அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 24 December 2011

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!

இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.


புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)


இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.


அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:







"காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்! 

இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,

* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.

* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:

* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.

* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும் நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்" அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi" 
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum" 
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"

இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.



நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:




இலைகளின் பலன்கள்:

* ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.

* தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.

* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

* தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.


இந்த காட்டு ஆத்தாப்பழம் இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி பயன்படுத்த:




அதிலிருந்தோ, அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்தோ தயாரிக்கப்பட்ட கேப்ஸ்யூல்ஸ்



54 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ் எவ்வளவு விபரங்கள் இந்த பழத்தைப் பற்றி ஆய்வறிக்கை சமர்பித்து முனைவர் பட்டம் எதுவும் வாங்க போறீங்களா?

    உங்கள் ஆய்வறிக்கை பவர்ஃபுல்லாக இருக்கு

    அப்புறம் வீடு கட்டும் போதே தோட்டத்திற்கு பெரிய இடம் விட்டு தான் கட்டிக் கொண்டு இருக்கிறேன் விரைவில் எங்கள் தோட்டத்தில் இதை கொண்டு வர முயற்சிக்கிறேன்

    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. need that காட்டு ஆத்தா payam pls send me any fruits shop owner number it urgent

      Delete
    2. Dear friends...available in koyambedu market.rate 250/kg...phone..044 24790576

      Delete
  2. அருமை! பல தகவல்கள்!

    த.ம. 4

    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  3. மலேசியாவில் இருந்தபோது சாப்பிட்டு இருக்கிறேன் அதற்கு பிறகு இந்த பழத்தை இங்கு பதிவில் பார்க்கிறேன்

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.அஸ்மா,
    முதன்முறை கேள்விப்படுகிறேன்.
    பார்க்கிறேன். அறிந்தேன். ஏகப்பட்ட தகவல்கள்.
    மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  5. அரிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..இங்கு இந்த பழம் கிடைப்பதே அரிது.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இது இவ்வளவு விசயம் இருக்கா...அறிய தந்தமைக்கு ஜசாக்கல்லாஹ்...

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பலர் மறந்த பழவகையை நினைவுபடுதியதுமில்லாமல், அதன் பயன்களை தெளிவாக கூறி ஆர்வ மூட்டியுள்ளீர்கள், அவசியமான பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்,பல பயனுள்ள மருத்துவகுணம் கொண்ட பழத்தினை இன்று தான் பார்க்கிறேன்.. பயனுள்ள தகவல்.. தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி. மொட்டின் நிலைகளும் அதன் மலரும் படங்கள் மிகவும் அழகு

    ReplyDelete
  9. அறிய தகவலுக்கு மிகவும் நன்றி. நான் சிங்கப்பூர் சென்ற போது, இப்பழத்தை சாப்பிட்டு இருக்கிறேன். நம்மூரில் மாம்பழம் போல அங்கே இப்பழத்தை சாப்பிடுகிறார்கள். சிறிது நாட்களுக்கு முன்பு ரியாதில் தப்பாப் ரோட்டில் உள்ள லுலு (LULU) சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். அங்கே இப்பழம் கிடைக்கிறது.

    ReplyDelete
  10. ////////////////////////////////////////////////

    Health risks Research carried out in the Caribbean has suggested a connection between consumption of soursop("காட்டு ஆத்தா பழம்") and atypical forms of Parkinson's disease (நடுக்குவாதம்) due to the very high concentration of 'annonacin'.

    According to Cancer Research UK, Annona muricata is an active principle in an unlicensed herbal remedy marketed under the brand name Triamazon.[7] Triamazon is not licensed for medicinal use and the sale of the product resulted in a conviction on four counts of selling unlicensed medical products, and other charges, for a vendor in the United Kingdom.

    It's black seeds are... "indigestible"...! oh..!

    http://en.wikipedia.org/wiki/Soursop

    ///////////////////////////////////////////////

    Please,
    Sister Asma clear these info.
    They are really terrible... are these info correct..? Have you known about it..?

    ReplyDelete
  11. அஸ்ஸ்லாமு அலைக்கும் அஸ்மா
    இன்றைய காலக்ட்டhத்தhில் கேன்சர் தான்் முதன்ம்யான நோயா இருக்கு.

    மிக அரிய தகவல்கள் கண்டிப்பாக் எல்லொோருக்க்ும் பயன் படும.

    ReplyDelete
  12. @ ஹைதர் அலி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //மாஷா அல்லாஹ் எவ்வளவு விபரங்கள் இந்த பழத்தைப் பற்றி ஆய்வறிக்கை சமர்பித்து முனைவர் பட்டம் எதுவும் வாங்க போறீங்களா?//

    முனைவர் பட்டமெல்லாம் ஆசையில்லை சகோ :) 'வாழ்வா, சாவா' என்ற பலபேரின் உயிர்ப் போராட்டத்தில் இதைக்கொண்டு (இறைவன் உதவியால்) மக்களுக்கு பலன் கிடைத்தால் அதுவே மிகப்பெரிய சந்தோஷம்!

    //உங்கள் ஆய்வறிக்கை பவர்ஃபுல்லாக இருக்கு//

    :):) அல்ஹம்துலில்லாஹ்! இது என்னுடைய‌ ஆய்வறிக்கை அல்ல. படித்து தொகுத்த‌றிக்கை :)) அதாவது பல நாட்கள் தேடிப்படித்து, தொகுத்தது :)

    //அப்புறம் வீடு கட்டும் போதே தோட்டத்திற்கு பெரிய இடம் விட்டு தான் கட்டிக் கொண்டு இருக்கிறேன் விரைவில் எங்கள் தோட்டத்தில் இதை கொண்டு வர முயற்சிக்கிறேன்//

    நிச்சயமா இந்த மரத்தை நட்டுவைங்க சகோ. ஆன்டி கேன்சராக இருப்பதால் வரும் முன் காக்கவும் இதைச் சாப்பிடலாம். மற்றவர்களுக்கும் உதவலாமல்லவா?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  13. @ திண்டுக்கல் தனபாலன்...

    //அருமை! பல தகவல்கள்!

    த.ம. 4//

    கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  14. @ ஹைதர் அலி...

    //மலேசியாவில் இருந்தபோது சாப்பிட்டு இருக்கிறேன் அதற்கு பிறகு இந்த பழத்தை இங்கு பதிவில் பார்க்கிறேன்//

    மலேஷியா போன்ற நாடுகளில் சர்வ சாதாரணமாக கிடைப்பதுபோல் நம் நாட்டிலும் இதை விளைவிக்கவேண்டும். சிறிய தோட்டமே இதற்கு போதுமானது. தெரிந்தவர்களிடமும் இதைப் பகிர்ந்துக் கொள்ளுங்க சகோ.

    ReplyDelete
  15. @ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~...

    ஸலாம் சகோ.

    //முதன்முறை கேள்விப்படுகிறேன்.
    பார்க்கிறேன். அறிந்தேன். ஏகப்பட்ட தகவல்கள்//

    நன்றி சகோ. மற்ற‌வர்களிடமும் இதைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  16. @ ராதா ராணி...

    //அரிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..இங்கு இந்த பழம் கிடைப்பதே அரிது//

    இதன் பழம் அண்டை மாநிலம் கேரளா போன்று தமிழ்நாட்டிலேயே வேறு எங்காவது கிடைக்கலாம். விசாரித்துப் பாருங்க ராதா!

    அத்துடன் நீங்கள் இந்தியாவில் இருப்பதால் இந்த மரம் வளர்க்க உங்களுக்கு சாத்தியமாகும் என நினைக்கிறேன். ஒரே ஒரு மரம் நட உங்களிடம் இடம் இருந்தாலே போதும். விதையிலிருந்து முளைக்க வைத்து வெயிட் பண்ணாமல் மரம், செடிகள் விற்பனைக்காகவே உள்ள (நர்சரி செடிகள் தயாரித்து விற்கும்) இடங்களில் இந்த மரத்தின் வளர்ந்த கன்றுகளாக வாங்கிவைத்து மரமாக்கிப் பாருங்கள். அவர்களிடம் இல்லாவிட்டால்கூட ஆர்டர் பண்ணினால் வரவழைத்துத் தருவார்கள்.

    வருகைக்கு நன்றி ராதா :)

    ReplyDelete
  17. @ Aashiq Ahamed...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //இது இவ்வளவு விசயம் இருக்கா...அறிய தந்தமைக்கு ஜசாக்கல்லாஹ்...//

    தங்கள் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் சகோ :)

    ReplyDelete
  18. @ கார்பன் கூட்டாளி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //பலர் மறந்த பழவகையை நினைவுபடுதியதுமில்லாமல், அதன் பயன்களை தெளிவாக கூறி ஆர்வ மூட்டியுள்ளீர்கள், அவசியமான பதிவு.

    வாழ்த்துக்கள்//

    பலர் மறந்த பழவகையா ...?!!! அப்படீன்னா தமிழ்நாட்டில் இது கிடைக்கிறதா? சில மாத‌ங்களுக்கு முன்புதான் இதுபற்றி கேள்விப்பட்டேன். பதிவு போடதான் தாமதமாகிவிட்டது. ஆனால் 'மறந்த பழவகை' என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கண்டிப்பா இது நம் பகுதிகளில் ஏற்கனவே கிடைக்கிறது என நினைக்கிறேன். தகவல் தெரிந்தால் தயவுசெய்து நிச்சயம் இங்கே சொல்லுங்க சகோ.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  19. @ சிநேகிதி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //பல பயனுள்ள மருத்துவகுணம் கொண்ட பழத்தினை இன்று தான் பார்க்கிறேன்.. பயனுள்ள தகவல்.. தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி//

    இதுபோன்ற பழவகைகள் நம்ம பக்கமெல்லாம் அதிக புழக்கத்தில் இல்லாததால் நமக்கு புதிதாகதான் இருக்கும் ஃபாயிஜா. அதிலுள்ள ஆன்டி கேன்சர் தன்மைக்காகவே இதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தகவல் பகிர்வுகள் :)

    //மொட்டின் நிலைகளும் அதன் மலரும் படங்கள் மிகவும் அழகு//

    இறைவனின் படைப்பில் அழகும் ஆச்சரியமுமே நிறைந்துள்ளன, சுப்ஹானல்லாஹ்! வருகைக்கு நன்றி ஃபாயிஜா.

    ReplyDelete
  20. @ Umar Farook...

    //அறிய தகவலுக்கு மிகவும் நன்றி. நான் சிங்கப்பூர் சென்ற போது, இப்பழத்தை சாப்பிட்டு இருக்கிறேன். நம்மூரில் மாம்பழம் போல அங்கே இப்பழத்தை சாப்பிடுகிறார்கள். சிறிது நாட்களுக்கு முன்பு ரியாதில் தப்பாப் ரோட்டில் உள்ள லுலு (LULU) சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். அங்கே இப்பழம் கிடைக்கிறது.//

    சிங்கப்பூர், மலேஷியாவில் மாம்பழம்போல் சர்வ சாதாரணமாக சாப்பிடுவதாகவே நாங்களும் கேள்விப்பட்டோம். சவூதியிலும் கிடைக்கிறதா? தகவலுக்கு நன்றி சகோ. உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களுடனும் இந்தப் பழத்தைப்பற்றி பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  21. @ Jaleela Kamal...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் ஜலீலாக்கா.

    //இன்றைய காலக்ட்டhத்தhில் கேன்சர் தான்் முதன்ம்யான நோயா இருக்கு.

    மிக அரிய தகவல்கள் கண்டிப்பாக் எல்லொோருக்க்ும் பயன் படும//

    ஆமா ஜலீலாக்கா, எங்கு பார்த்தாலும் இந்த கேன்சர் சகஜமாகிவிட்டது :( பிறந்து சில மாதங்களே ஆன‌ குழந்தை முதல் அனைவரையும் தாக்கக்கூடிய இந்தக் கொடிய நோயைவிட்டும் இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

    இந்தத் தகவல்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்து, அனைவருக்கும் பயன்படட்டும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  22. இந்தபழம் சென்னையில் கிடைக்குதா அஸ்மா .ஒருஉணவுக்குழாய் புற்று நோயாளிக்கு தேவை சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறுங்களேன்

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    இது வரை கேள்விபடாத ஒரு பழம்.மிக பயனுள்ள தகவல்கள் சகோதரி.இங்கு கிடைத்தால் தோட்டத்தில் வைக்கிறேன்.அறிய தந்ததற்கு மிக நன்றி..

    ReplyDelete
  24. @ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~...

    //Please,
    Sister Asma clear these info.
    They are really terrible... are these info correct..? Have you known about it..?//

    உங்களின் தகவலுக்கு சற்று கூடுதல் விளக்கம் தரவேண்டும் சகோ. அதனால் இதற்கான பதிலை விளக்கி தனியாக பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  25. @ VANJOOR...

    //சுட்டியை சொடுக்கி படியுங்கள்//

    மறக்கடிக்கப்படும் விஷயங்களை வெளிக்கொண்டுவரும் அவசியமான பதிவு சகோ. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  26. @ angelin...

    //இந்தபழம் சென்னையில் கிடைக்குதா அஸ்மா .ஒருஉணவுக்குழாய் புற்று நோயாளிக்கு தேவை சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறுங்களேன்//

    சென்னையில் நிச்சயம் கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஸ்பென்ஸர் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் ஊட்டி, கொடைக்கானல், மற்ற வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் வர‌க்கூடிய பழவகைகள் கிடைக்கும். அதுபோன்று இதுவும் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள் ஏஞ்சலின். உங்களுக்காக நானும் விசாரித்துச் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. I am given to understand the following thro an article from Indian Express published in the mid of April 2013.

      Dr. Anto, No.6, Vasantham Colony, Kovaipudur, Coimbatore (+919854040424) has written an article in the Indian express that the fruit "GRAVIOLA" cures any type of CANCER. I have confirmed the information thro web also.

      Cancer patients can approach him for getting the fruits thro him OR the same can also be had from the following contact info:
      1. GMS fruit stall, Koyambedu, chennai- Mr. Manikandan-94443 66746
      2. JOYS fruit stall, Koyambedu, chennai-94442 72149.

      The said fruit can also be obtained from the leading Pazhamudir Nilayam in big cities like Coimbatore, Trichy & Madurai.

      Delete
  27. @ Sabitha...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //இது வரை கேள்விபடாத ஒரு பழம்.மிக பயனுள்ள தகவல்கள் சகோதரி.இங்கு கிடைத்தால் தோட்டத்தில் வைக்கிறேன்.அறிய தந்ததற்கு மிக நன்றி.//

    கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வைங்கமா. வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  28. அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)

    போட்ட கமெண்டையே கானோம்.... ஏதாவது தவறா கேட்டிருந்தா ஸாரி.....

    ReplyDelete
  29. @ ஜெய்லானி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //போட்ட கமெண்டையே கானோம்.... ஏதாவது தவறா கேட்டிருந்தா ஸாரி.....//

    இந்தப் பதிவில் இதற்கு முன் உங்களின் எந்த கமெண்ட்டும் வரவில்லையே சகோ..?!!! நீங்கள் இப்படி கேட்டதால் எதற்கும் Spam ல் பார்ப்போம் என்று பார்த்தால் அங்குமில்லை. மெயிலிலும் தேடியாச்சு :( அப்படீன்னா நீங்கள் எனக்கு கமெண்ட் போஸ்ட் பண்ணும்போது ஏதாவது எரர் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். நீங்கள் என்ன கேட்டிருந்தீர்கள் என்ப‌தை மீண்டும் இதே பின்னூட்டத்தில் அனுப்புங்க சகோ.

    ReplyDelete
  30. நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு கிடைக்குதாம் .
    கொடைக்கானலிலும் கிடைக்கும் என்கிறார்கள்
    கள் .சரியாக வந்ததும் கடை பற்றிய விபரங்கள் கூறுகிறேன் , இதை தேடப்போக நிறையபேருக்கு இதன் பயன்பாடு இப்பதான் தெரிகிறது .
    மற்றும் ஒரு ஆஷ்ரமம் மதுரை அருகிளிருக்காம் அங்கே இதன் சாறை அங்கே ட்ரீட்மென்ட் எடுப்போருக்கு தராங்க என்று ஒரு கமெண்டில் படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. @ angelin

      //நன்கு விசாரித்ததில் இந்த பழம் இலங்கையில் பெருமளவு கிடைக்குதாம் .
      கொடைக்கானலிலும் கிடைக்கும் என்கிறார்கள்
      கள் .சரியாக வந்ததும் கடை பற்றிய விபரங்கள் கூறுகிறேன்//

      கண்டிப்பாக சொல்லுங்க ஏஞ்சலின். அனைவருக்கும் உபயோகமா இருக்கும்.

      //இதை தேடப்போக நிறையபேருக்கு இதன் பயன்பாடு இப்பதான் தெரிகிறது//

      உண்மைதான்! இதன் பலன் தெரியாமலே பழங்களோடு பழங்களாக சாதாரணமாக பயன்படுத்துவதைவிட, அதன் அருமைத் தெரிந்து 'உணவே மருந்து' என்ற வகையில் பயன்படுத்தும்போது கண்டிப்பாக எல்லா தரப்பு மக்களும் பலனடைவார்கள்.
      .
      //மற்றும் ஒரு ஆஷ்ரமம் மதுரை அருகிளிருக்காம் அங்கே இதன் சாறை அங்கே ட்ரீட்மென்ட் எடுப்போருக்கு தராங்க என்று ஒரு கமெண்டில் படித்தேன்//

      எந்த நோய்க்கான ட்ரீட்மென்ட்டாக அதைத் தருகிறார்களாம் என்று கேட்டீர்களா? தெரிந்தால் பிறகு சொல்லுங்கள். நன்றி ஏஞ்சலின்!

      Delete
  31. அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம் செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ சைவம்

      //அருமையான பதிவு.ஹெல்த்கேர் மாத இதழில் இதனை பிரசுரம் செய்கிறேன்//

      இந்த ப்ளாக்கின் ("பயணிக்கும் பாதை" என்ற) பெயருடன் தாராளமாக பிரசுரம் பண்ணிங்க சகோ. எப்படியோ எல்லோரும் பயனடைந்தால் சரிதான். தங்களின் பிரசுரத்திற்கு பிறகு முடிந்தால் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  32. நல்ல பதிவு. இதை ஹெல்த்கேர் மாத இதழில் பிரசுரம் செய்கிறேன்.

    ReplyDelete
  33. உங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதிவு சகோதரி, நான் இருக்கும் நாட்டில் மலிவன விலைக்கு 1kg Rs.30/- கிடைக்கும் அதானல் அருமை தெரியவில்லை. இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவதன்மையா உங்களல் அறிந்துகொன்டேன். இன்ஷா அல்லாஹ் இன்றே சுவைத்துவிடுகிறேன். ஜசாக்கல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. @ Nizam

      //உங்களுடைய blog வருவது இதுவே முதல்முறை அருமையான பதிவு சகோதரி//

      அல்ஹம்துலில்லாஹ், நன்றி சகோ :)

      //நான் இருக்கும் நாட்டில் மலிவன விலைக்கு 1kg Rs.30/- கிடைக்கும் அதானல் அருமை தெரியவில்லை// உண்மைதான் சகோ.

      //இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவதன்மையா உங்களல் அறிந்துகொன்டேன். இன்ஷா அல்லாஹ் இன்றே சுவைத்துவிடுகிறேன். ஜசாக்கல்லாஹ்//

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  34. சில கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்ய வேண்டும் தங்களால் முடியுமா? ஆம் என்றால் editor@tamilhealthcare.com க்கு அஞ்சல் எழுதுங்கள்

    ReplyDelete
  35. If u can translate some article from english to tamil pls mail me editor@tamilhealthcare.com

    ReplyDelete
    Replies
    1. @ சைவம்

      //If u can translate some article from english to tamil pls mail me editor@tamilhealthcare.com//

      முடிந்தால் தெரிவிக்கிறேன்.

      Delete
  36. அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன் [டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்

    ReplyDelete
  37. அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன் [டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்

    ReplyDelete
    Replies
    1. @ balkkis rani

      வ‌‌அலைக்குமுஸ்ஸலாம்!

      //நீங்க சொன்ன தகவல் எல்லாம் டொரியான் பழத்துக்கா ஏன் கேக்குரேன் என்றால் டொரியான் விதை பலாபழ விதையே விட பெரியதா இருக்கும் இது சிம்ட்டா பழம் போல் உள்ளதே அதான் கேக்குரேன்//

      இல்லமா, அது துரியான் பழம் அல்ல! அதன் மலாய் பெயர் "Durian Belanda"

      //[டக் என்று எனக்கு எதுவும் புரியாது அவ்வள்வு அறிவு ஹ ஹஹா ] நான் மலேசியாவில்தான் வசிக்கிரேன் அதான் ரெம்ப தீவிரமா விசாரிக்கிரேன்//

      புரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை சகோதரி! :) நான் பதில் சொல்லதான் தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் :) இதிலுள்ள படங்களை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு விசாரித்துப் பாருங்கள். கிடைத்தால் அவ்வப்போது சாப்பிடுங்கள் :) வருகைக்கு நன்றி :)

      Delete
  38. மாஷா அல்லாஹ்! இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம்? எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ? ஆனால் யாரும் இந்த பழத்தை சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள். எங்கள் விளையில் (தோட்டம்) இது விளையும். நான் சிறுவனாக இருக்கும் போது இந்த பழத்தை பறித்து வீட்டுக்கு கொண்டு வந்தால் என்னைத் தவிர வேறு எவரும் சாப்பிடவும் மாட்டார்கள் :).

    இத்துனை அற்புதம் இந்த பழத்தில் இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இப்பழத்தை எப்பாடுப்பட்டாவது நான் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப் போகிறேன், இன்ஷா அல்லாஹ்.

    தகவலைத் தேடித் தந்த சகோதரிக்கு நன்றிகள் பல. ஜஸாகல்லாஹு கைரா. இதனை பார்க்கத் தூண்டிய எனது இல்லத்தரசிக்கும் நன்றிகள் பல :)

    ReplyDelete
    Replies
    1. @ இப்னு ஹாத்தூன்

      //மாஷா அல்லாஹ்! இவ்வளவு அற்புதமான பழமா பாஞ்சு பழம்?//

      இதற்கு 'பாஞ்சு பழம்' என்ற பெயரும் உண்டா சகோ? தகவலுக்கு நன்றி.

      //எங்கள் ஊரில் (குமரி மாவட்டம்) இந்த பழம் சர்வசாதாரணமாக கிடைக்கும். குமரி மாவட்டம் கேரளாவுக்கு அருகில் என்பதால் கிடைக்குதோ என்னவோ? ஆனால் யாரும் இந்த பழத்தை சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள்//

      குமரி மாவட்டம் என்றால் எந்த ஊர் பக்கம் அதிகமாக கிடைக்கிறது? இப்போதும் அங்கு கிடைக்கிறதா? என்ற‌ தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்க சகோ. சிலருக்கு தேவைப்படுகிறது.

      //இத்துனை அற்புதம் இந்த பழத்தில் இருக்கிறது எனத் தெரிந்தவுடன் இப்பழத்தை எப்பாடுப்பட்டாவது நான் வசிக்கும் வளைகுடா நாட்டுக்கு கொண்டுவர முழு முயற்சி எடுக்கப் போகிறேன், இன்ஷா அல்லாஹ்//

      இன்ஷா அல்லாஹ், உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கட்டும் :)

      //தகவலைத் தேடித் தந்த சகோதரிக்கு நன்றிகள் பல. ஜஸாகல்லாஹு கைரா. இதனை பார்க்கத் தூண்டிய எனது இல்லத்தரசிக்கும் நன்றிகள் பல :)//

      வருகைத்தந்து, கருத்துக்களிட்ட உங்களுக்கும் இந்த கட்டுரையைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உதவிய உங்கள் இல்லத்தரசிக்கும் என் நன்றிகள் :)

      Delete
  39. அஸ்ஸலாமு அலைக்கும் இந்த காட்டு ஆத்தா பலம் துரியான் பலம் என்ற பெயரில் என் கணவர் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன் இது cergy saint cristophe இல் பிலால் கடையில் கிடைக்கும் நாம் வங்கியும் இருக்கிறோம் இங்கு உள்ளவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என ninaikkiren sabina

    ReplyDelete
    Replies
    1. @ sabina

      வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

      //இந்த காட்டு ஆத்தா பலம் துரியான் பலம் என்ற பெயரில்//

      இல்லமா, அது துரியான் பழம் அல்ல! துரியான், பலா வகையாக இருந்தாலும் இந்தப் பழம் வேறு.

      வருகைக்கு நன்றி சபீனா.

      Delete
  40. நன்றி இந்த பழம் எங்கே கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ். அவசரம் ஒரு புற்று நோயாளிக்கு தேவைப்படுகிறது. இது உண்மைதானா. Cell 9790069648

    ReplyDelete
  41. இந்த பழம் தழிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் சொல்லுகள்

    ReplyDelete
  42. இந்த பழம் தேவை படுவோர்கல் 8667532027.தொடர்பு கொள்ளவும

    ReplyDelete
  43. இந்த பழம் தேவை படுவோர்கல் 8667532027.தொடர்பு கொள்ளவும

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை