Covid - 19 Pandemic..! இதுவரை உலக வரலாற்றில் ஒரே காலகட்டத்தில் நிகழும் ஒட்டுமொத்த உலகுக்குமான ஒரு சோதனை இதுவாகவே இருக்கலாம்! இந்த சோதனையைத் தந்த இறைவனே மிக அறிந்தவன். இதனால் உலகில் இன்று அநேகமான வாசல்கள் மூடப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள்..
பள்ளிக்கூட வாசல்கள்..
பல்கலைக்கழக வாசல்கள்..
பிற வழிபாட்டுத் தலங்கள்..
கலைக் கூடங்கள், கடை வீதிகள்..
பெரும்பாலான வியாபார ஸ்தலங்கள்..
தரை - கடல் - ஆகாய போக்குவரத்துகள்..
அனைத்து ஊர் எல்லைகள், பெரு நகரங்கள் என..
ஏன்... சில இடங்களில் ஊரடங்கினால் நம் உறவுகளின் வீட்டுக் கதவுகள் உட்பட எல்லா வாயில்களும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
ஆனால் அல்லாஹ்வின் தவ்பாவுக்கான (பாவமன்னிப்பு) வாயில் மட்டும் என்றும் திறக்கப்பட்டே உள்ளது! நம் ஒவ்வொருவரின் மரணம் வரும்வரை ஒருபோதும் மூடப்படாத வாசல் அது மட்டுமே!
எனவே இன்றைய சூழலில் வழக்கத்தைவிட அதிகமதிமாக நாம் பாவமன்னிப்புத் தேடுவோம்.. நம்மைப் படைத்தவனிடத்தில்!
யாருக்கு, எந்த நாளில், எந்த நிமிடத்தில், எந்த இடத்தில் மரணம் வருமென்று யாருமே அறிய முடியாது. மரணத்தை நெருங்கும் முன் மன்னிப்புத் தேடிக் கொள்வோம்..!

தீமைகளைச் செய்துவிட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:106)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!