தன்னைத் தானே சுழன்றுக்கொண்டே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பூமி சின்னதாக ஒரு குலுங்கு குலுங்கினாலே ஆங்காங்கே பூமி பிளக்கிறது. கட்டிட்டங்கள் சரிந்து கற்குவியல்கள் ஆகின்றன. அதன் அதிர்ச்சியில் அலைக்கழிக்கப்படும் அலைகள் ஊருக்குள் எகிறிப் பாய்ந்து 'சுனாமி'யாக பெயர் சூட்டப்படுகிறது. பல லட்சம் மக்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளுமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துப் போகிறார்கள். இவை அனைத்தும் இயற்கைதானா? இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?
படைப்புகளில் உயர்ந்த படைப்பாகவும் வடிவில் அழகிய அமைப்பாகவும் தன்னை உருவாக்கி, இவ்வுலகில் வாழத் தேவையானவற்றைக் கொடுத்து, அவ்வப்போது வரும் துன்பங்களைக் கேட்டோ/கேட்காமலோ துடைத்து, அனுதினமும் எதிர்ப்பார்த்தும்/பார்க்காமலும் மகிழ்ச்சியினைக் கொடுத்து தன்னை மட்டும் வணங்கச் சொன்ன இறைவனையே இல்லையென்று சொல்லும் மனிதன் நன்றி கெட்டவன் இல்லையா?
படைத்தவனை சிந்தித்துணர முற்படாமல் படைப்பினங்கள் அவை உயிருள்ள பிராணிகளாயினும், உயிரற்ற பொருட்களாயினும், தன்னைப் போன்ற மனிதனே ஆயினும் அவற்றை வணங்கும் மனிதன் இறைவனிடத்தில் துரோகி இல்லையா?
ஏக இறைவனை மட்டுமே வணங்கிக் கட்டுப்பட வழி தெரிந்தும் பெயரளவில் அதிலிருந்துக் கொண்டே தடம்புரண்டு செல்பவன் துரதிஷ்டவாதி இல்லையா?
மனிதனுக்கே இறைவனைப் பற்றிய அச்சமில்லாதபோது, தன் படைப்பினங்களில் நன்றிகெட்ட மனிதர்களை பூகம்பத்தினால் உயிருடன் பூமிக்குள் புதைக்க இறைவன் யாருக்கு அஞ்சவேண்டும்? மாட மாளிகையில் வாழ்பவர்களை சில நொடிப் பொழுதுக்குள் மண் குடிசைக்குள்ளோ, அதுவுமில்லாத நடுத்தெருவிலோ நிற்கவைக்க ஆலோசனைக் கூட்டமா தேவை அந்த இறைவனுக்கு?
இன்றைய நிகழ்ச்சி நாளைய வரலாறு! அத்தகைய வரலாறுகள் ஏட்டில் எழுதி பூட்டி வைக்கவும், இணையத்தில் பகிர்ந்து இன்றே மறக்கவும் மட்டும் என்றால், அவை நமக்கு படிப்பினைத் தராவிட்டால் அந்த ஏக இறைவனுக்கா நஷ்டம்?
பூகம்பமும், சுனாமியும் உலகில் எங்கோ ஒரு இடத்தில்தானே நடக்கிறது என்று அலட்சியமாக கருதுவது அறியாமை! நாளை நம்மில் யாருடைய பூமி வேண்டுமானாலும் குலுங்கலாம் என்பதற்கான இறைவனின் முன்னெச்சரிக்கைகளே இவை! இன்று இந்தோனேஷியாவிலும் இதற்கு முன்னர் ஜப்பான், அமெரிக்கா போன்ற இடங்களிலும், ஏன்.. இந்தியாவிலும் (குறிப்பாக குஜராத்திலும்) இன்னும் பல இடங்களிலும் நடந்தவற்றையெல்லாம் சட்டை செய்யாமல், தான் நடத்தும் அநியாயங்களிலும் அக்கிரமங்களிலும் அளவுகடந்து போகக் கூடியவர்கள்/அதிலேயே நீடித்திருப்பவர்கள் இதைவிடவும் கொடிய தண்டனைகளை அட்வான்ஸாக இவ்வுலகிலேயே எதிர்ப்பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதானே இறைவன் அவ்வப்போது சிறிய அளவில் எச்சரிக்கிறான்?
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
அல்லாஹும்ம இன்னீ அஊது பி[B]க[K] மின் ஜ[Z]வாலி நிஃமதிக[K] வத[TH]ஹவ்வுலி ஆஃபியதி[TH]க வஃபுஜாஅதி[TH] நிக்ம[TH]திக[K] வஜமீஇ ஸஹதிக[K]
பொருள் :
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறிவிடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
படைப்புகளில் உயர்ந்த படைப்பாகவும் வடிவில் அழகிய அமைப்பாகவும் தன்னை உருவாக்கி, இவ்வுலகில் வாழத் தேவையானவற்றைக் கொடுத்து, அவ்வப்போது வரும் துன்பங்களைக் கேட்டோ/கேட்காமலோ துடைத்து, அனுதினமும் எதிர்ப்பார்த்தும்/பார்க்காமலும் மகிழ்ச்சியினைக் கொடுத்து தன்னை மட்டும் வணங்கச் சொன்ன இறைவனையே இல்லையென்று சொல்லும் மனிதன் நன்றி கெட்டவன் இல்லையா?
படைத்தவனை சிந்தித்துணர முற்படாமல் படைப்பினங்கள் அவை உயிருள்ள பிராணிகளாயினும், உயிரற்ற பொருட்களாயினும், தன்னைப் போன்ற மனிதனே ஆயினும் அவற்றை வணங்கும் மனிதன் இறைவனிடத்தில் துரோகி இல்லையா?
ஏக இறைவனை மட்டுமே வணங்கிக் கட்டுப்பட வழி தெரிந்தும் பெயரளவில் அதிலிருந்துக் கொண்டே தடம்புரண்டு செல்பவன் துரதிஷ்டவாதி இல்லையா?
இன்றைய நிகழ்ச்சி நாளைய வரலாறு! அத்தகைய வரலாறுகள் ஏட்டில் எழுதி பூட்டி வைக்கவும், இணையத்தில் பகிர்ந்து இன்றே மறக்கவும் மட்டும் என்றால், அவை நமக்கு படிப்பினைத் தராவிட்டால் அந்த ஏக இறைவனுக்கா நஷ்டம்?
பூகம்பமும், சுனாமியும் உலகில் எங்கோ ஒரு இடத்தில்தானே நடக்கிறது என்று அலட்சியமாக கருதுவது அறியாமை! நாளை நம்மில் யாருடைய பூமி வேண்டுமானாலும் குலுங்கலாம் என்பதற்கான இறைவனின் முன்னெச்சரிக்கைகளே இவை! இன்று இந்தோனேஷியாவிலும் இதற்கு முன்னர் ஜப்பான், அமெரிக்கா போன்ற இடங்களிலும், ஏன்.. இந்தியாவிலும் (குறிப்பாக குஜராத்திலும்) இன்னும் பல இடங்களிலும் நடந்தவற்றையெல்லாம் சட்டை செய்யாமல், தான் நடத்தும் அநியாயங்களிலும் அக்கிரமங்களிலும் அளவுகடந்து போகக் கூடியவர்கள்/அதிலேயே நீடித்திருப்பவர்கள் இதைவிடவும் கொடிய தண்டனைகளை அட்வான்ஸாக இவ்வுலகிலேயே எதிர்ப்பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதானே இறைவன் அவ்வப்போது சிறிய அளவில் எச்சரிக்கிறான்?
அருமை சகோதர, சகோதரிகளே! இம்மண்ணில் பிறந்துவிட்ட அனைவருக்கும் மரணம் ரிசர்வ் செய்யப்பட்ட ஒன்று என்பதை யாருமே மறுக்க முடியாது. ஆயினும் நம் யாருக்கும் அத்தகைய தண்டனையுடன் கூடிய மரணங்கள் ஏற்பட்டுவிடாமல் ஏக இறைவனிடம் மன்றாடுவோம்!
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
அல்லாஹும்ம இன்னீ அஊது பி[B]க[K] மின் ஜ[Z]வாலி நிஃமதிக[K] வத[TH]ஹவ்வுலி ஆஃபியதி[TH]க வஃபுஜாஅதி[TH] நிக்ம[TH]திக[K] வஜமீஇ ஸஹதிக[K]
பொருள் :
இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறிவிடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சலாம் சகோ சரியான நேரத்தில் அவசியமான பதிவு.
ReplyDelete@ சுவனப்பிரியன்
Deleteசலாம் சகோ.
//சரியான நேரத்தில் அவசியமான பதிவு//
வருகைக்கு நன்றி சகோ.
எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.
ReplyDelete@ Starjan ( ஸ்டார்ஜன் )
Delete//எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக!//
வருகைக்கு நன்றி சகோ.
எல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.
ReplyDeleteநல்லதொரு பதிவு தக்கசமயத்தில்.
ReplyDelete@ ஸாதிகா
Delete//நல்லதொரு பதிவு தக்கசமயத்தில்//
வருகைக்கு நன்றி ஸாதிகா அக்கா.
ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு..
ReplyDelete@ ராதா ராணி
Delete//ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதா!
சலாம் சகோ அஸ்மா,
ReplyDelete/* இறைவனையே இல்லையென்று சொல்லும் மனிதன் நன்றி கெட்டவன் இல்லையா? */
நிச்சயம் நன்றி கெட்டவர்கள் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
நல்ல , சிந்திக்க வைக்கும் பதிவு.
@ சிராஜ்
Deleteசலாம் சகோ.
//நிச்சயம் நன்றி கெட்டவர்கள் தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
நல்ல , சிந்திக்க வைக்கும் பதிவு.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
அல்ஹம்துலில்லாஹ். நல்ல விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteஎல்லாம்வல்ல எங்கள் இறைவா!.. இந்த சுனாமி என்னும் பேராபத்துகளிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக! எல்லா மக்களையும் பாதுகாத்து ஆசிர்வதித்து உன் இறையருளை பெற்ற மக்களாக எங்களை ஆக்கியருள்வாயாக... ஆமீன்.
//இன்றைய நிகழ்ச்சி நாளைய வரலாறு//
நீங்க அதிகமா முரசொலி நாளிதழ் விளம்பரம் பார்ப்பீங்களோ #டவுட் :)
@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
Delete//அல்ஹம்துலில்லாஹ். நல்ல விழிப்புணர்வு பதிவு//
அல்ஹம்துலில்லாஹ்!
//நீங்க அதிகமா முரசொலி நாளிதழ் விளம்பரம் பார்ப்பீங்களோ #டவுட் :)//
'முரசொலி'யைக் கேள்விப்பட்டதுண்டு, இதுவரை படித்ததாக ஞாபகமில்லை. விளம்பரம்கூட பார்த்ததில்லை :) டவுட் க்ளியரா? :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
"இறைவனையே இல்லையென்று சொல்லும் மனிதன் நன்றி கெட்டவன் இல்லையா?"
ReplyDelete"இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?"
இதெல்லாம் சிரிப்பை வரவழைக்கக் கூடிய கருத்துக்கள் ! என்னை வணங்குபவனுக்கு மட்டுமே அருள் கொடுப்பேன் மற்றவனுக்கு தர மாட்டேன் என சொல்லுவது குழந்தை சொல்லுவது போல இருக்கு. என்னை நீ இல்லை என்கிறாயா...இதோ பிடி தண்டனை என்று கடவுள் சொல்வாரா ? அந்த அளவுக்கு கூடவா கடவுளுக்கு மெச்சூரிட்டி இருக்காது ?
மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பவனை இறைவன் தண்டிப்பான் என சொன்னால் கூட பரவாயில்லை. இது என்ன புதுக் கதையா இருக்கு ?
@ கபிலன்
Delete//என்னை வணங்குபவனுக்கு மட்டுமே அருள் கொடுப்பேன் மற்றவனுக்கு தர மாட்டேன் என சொல்லுவது குழந்தை சொல்லுவது போல இருக்கு//
தன்னை வணங்காதவர்களுக்கு அருள் செய்யமாட்டேன் என்று இறைவன் சொன்னதாக யார் சகோ சொன்னது? அப்படியானால் அந்த ஓரிறையை மட்டும் வணங்காத எத்தனையோ பேர் இவ்வுலகில் இருக்கிறார்களே, அவர்கள் இறைவனின் எந்த அருளும் இல்லாமல்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா? சொல்லப்பட்ட கருத்தை தவறாக புரிந்துள்ளீர்கள். எனக்கு நேரம் கிடைக்கும்போது, (முடிந்தால் அடுத்த ஓரிரு பதிவுகளில்) உங்களின் பின்னூட்டத்திற்கான விளக்கத்தினை தருகிறேன்.
சகோ குலாம் அவர்கள் உதாரணத்துடன் தந்த விளக்கமும் உங்களின் சரியான புரிதலுக்கு உதவியிருக்கும் என நம்புகிறேன். வருகைக்கு நன்றி சகோ.
//இறைவா! உனது அருள் நீங்குவதை விட்டும், உனது நன்மை மாறிவிடுவதை விட்டும், உனது தண்டனை திடீரென வருவதை விட்டும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.// ஆமீன்.. நல்ல பதிவு சகோ ... படித்த உடன் நம்மையும் அறியாமல் பயம் ஏற்படுகிறது .. எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக ....
ReplyDelete@ mum
Delete//நல்ல பதிவு சகோ ... படித்த உடன் நம்மையும் அறியாமல் பயம் ஏற்படுகிறது .. எல்லோரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக ....//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு
ஜஸாகல்லாஹ் கைரன்
சகோ @கபிலன்
முதலில் விமர்சிக்கும் எதன் பொருளையும் முழுவதும் உள்வாங்கிய பின்னரே விமர்சிக்கவேண்டும்.
//இறைவனையே இல்லையென்று சொல்லும் மனிதன் நன்றி கெட்டவன் இல்லையா?"
"இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?"
இதெல்லாம் சிரிப்பை வரவழைக்கக் கூடிய கருத்துக்கள் ! என்னை வணங்குபவனுக்கு மட்டுமே அருள் கொடுப்பேன் மற்றவனுக்கு தர மாட்டேன் என சொல்லுவது குழந்தை சொல்லுவது போல இருக்கு. என்னை நீ இல்லை என்கிறாயா...இதோ பிடி தண்டனை என்று கடவுள் சொல்வாரா ? அந்த அளவுக்கு கூடவா கடவுளுக்கு மெச்சூரிட்டி இருக்காது ?
மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பவனை இறைவன் தண்டிப்பான் என சொன்னால் கூட பரவாயில்லை. இது என்ன புதுக் கதையா இருக்கு //
முதலில் ஒருவருக்கு நாம் கட்டுப்படுகிறோம் என்பதன் பொருள் என்ன சகோ..?
அவரது ஏவல்கள் -விலக்கல்களை செயல்படுத்துவது. அவரது சொல்லுக்கு மாறு செய்யாதது.
எங்களை பொறுத்தவரை இறைவன் இருக்கிறான் என நம்புகிறோம். இறைவன் ஏவல்கள்- விலக்கல்களை பின்பற்றுகிறோம். இறைவனை ஏற்றுக்கொள்ளாதவன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான் என சொல்கிறோம் இதில் சிரிக்க என்ன இருக்கிறது சகோ.?
இன்னும் ஈசியா சொல்ல ட்ரை பண்றேன் சகோ
ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்வதாக இருந்தால் அதன் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட பிறகே சேரவும் பின்பு பரிட்சை எழுதவும் அனுமதிக்கபடுவர்.நல்ல முறையில் தேர்வெழுதினால் தேர்ச்சி பெறுவார். அப்படியில்லையேன்றால் தோல்வி தான் அடைவார். இது தான் முறையான செயல்.
==== இப்படித்தான் இஸ்லாம் சொல்கிறது
அப்படியில்லாமல் நான் பள்ளியில் சேரவும் மாட்டேன், சட்டத்திட்டங்களுக்கு உட்படவும் மாட்டேன் என்று ஒருவர் சொல்வாரானால் அவர் தேர்வெழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார் அதன் விளைவால் தேர்ச்சி பெறவும் மாட்டார்.
அவரை ஏன் தேர்ச்சி பெற செய்யவில்லை என யாரும் கேட்பாரேயானால் என்ன சொல்வது...?
=== இப்படித்தான் இருக்கிறது உங்கள் கேள்வி.
முன்முடிவுகளற்று எதையும் அணுக முயற்சியுங்கள் சகோ
-குலாம்.
@ G u l a m
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//நல்ல பகிர்வுக்கு
ஜஸாகல்லாஹ் கைரன் //
தங்கள் வருகைக்கும், சகோ கபிலன் அவர்களுக்கு கொடுத்த அழகிய விளக்கத்திற்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.