷ்...

  @ dawood...

  @ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~...

  @ Abdul Basith...

  @ Yoga.S.FR...

  @ UNMAIKAL...

  @ வேதாளம்...

  @ G u l a m...

  @ Starjan ( ஸ்டார்ஜன் )...

  @ இல்யாஸ்...

  @ Mohamed Faaique...

  @ ஹைதர் அலி...

  @ ஜெய்லானி...

  @ மு.ஜபருல்லாஹ்...

  @ Zero to Infinity...

  @ nidurali...

  @ இளம் தூயவன்...

  @ அன்புடன் மலிக்கா...

  @ enrenrum16...

  @ Haja...

  @ வ‌.அன்சாரி...

  ஆதரவளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி! (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

  ReplyDelete
 24. @ smart...

  //தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். //

  அனைவருக்கும் தெரிந்த உங்கள் பொய்யான வாதம் நிலைக்காது.

  ReplyDelete
 25. ஸலாம்
  உங்கள பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு பா . மார்க்க விசயத்துல கலக்குறீங்க பா .
  பொறமை படலாம்ல..........


  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)
  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

  ReplyDelete
 26. @ திருவாளப்புத்தூர் முஸ்லீம்...

  //assalamu alaikum,
  your blog is useful and nice keep it up......//

  வ அலைக்குமுஸ்ஸலாம். இந்த தளத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கே எல்லாப் புகழும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 27. @ sulthan...

  ஸலாம் சகோ.

  //உங்கள பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு பா . மார்க்க விசயத்துல கலக்குறீங்க பா//

  எனக்குத் தெரிந்ததை பிறருக்கு எத்தி வைக்கிறேன், அவ்வளவுதான். அல்லாஹ் இதை ஏற்றுக்கொள்வானாக!

  //பொறமை படலாம்ல..........//

  மார்க்க விஷயத்தில் பொறமைப்படலாம்தான். ஆனால் அந்தளவுக்கு பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை என்றுதான் கருதுகிறேன். மார்க்க அறிவை இறைவன் மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுக்க துஆ செய்யுங்கள் சகோ.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 28. தமிழ்மணம்,தரம் மாறும் குணம்,முறையல்ல.

  ReplyDelete
 29. தமிழ் மணம் இப்போது செயல்படுவதில்லை. இப்போது வலை ஓலை வலைத் திரட்டி களமிறங்கியுள்ளது. வாருங்கள், மீண்டும் எழுதலாம்.

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!