அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label பிரார்த்திப்போம். Show all posts
Showing posts with label பிரார்த்திப்போம். Show all posts

Wednesday, 8 April 2020

மரணம் வரும்வரை மூடப்படாத வாசல்!

Covid - 19 Pandemic..! இதுவரை உலக வரலாற்றில் ஒரே காலகட்டத்தில் நிகழும் ஒட்டுமொத்த உலகுக்குமான ஒரு சோதனை இதுவாகவே இருக்கலாம்! இந்த சோதனையைத் தந்த இறைவனே மிக அறிந்தவன். இதனால் உலகில் இன்று அநேகமான வாசல்கள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்கள்..
பள்ளிக்கூட வாசல்கள்..
பல்கலைக்கழக வாசல்கள்..
பிற வழிபாட்டுத் தலங்கள்..
கலைக் கூடங்கள், கடை வீதிகள்..
பெரும்பாலான வியாபார ஸ்தலங்கள்..
தரை - கடல் - ஆகாய போக்குவரத்துகள்..
அனைத்து ஊர் எல்லைகள், பெரு நகரங்கள் என..

ஏன்... சில இடங்களில் ஊரடங்கினால் நம் உறவுகளின் வீட்டுக் கதவுகள் உட்பட எல்லா வாயில்களும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. 

ஆனால் அல்லாஹ்வின் தவ்பாவுக்கான (பாவமன்னிப்பு) வாயில் மட்டும் என்றும் திறக்கப்பட்டே உள்ளது! நம் ஒவ்வொருவரின் மரணம் வரும்வரை ஒருபோதும் மூடப்படாத வாசல் அது மட்டுமே!

எனவே இன்றைய சூழலில் வழக்கத்தைவிட அதிகமதிமாக நாம் பாவமன்னிப்புத் தேடுவோம்.. நம்மைப் படைத்தவனிடத்தில்!

யாருக்கு, எந்த நாளில், எந்த நிமிடத்தில், எந்த இடத்தில் மரணம் வருமென்று யாருமே அறிய முடியாது.  மரணத்தை நெருங்கும் முன் மன்னிப்புத் தேடிக் கொள்வோம்..! 



பயணிக்கும் பாதை