இவ்வுலகில் நம்முடைய தேவைகள் அதிகமாகும்போது அதற்கேற்றவாறு வணிகங்களையும், உற்பத்திகளையும் பெருக்குவதோடு வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்வது நமக்கு அவசியமாகி வருகின்றன. அதுபோன்ற அவசியத் தேவையாகிப்போன, வந்த பிறகு வருந்துவதைவிட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகளில் ஒன்றுதான் இன்றைய "இன்சூரன்ஸ்" முறையாகும்.
கப்பல் மூலமாக வணிகம் செய்துவந்த வணிகர்கள், இயற்கை சீற்றங்களினால் பொருட்கள் சேதமடைந்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பதற்காக யோசித்து உருவாக்கியதுதான் காப்பீட்டு முறைகளின் ஆரம்பம் என்பதாக சொல்லப்படுகிறது. 'அசம்பாவிதங்கள் இதிலும்கூட நடக்கலாம்' என இன்றைக்கு நாம் நினைக்கும் பெரும்பாலான விஷயங்களுக்கு இந்தக் காப்பீட்டு முறை ஏற்படுத்தப்பட்டு அது ஒரு பெரிய துறையாகவே விளங்குகிறது. இந்த முறையானது எதிர்காலத்தில் நாம் எதிர்பாராமல் நடக்கக்கூடிய விபத்துகள் மற்றும் பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகளிலிருந்து மீட்பதின் மூலம் ஓரளவுக்காவது அதன் பாதிப்புகளை ஈடுசெய்து பாதுகாப்பு தருவதாக உள்ளதால் இதை 'காப்பீடு' என்கிறார்கள். இவற்றில்,
ஆயுள் காப்பீடு (Life Insurance)
சுகாதாரக் காப்பீடு (Health Insurance) அல்லது
மருத்துவக் காப்பீடு (Medical Insurance)
வாகனக் காப்பீடு (Vehicle Insurance)
இல்லக் காப்பீடு (Home Insurance)
பயணக் காப்பீடு (Travel Insurance)
விபத்துக் காப்பீடு (Casualty Insurance)
சொத்துக் காப்பீடு (Property Insurance)
பொறுப்புக் காப்பீடு (Liability Insurance)
வரவுக் காப்பீடு (Credit Insurance)
தொழில் காப்பீடு (Business Insurance)
ஊடகக் காப்பீடு (Media coverage Insurance)
வளர்ப்பு பிராணிகள் காப்பீடு (Pet Insurance)
மங்கையர் காப்பீடு (Women Insurance)
பயிர்க் காப்பீடு (Agri-Insurance)
போன்றவையும், இன்னும் பல வகைகளும் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. இப்படியான காப்பீட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் அரசு சார்ந்த நிறுவனங்களாகவும் பல தனியார் நிறுவனங்களாகவும் உள்ளன. இதில் எந்த வகையான காப்பீட்டு முறையாக இருந்தாலும் அவை எல்லாமே குறிப்பிட்ட சில ஒப்பந்தங்களின்படியே செயல்படுத்தப்படுகின்றன.
ஒருவர் காப்பீடு செய்யும் பொருளுக்கு சேதம் அல்லது அழிவு ஏற்பட்டால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையையோ அல்லது பொருளின் சந்தை விலையையோ அல்லது இழப்பீட்டைச் சமாளிக்கும் வகையிலான ஒரு தொகையோ காப்பீட்டு நிறுவனம் கொடுப்பதாகவும், அதற்காக காப்பீடு செய்பவர் குறிப்பிட்ட ஒரு தொகையை ப்ரீமியமாக செலுத்தவேண்டும் என்றும் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்திருப்பார்கள். ப்ரீமியம் என்பது, உதாரணமாக ஒரு பாலிசிதாரர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்தையோ, வீட்டையோ இன்ஷூர் செய்வதற்கு ஒரு வருஷத்திற்கு கொடுக்கும் விலை சுமார் ரூ. 2,000 என்றால் அந்த தொகைதான் "ப்ரீமியம்" (Premium) எனப்படுகிறது.
இவ்வாறு நிர்ணையிக்கப்படும் அந்த ஒப்பந்த அடிப்படை(Policy)க்கு உட்பட்ட விபத்துகளினால் ஏற்படும் சேதமோ அல்லது அழிவோ இயற்கையானது அல்லது இழப்பீடு கொடுப்பதற்கு தகுதியானது என்று (ஒப்பந்த விதிகளை வைத்து) அந்த நிறுவனம் முடிவெடுக்கும் பட்சத்தில், காப்பீடு செய்யப்பட்ட தொகையை அந்த நபருக்கு காப்பீடு நிறுவனம் இழப்பீடாக கொடுத்துவிடுகிறது. பொருளுக்கு சேதமோ, இழப்போ ஏற்படாத மற்ற பாலிசிதாரர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பித் தரப்படாது. இதுதான் இன்சூரன்ஸின் பொதுவான நிலையாகும். சுருங்கச் சொல்வதாக இருந்தால் ஒரு நபருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை/பாதிப்பை பல நபர்களும் பகிர்ந்துக் கொள்ளவும், தனக்குரிய தற்காப்பு நடவடிக்கையாக அமைத்துக் கொள்ளவும் செய்யப்படும் ஒரு ஏற்பாட்டு முறைதான் "இன்சூரன்ஸ்" ஆகும்.
அதேசமயம் இந்த கான்செப்ட் "ஆயுள் காப்பீடு" என்று சொல்லப்படும் Life Insurance க்கும் பொருந்துமா? என்றால், ஒருசில பாலிசிகளைத் தவிர மற்ற அனைத்தும் முழுமையாக பொருந்தாது. ஏனெனில் பெரும்பாலான லைஃப் இன்சூரன்ஸ்களில் மணி பேக் (Money Back) இடம் பெற்றிருக்கும். அதுவும் பாலிசியின் முடிவில் "போனஸ்" என்ற பெயரில் வட்டித் தொகையும் கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அது எந்த விதத்தில் சரியானது? அதில் எந்த வகை பாலிசிகள் சரியானதல்ல? என்பதையெல்லாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நாம் வரக்கூடிய பதிவில் பார்க்கப் போகிறோம் (இன்ஷா அல்லாஹ்)!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஎன்ன டிரெய்லர் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க?
@ மு.ஜபருல்லாஹ்
Deleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//என்ன டிரெய்லர் எல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க?//
ம்.. :) மொத்தமா போட்டா அவ்வளவையும் படிக்கணுமே நீங்கள்லாம், அதனாலதான் ட்ரெய்லரா போட்டாச்சு :-) வருகைக்கு நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ReplyDeleteதற்போது இது பற்றி தான் குழப்பத்தில் உள்ளேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவு தெளிவு படுத்தும் என நினைக்கிறேன்.
@ Abdul Basith
Deleteவ அலைக்குமுஸ்ஸலாம் சகோ!
//தற்போது இது பற்றி தான் குழப்பத்தில் உள்ளேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவு தெளிவு படுத்தும் என நினைக்கிறேன்//
இதைத் தொடரும் அடுத்த பதிவுகள் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும். வருகைக்கு நன்றி சகோ.
“இன்ஸுரன்ஸ்” செய்வது ஹராம் !
ReplyDeleteஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும் காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம்தான் இன்சூரன்ஸ்.
@ சேக்கனா M. நிஜாம்
Delete//“இன்ஸுரன்ஸ்” செய்வது ஹராம் !//
“இன்ஸுரன்ஸ்” என்பதே ஹராமா சகோ? நேரமிருந்தால் அடுத்த பதிவுகளையும் படித்துவிட்டு பிறகு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். வருகைக்கு நன்றி சகோ.
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
@ Rathnavel Natarajan
Delete//அருமையான பதிவு.
நன்றி//
வருகைக்கு நன்றி ஐயா. இதைத் தொடர்ந்து வரும் பதிவுகளையும் முடிந்தால் பாருங்கள்.
சலாம் சகோ அஸ்மா,
ReplyDeleteஇந்த பதிவ படிச்ச உடனே ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இஸ்லாமிய மக்கள் இடையேயும் எந்த பாலிசி எடுக்கலாம், எது எடுக்கக்கூடாது என்ற கொழப்பம் நிறைய இருக்கிறது. அனைவருக்கும் புரியும்படி எழிமையாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
என்னை பொறுத்தவரை மணி பேக் பாலிசி எல்லாமே ஹராம் தான். ஆயினும் ஆதாரபூர்வமாக நிரூபித்தால் என் கருத்தை மாற்றிக் கொள்வேன்.
ஆர்வமுடன் அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன்.
@ சிராஜ்
Deleteசலாம் சகோ.
//இந்த பதிவ படிச்ச உடனே ரொம்ப சந்தோசமா இருந்துச்சு//
அப்படியா.. சந்தோஷம் :)
//இஸ்லாமிய மக்கள் இடையேயும் எந்த பாலிசி எடுக்கலாம், எது எடுக்கக்கூடாது என்ற கொழப்பம் நிறைய இருக்கிறது. அனைவருக்கும் புரியும்படி எழிமையாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது//
இன்ஷா அல்லாஹ், என்னால் முடிந்தவரை தெளிவாக எழுதுகிறேன்.
//ஆர்வமுடன் அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன்//
உங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள் :) இத்தனை நாட்களாக தமிழ் டைப்பிங் சரியான முறையில் வேலை செய்யாமல் போனதால் கருத்துரைகளுக்கு பதில் அளிக்கவே தாமதமாகிவிட்டது. அதனால் அடுத்த பதிவுக்கும் சற்றே தாமதம் ஆகலாம் :) மன்னிக்கவும். இயன்றவரை விரைவில் எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ். வருகைக்கு நன்றி சகோ.
\\அதுவும் பாலிசியின் முடிவில் "போனஸ்" என்ற பெயரில் வட்டித் தொகையும் கணக்கிட்டுக் கொடுக்கப்படும். அது எந்த விதத்தில் சரியானது? அதில் எந்த வகை பாலிசிகள் சரியானதல்ல? என்பதையெல்லாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நாம் வரக்கூடிய பதிவில் பார்க்கப் போகிறோம் (இன்ஷா அல்லாஹ்)!\\
ReplyDeleteதொடருங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
@ Gopi Ramamoorthy
Delete//தொடருங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்//
உங்களின் ஆர்வம் எழுதுவதற்கு மேலும் உற்சாகமளிக்கிறது :) மிக்க நன்றி! உங்களுக்கு முடிந்தால் தொடர்ந்து பாருங்கள். வருகைக்கும் நன்றி சகோ.
விளக்கமான பதிவு ! நல்லா இருக்குங்க ! நன்றி !
ReplyDeleteவிளக்கமான பதிவு ! நல்லா இருக்குங்க ! நன்றி !
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன்
Delete//விளக்கமான பதிவு ! நல்லா இருக்குங்க ! நன்றி !//
தொடந்து படிங்க சகோ. வருகைக்கு நன்றி சகோ.
பலருக்கு இருக்கும் குழப்பத்தைத் தீர்த்துவிடுங்கள் அஸ்மா....(என்னையும் சேர்த்து).... இந்த குழப்பமே வேண்டாம் என்பவர்களும் இது தவறு என்பவர்களும் இஸ்லாமியவங்கிகளில் காப்பீடு செய்கிறார்கள்... இந்தியாவில் இந்த வங்கி இருக்கிறதா?
ReplyDeleteநல்ல தொடர்.
@ enrenrum16
Delete//பலருக்கு இருக்கும் குழப்பத்தைத் தீர்த்துவிடுங்கள் அஸ்மா....(என்னையும் சேர்த்து)....//
இன்ஷா அல்லாஹ், இறைவன் உதவியுடன் :)
//இந்த குழப்பமே வேண்டாம் என்பவர்களும் இது தவறு என்பவர்களும் இஸ்லாமியவங்கிகளில் காப்பீடு செய்கிறார்கள்... இந்தியாவில் இந்த வங்கி இருக்கிறதா?//
இதுவரை (எனக்குத் தெரிந்து) இல்லை. தெரிந்தால் சொல்கிறேன். வருகைக்கு நன்றி தோழி.
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா... நல்லாயிருக்கீங்களா?
ReplyDeleteஉங்கள் பக்கம் இன்றே என்னால் வர முடிந்தது.
இந்த பதிவை படித்தேன்.மிகவும் அவசியமான பதிவாக உள்ளது.
நிச்சயம் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவருக்கும் இது அவசியமான ஒன்றுதான்.
குழப்பங்கள் இதை பற்றி உள்ளவர்களில் நானும் ஒருவள்.
என்னவர் என் பிள்ளைகளீன் படிப்பிற்க்காக என போட்டுள்ளார்.
இருப்பினும் அது பற்றிய குழப்பம் அவருக்கும் இல்லாமல் இல்லை.
இருக்கட்டும் இதை பற்றி விரிவாக நாம் மறுபடியும் பேசுவோம்.
உங்களுடைய அடுத்த பதிவை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.
நல்ல விஷயங்களை அழகிய முறையில் விளக்கியமைக்கு மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
அன்புடன்,
அப்சரா.
@ apsara-illam
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் அப்சரா! அல்ஹம்துலில்லாஹ் நலமே. நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி :)
//இந்த பதிவை படித்தேன்.மிகவும் அவசியமான பதிவாக உள்ளது.
நிச்சயம் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவருக்கும் இது அவசியமான ஒன்றுதான்.//
நிச்சயமா அப்சரா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இதன் தொடரை அவசியம் பாருங்கள், இன்ஷா அல்லாஹ்.
அருமையான தலைப்பு, இவ்வளவு காப்பீடுகளா!!
ReplyDelete//ஆயுள் காப்பீடு// - இந்த காப்பீட்டில் ஏழு வருடம் நான் பணத்தை கட்டி கேன்சல் செய்தவன். கட்டினா பணத்தில் பாதிகூட கைக்கு கிடைக்கிலா. மிச்ச கட்டி ழுலுசா வங்களானா இன்னியும் 13 வருஷம் ஆகும். அப்படியும் 13 வருஷம் கட்டி பணத்தை வாங்கினலும் (அப்போதையா மதிப்பில்) 40 கிராம் தங்கம் கூட வாங்கமுடியது. TAX தள்ளுபடி கிடைக்கும் என்று இதுலா போய் விழுந்தவன்.
//மருத்துவக் காப்பீடு// இது அருமையான திட்டம் குடும்பமே பயன் அடைந்தோம்.
இன்ஷா அல்லாஹ் எழுதுகள் சகோதரி. மற்ற காப்பீடுகளை தெரிந்துகொள்கிறேன்.
ஏக இறைவனின் திருப்பெயரால்..
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஒரு கொள்கை சகோதரர் மூலம் உங்களின் இந்த வலைப் பூ வை
பார்வையிட இப்பொழுது தான் அல்லாஹ்.. நாடியுள்ளான்.
அல்ஹம்துலில்லாஹ்..
அழகான அனைத்தும் கலந்த இணையத்தளம்..
சிறப்பாக நடை போடும் தாவாஃ களம்..
உங்களின் இப் பணி மேலும் தொடர வாழ்த்தி..
வல்ல ரஹ்மானிடம் துவாச்செய்கிறேன்.
முக்கிய குறிப்பு : தவ்ஹீதை சொல்ல கூடிய சகோதரியே..
இப் பகுதியில் வரும் "திரை மணம்"
என்ற திரைப்படங்களின் விமர்சனங்களை நீக்கி விடுவது தான்
இவ் வலைத்தளத்திற்க்கு மிகவும் நல்லது.
இல்லை? என்றால்.. தவ்ஹீதும்,தாவாஃவும்
என்றும்,எப்பொழுதும் எடுபடாது.
ஜஸாக்கல்லாஹூ கைரா..