அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 27 January 2011

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!

'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது சம்பந்தமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த சட்ட விரோத தீர்ப்பை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு முழு சொந்தமான அவர்களின் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை 11 மணிக்கு சென்னையில், 'சென்ட்ரல் மெமோரியல் ஹால்' அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தலைமையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்தது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!


மதுரை ஆர்ப்பாட்டம்
15 மாவட்டங்கள் சென்னை ஆர்ப்பாட்டத்திலும், 25 மாவட்டங்கள் மதுரை ஆர்ப்பாட்டத்திலுமாக கலந்துக் கொண்டன. அதில் ஆண்கள் மட்டுமில்லாமல், கைக் குழந்தைகளோடு பெண்களும், முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று அனைவரும் கலந்து, பாதிக்கப்பட்ட தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உயர்நீதி மன்றத்திற்கு கண்டனக் குரல் எழுப்பினர். உட்காரக்கூட இடமில்லாத‌ மக்கள் கூட்டத்தில் பலகீனமான சிலர் தங்களின் பிரயாணக் களைப்பினாலும் வெயிலினாலும் மயக்கமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வந்து குவிந்துக் கொண்டேயிருந்த மக்கள் வெள்ளத்தை சமாளிக்க முடியாத போலீஸார், சென்னை நகருக்குள் நுழையும் முன்பே நூற்றுக்கணக்கான வாகனங்களை தடுத்து நிறுத்தினர். "அனைத்து வாகனங்களும் வந்து சேராத வரை நாங்கள் பேரணியை முடிவுக்கு கொண்டு வரமாட்டோம்" என்று TNTJ வினர் அறிவிப்பு செய்த‌ பிறகு மீதமுள்ள வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. என்றாலும் நெருக்கடியான போக்குவரத்தினால் கடைசிவரை ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்துக்கொள்ள முடியாத சூழலும் சிலருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னை உயர்நீதி மன்றம் வரை பேரணி செல்லும் வழி முழுவதும் மக்கள் பெருமளவில் திரண்டுவிட்ட‌தால், உயர்நீதி மன்றம் வரை செல்வதாக இருந்த பேரணி அசையக் கூட‌ முடியவில்லை. சுமார் 12:30 மணி வரை தொடர்ந்த கோஷ‌ங்களுக்கும் முழக்கங்களுக்கும் பிறகு பி. ஜெய்னுலாபிதீன் அவர்கள் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்.

சென்னையில் பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின்உரை

இவை அனைத்தும் சென்னையில் மட்டும் நடந்த நிகழ்வுகளை (ஆன்லைன்) லைவ் ஷோவில் பார்த்துவிட்டு உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். (மதுரை ஆர்ப்பாட்டம் லைவ் டெலிகாஸ்ட் பண்ணப்பட‌வில்லை) இதிலுள்ள படங்களும், வீடியோவும் நாங்கள் பார்த்த‌ நேரடி ஒளிபரப்பிலிருந்து (சிஸ்டத்திலிருந்து) க்ளிக் பண்ணப் பட்டவை. நீங்களும் வீடியோவைப் பார்க்க:



மற்ற முழு விபரங்களும் விரைவில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!

ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப‌ப்பட்ட கோஷ‌ங்களை எழுத்து வடிவில் காண இங்கே க்ளிக் பண்ணவும்.

10 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    ஏற்கனவே ஒரு பின்னூட்டம் போட்டேன் ஸ்பேம்யில்
    கேடக்குன்னு நேனைக்கிறேன்

    ReplyDelete
  2. @ ஹைதர் அலி...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    ஏற்கனவே ஒரு பின்னூட்டம் போட்டேன் ஸ்பேம்யில்
    கேடக்குன்னு நேனைக்கிறேன்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    முந்திய தலைப்பின் கீழ் கொடுத்திருந்தீர்களே, அதுதானே சகோ? இங்குள்ள டைம் காலை 6 மணியிலிருந்து லைவ் ஷோ பார்ப்பதற்காக என் ப்ளாக் ஓபன் பண்ணவேயில்லை. அதனால் நான் பார்க்க‌வில்லை சகோ. இப்போதான் உங்களின் இரண்டு கமெண்ட்களையும் பப்ளிஷ் பண்ணினேன். நன்றி சகோ.

    ReplyDelete
  3. நல்லதொரு தொகுப்பு வாழ்த்துக்கள் சகோ.........

    இந்த உணர்ச்சிகளை பொது மக்கள்கள் அனைவரும் ஏற்றெடுத்து தயவு செய்து இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்.

    அரசியலில் தற்பொழுது மதங்கள் புகுத்தப்பட்டு தம் சுய நலத்திற்க்காக மதங்களையும் அப்பாவி மக்களகளையும் அரசியல் தலைவர்கள் பலிகடாவாக மாற்றுகிறார்கள்.

    சுயமா சிந்திப்போம்,பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்து வைப்போம்.

    ReplyDelete
  4. @ அந்நியன் 2...

    //இந்த உணர்ச்சிகளை பொது மக்கள்கள் அனைவரும் ஏற்றெடுத்து தயவு செய்து இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வையுங்கள்//

    அந்த சுமூகமான முற்றுப் புள்ளியைதான் எதிர்ப்பார்க்கிறோம், இன்ஷா அல்லாஹ்!

    //அரசியலில் தற்பொழுது மதங்கள் புகுத்தப்பட்டு தம் சுய நலத்திற்க்காக மதங்களையும் அப்பாவி மக்களகளையும் அரசியல் தலைவர்கள் பலிகடாவாக மாற்றுகிறார்கள்//

    உண்மைதான்! அதே சமயம் அப்பாவி மக்கள் எப்போதுமே அமைதியாக இருந்தால் காலில் வைத்து நசுக்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். குட்டக் குட்ட குனிய முடியுமா? அதனால்தான் மக்களின் கொந்தளிப்பை வெளி உலகுக்கு வெளிப்படுத்தவே இந்தப் போராட்டம். நன்றி சகோ.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் ,
    நேரலையில் பார்த்தேன், இன்ஷா அல்லா வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  6. @ இளம் தூயவன்...

    //அஸ்ஸலாமு அலைக்கும் ,
    நேரலையில் பார்த்தேன், இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.. நீங்களும் பார்த்தீர்களா சகோ? கண்டிப்பாக வெற்றிக் கிடைக்க அல்லாஹ் போதுமானவன்! நன்றி சகோ.

    ReplyDelete
  7. அனைவர் மீதும் ஸலாம்,ரஹ்மத் & பரக்கத் உண்டாவதாக.

    அநேகமாய் இந்தியாவில் அநீதி மன்றங்களை எதிர்த்து நடந்த முதல் போராட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வழக்கம்போல ஊடக இருட்டடிப்பு. இன்ஷாஅல்லாஹ் வெற்றி கிடைக்க பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  8. @ முஹம்மத் ஆஷிக்...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //அநேகமாய் இந்தியாவில் அநீதி மன்றங்களை எதிர்த்து நடந்த முதல் போராட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்//

    நமக்குத் தெரிந்து நடந்ததில்லைதான் சகோ!

    //வழக்கம்போல ஊடக இருட்டடிப்பு//

    சாதாரண பெட்டி செய்தி மாதிரி பட்டும் படாமல்தான் இதுபற்றிய செய்திகள் வந்துள்ளன. இது அவர்களுக்கு புதிதல்ல! நன்றி சகோ.

    ReplyDelete
  9. கோஷ‌ங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடியாய் உள்ளது. அலகாபாத் தீர்ப்புக்கு பிறகு நமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

    சகோதரர்களின் இந்த முயற்சி ஆறுதல் அளிக்கிறது.

    ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா?
    இன்ஷா அல்லாஹ் அப்படியே கிடைத்தாலும் அதன் பிறகு ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  10. @ Hasan1...

    //சகோதரர்களின் இந்த முயற்சி ஆறுதல் அளிக்கிறது// நிச்சயமா!

    //ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்குமா?//

    அல்லாஹ் உதவியால் கிடைக்க நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

    //இன்ஷா அல்லாஹ் அப்படியே கிடைத்தாலும் அதன் பிறகு ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை//

    அரசாங்கமும் மக்களும்தான் அதற்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். இருப்பார்கள்! சூழ்ச்சியாளர்களுக்கு எதிராக மக்களுக்கு இறைவனின் உதவி கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்! துஆ செய்வோம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை