அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 23 January 2020

சொத்துப் பங்கீட்டை சமன் செய்யும் முறைகள்

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு நான்கில் ஒரு பங்கு (¼), சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு (½), சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு (), சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு (), சிலருக்கு ஆறில் ஒரு பங்கு (), சிலருக்கு எட்டில் ஒரு பங்கு () என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்பதை முந்திய பதிவுகளில் அறிந்துக் கொண்டோம்.

இவ்வாறு சொத்துக்களைப் பங்கிடும்போது சில நேரங்களில் பங்குகளில் பற்றாக்குறையோ அல்லது மீதப்படுதலோ ஏற்பட்டால், அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்றவாறு பிரிக்க இயலாதபட்சத்தில் எல்லோருக்கும் சரியான முறையில் எவ்வாறு பிரிக்கவேண்டும் என்பதற்காக, இந்த சொத்துப் பங்கீடுகள் மூன்று வகைகளாக அமைக்கப்பட்டுள்ளன.


அந்த மூன்று மஸாயில்களின் வகைகள்:

1) "அல்-மஸ்அலத்துல் ஆதிலா" (المسألة العادلة)

அசல் பங்குகளும் கொடுக்கவேண்டிய பங்குகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருப்பது 

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின்படி பிரிக்கப்படக்கூடிய பங்குகள், மீதப்படாமலும் குறைவாக இல்லாமலும் அவற்றிற்குரிய பங்குதாரர்களுக்கு அவரவருடைய சதவிகிதங்களுக்கு ஏற்ற அளவில் அப்படியே பிரித்துக் கொடுக்கும்படி சம அளவில் இருக்கும்.

எனவே இந்த வகை மஸ்அலாவில், மொத்தப் பங்கின் அளவை மாற்றி இரண்டாவது முறை பங்கிடுவதற்கு இடமில்லை.

2) "அல்-மஸ்அலத்துல் ஆஇலா" (المسألة العائلة)

அசல் பங்குகள் குறைவாகவும் கொடுக்கவேண்டிய பங்குகளின் கூட்டுத் தொகை அதிகமாகவும் இருப்பது 

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின்படி பங்குகளைப் பிரிக்கும்போது, பங்குதாரர்களுக்கு கொடுக்கவேண்டிய மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்குகள் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில், பங்குதாரர்களுக்கு எத்தனைப் பங்குகள் கொடுக்க வேண்டுமோ அதே அளவுக்கு மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பிரித்துக் கொடுக்கப்படும். அப்படி பிரிக்கும்போது ஒவ்வொருவரின் பங்கிலும் சராசரியாக அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்ப பங்கின் அளவு சற்றுக் குறைவாக கிடைக்கும். இதற்கு "அவ்ல்" (குறைத்துக் கொடுத்தல்) என்று சொல்லப்படும்.

உதாரணமாக, ஒரு முழு கேக்கில் ஒருவருக்கு பங்குகளும், இன்னொருவருக்கு பங்கும், இன்னொருவருக்கு ½ பங்குமாக கொடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த கேக்கை 6 துண்டுகளாக்கி பங்கிடவேண்டும்.

பங்குகள் கொடுக்கப்பட வேண்டியவருக்கு 4 துண்டுகளும்,
½ பங்கு கொடுக்கப்பட வேண்டியவருக்கு 3 துண்டுகளும்,
பங்கு கொடுக்கப்பட வேண்டியவருக்கு 1 துண்டும் கொடுக்கவேண்டும்.

அப்படியானால் கொடுக்கவேண்டிய மொத்தத் துண்டுகள் 4 + 3 + 1 = 8 துண்டுகள். ஆனால் இருப்பதோ 6 பங்குகள் மட்டுமே! சொல்லப்பட்டுள்ள அளவுகளின்படி பங்கிட வேண்டுமானால் 6 பங்கிலிருந்துதான் கொடுக்க வேண்டும் என்றாலும், இந்த 6 துண்டுகளில் முதல் இருவருக்குரிய பங்குகளை முழுமையாக கொடுக்க இயலாது,  பங்கு உரியவருக்கும் அறவே கொடுக்க இயலாது.

எனவே, கொடுக்கவேண்டிய பங்குகளைவிட மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் 6 என்ற எண்ணிக்கையில் துண்டுகளாக்காமல், மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் 8 துண்டுகளாக பங்கிட்டு கொடுக்கவேண்டும். 6 பங்குகளுக்கு பதிலாக 8 பங்குகள் போடுவதால், ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய அளவில் சிறிதளவு குறையும். அதனால்தான் இந்த வகை பங்கீடு "குறைத்துக் கொடுத்தல்" (அவ்ல்) என்று சொல்லப்படுகிறது.

(கீழுள்ள விளக்கப் படத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் இந்த உதாரணத்தைப் படித்தால் நன்கு விளங்கும்.)


3) "அல்-மஸ்அலத்துன் நாக்கிஸா" (المسألة الناقصة)

அசல் பங்குகள் அதிகமாகவும் கொடுக்கவேண்டிய பங்குகளின் கூட்டுத் தொகை குறைவாகவும் இருப்பது 

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின்படி பிரிக்கப்படக்கூடிய பங்குகளில், அந்த பங்குகளைப் பெற வேண்டியவர்களுக்கு கொடுத்ததுபோக அசல் பங்குகள் மீதப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில், எஞ்சியுள்ள பங்குகள் அதே பங்குதாரர்களுக்கு மீண்டும் பங்கிட்டுக் கொடுக்கப்படும். அப்படி பிரிக்கும்போது ஒவ்வொருவரின் பங்கிலும் அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்ப பங்கின் அளவு சற்றுக் கூடுதலாக கிடைக்கும். இதற்கு "ரத்து" (திரும்பக் கொடுத்தல்) என்று சொல்லப்படும். (இது "அவ்ல்" வகைப் பங்கீட்டிற்கு நேர் எதிரானது.)

உதாரணமாக, ஒரு முழு கேக்கை இருவருக்கும் பிரித்து ஒருவருக்கு  பங்கும், இன்னொருவருக்கு  பங்குமாக கொடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த கேக்கை 6 துண்டுகளாக்கி பங்கிடவேண்டும்.

 பங்கு கொடுக்கப்பட வேண்டியவருக்கு 2 துண்டுகளும்,
 பங்கு கொடுக்கப்பட வேண்டியவருக்கு 1 துண்டும் கொடுக்கவேண்டும்.

அப்படியானால் கொடுக்கவேண்டிய மொத்தத் துண்டுகள் 2 + 1 = 3 மட்டுமே. ஆனால் பங்குகள் முழுமையடையாமல் மீதி 3 துண்டுகள் எஞ்சியிருக்கும். சொல்லப்பட்டுள்ள அளவுகளின்படி பங்கிட வேண்டுமானால் 6 பங்கிலிருந்துதான் கொடுக்க வேண்டும் என்றாலும், இந்த 6 துண்டுகளில் எஞ்சிய 3 துண்டுகளையும், அதைப் பெறுவதற்கு உரிமையாளர்களான அதே பங்குதாரர்களுக்கே கொடுக்கவேண்டும்.

எனவே, கொடுக்கவேண்டிய பங்குகளைவிட மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 6 என்ற எண்ணிக்கையில் துண்டுகளாக்காமல், மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் 4 துண்டுகளாக பங்கிட்டு மீதமில்லாமல் கொடுக்கவேண்டும். 6 பங்குகளுக்கு பதிலாக 4 பங்குகள் போடுவதால், ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய அளவில் சிறிதளவு அதிகமாகும். அதனால்தான் இந்த வகை பங்கீடு "திரும்பக் கொடுத்தல்" (ரத்து) என்று சொல்லப்படுகிறது.

(மேலே கூறியுள்ள உதாரணத்துக்கு இந்த விளக்கப் படத்தைப் பார்க்கவும்.) ▼


இதுவரை சொல்லப்பட்ட இந்த 3 வகைகளில், முதல் வகைப் பங்கீட்டின் ("அல்-மஸ்அலத்துல் ஆதிலா") அடிப்படையில் சொத்துக்களைப் பிரிப்பது பற்றி "சொத்துக்களைப் பங்கிடும் முறைகள்" ன்ற பதிவின் ஆரம்ப இரண்டு உதாரணங்களில் பார்த்தோம். அடுத்த இரண்டு வகை பங்கீடுகளின் அடிப்படையில் சொத்துக்களைப் பிரிப்பது பற்றி இப்போது சில உதாரணங்களோடு பார்ப்போம்.

"அவ்ல்" வகைப் பங்கீட்டில் சொத்துக்களைப் பிரிக்கும் முறை:


மேலுள்ள உதாரணத்தை கவனிக்கவும். இதில் கணவனுக்கு இரண்டில் ஒரு பங்கு (½), சகோதரிகள் இருவருக்கும் சேர்த்து மூன்றில் இரண்டு பங்குகள் ().

இவற்றை "தபாயுன்" அடிப்படையில் இரண்டு 'பகுதி' எண்களையும் பெருக்கி, (½ ↲↳) அதை பொது எண்ணாக்கி அதிலிருந்து பங்கிட்டுக் கொடுத்தால் மொத்தப் பங்குகளின் அசல் எண்ணிக்கை 6 மட்டுமே இருக்கும். ஆனால்,

6 ல் பாதி ➛ 3 பங்குகள் கணவனுக்கும்,  மூன்றில் இரண்டு ➛ 4 பங்குகள் சகோதரிகளுக்கும் பிரிக்கும்போது, மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 3 + 4 = 7 பங்குகளாகிவிடும்.

இப்போது 6 பங்குகளாக பிரிப்பதற்கு பதிலாக இந்த மொத்தப் பங்குகளின் எண்ணிக்கைப்படி 7 பங்குகளாக்கி (பங்குகளின் எண்ணிக்கையைக் கூட்டி) அவரவர்களின் சதவிகிதங்களுக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்க வேண்டும். அதாவது,

6 ல் 3 பங்குகளுக்கு பதிலாக 7 ல் 3 பங்குகள் கணவனுக்கும்,
6 ல் 4 பங்குகளுக்கு பதிலாக 7 ல் 4 பங்குகள் சகோதரிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இப்போது இரண்டு பங்குதாரர்களுக்கும் அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்ப பங்கின் அளவு சற்றுக் குறைவாக கிடைத்தாலும், அனைவருக்கும் கூடுதல்-குறைவு என்ற பாதிப்பின்றி கொடுக்க முடியும்.

இதை சதவிகித அடிப்படையில் சொல்லவேண்டுமானால்,

6 ல் 3 பங்குகளுக்கு பதிலாக 7 ல் 3 பங்குகளைப் பெறக்கூடியவர், 50% க்கு பதிலாக சற்றுக் குறைந்து 42.86% அளவைப் பெறுவார்.

6 ல் 4 பங்குகளுக்கு பதிலாக 7 ல் 4 பங்குகளைப் பெறக்கூடியவர், 66.67% க்கு பதிலாக சற்றுக் குறைந்து 57.14% அளவைப் பெறுவார்.

இவ்வாறு அசல் பங்குகளின் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டு, கிடைக்க வேண்டிய பங்கின் அளவுகள் குறைவது 3 சூழ்நிலைகளில் மட்டுமே ஏற்படும். அதாவது, அசல் பங்குகள் 6 அல்லது 12 அல்லது 24 ஆகிய ஏதாவது ஒரு எண்ணிக்கையில் இருந்து, பங்குதாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்குகள் அதைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, கிடைக்க வேண்டிய பங்கின் அளவை அனைவருக்கும் சிறிது குறைத்துக் கொடுக்கப்படும்.

இந்த "அவ்ல்" வகைப் பங்கீட்டில் மொத்தப் பங்குகளை அவ்வாறு  அதிகப்படுத்தும்போது, அவை எத்தனை பங்குகளாக மாறும் என்பதை கீழ்க்காணும் விளக்கப் படத்தில் பார்க்கவும் 


அசல் பங்குகள் 6 என்ற எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், பங்குதாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்குகள் அதைவிட அதிகமாக இருந்தால், மாறக்கூடிய அந்த மொத்தப் பங்குகள் அதைப் பெறக்கூடிய வாரிசுதாரர்களின் சூழ்நிலைக்கேற்ப 7 அல்லது 8 அல்லது 9 அல்லது 10 ஆகிய நான்கு எண்ணிக்கையாக மட்டுமே மாறும்.

அசல் பங்குகள் 12 என்ற எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், பங்குதாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்குகள் அதைவிட அதிகமாக இருந்தால், மாறக்கூடிய அந்த மொத்தப் பங்குகள் அதைப் பெறக்கூடிய வாரிசுதாரர்களின் சூழ்நிலைக்கேற்ப 13 அல்லது 15 அல்லது 17 ஆகிய மூன்று எண்ணிக்கையாக மட்டுமே மாறும்.

 அசல் பங்குகள் 24 என்ற எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், பங்குதாரர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்குகள் அதைவிட அதிகமாக இருந்தால், மாறக்கூடிய அந்த மொத்தப் பங்குகள் 27 என்ற எண்ணிக்கையாக மட்டுமே மாறும்.

"அவ்ல்" வகைப் பங்கீட்டில் இவற்றைத் தவிர வேறு வகைகளில் அசல் பங்குகள் மாறாது.

"ரத்து" வகைப் பங்கீட்டில் சொத்துக்களைப் பிரிக்கும் முறை:


மேலுள்ள உதாரணத்தை கவனிக்கவும். இதில் மகளுக்கு இரண்டில் ஒரு பங்கு (½), மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பங்கு ().

இவற்றை "ததாஹுல்" அடிப்படையில் (சிறிய எண்ணை கணக்கில் கொள்ளாமல்), பெரிய எண்ணாக இருக்கக்கூடிய பொது எண் (6) ஆறை அடிப்படையாக வைத்து அவற்றை 6 பங்குகளாக பங்கிட்டுக் கொடுக்கும்போது மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை (6) ஆறாக இருந்தாலும்,

இரண்டில் ஒன்று (½) ➛ 3 பங்குகள் மகளுக்கும், ஆறில் ஒன்று () ➛ 1 பங்கு மகனின் மகளுக்கும் என, கொடுக்கவேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 3 + 1= 4 பங்குகள் மட்டுமே இருக்கும். மீதி 2 பங்குகள் எஞ்சியிருக்கும். எனவே 6 பங்குகளாக பிரிப்பதற்கு பதிலாக இந்த மொத்தப் பங்குகளின் எண்ணிக்கைப்படி 4 பங்குகளாக்கி (பங்குகளின் மொத்த எண்ணிக்கையைக் குறைத்து) அவரவர்களின் சதவிகிதங்களுக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்க வேண்டும். அதாவது,

6 ல் 3 பங்குகளுக்கு பதிலாக 4 ல் 3 பங்குகள் மகளுக்கும்,
6 ல் 1 பங்குக்கு பதிலாக 4 ல் 1 பங்கு மகனின் மகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இப்போது இரண்டு பங்குதாரர்களுக்கும் அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்ப பங்கின் அளவு சற்றுக் கூடுதலாக கிடைக்கும்.

இதை சதவிகித அடிப்படையில் சொல்லவேண்டுமானால்,

6 ல் 3 பங்குகளுக்கு பதிலாக 4 ல் 3 பங்குகளைப் பெறக்கூடியவர், 50% க்கு பதிலாக சற்றுக் கூடுதல் அளவில் 75% அளவைப் பெறுவார்.

6 ல் 1 பங்குகளுக்கு பதிலாக 4 ல் 1 பங்குகளைப் பெறக்கூடியவர், 16.67% க்கு பதிலாக சற்றுக் கூடுதல் அளவில் 25% அளவைப் பெறுவார்.

பாகப்பிரிவினை கணக்கீடுகளிலேயே இந்த "ரத்து" வகைப் பங்கீடுதான் அதிகமான சட்டங்களைக் கொண்டதாகவும், மிக கூடுதலான கவனம் செலுத்தவேண்டியதாகவும் அமைந்துள்ளது. இந்த ஒரே பதிவில் அதன் சட்டங்கள் அனைத்தையும் சொல்ல இயலாது என்பதால், இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய பதிவுகளில் இதனுடைய மற்ற சட்டங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை