ஃபிரான்ஸில் முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டம் நேற்று (14.09.10 அன்று) அமுலுக்கு வந்தது. கடந்த சில மாதங்களாகவே முஸ்லிம் பெண்கள் புர்காவுடன் முகத்திரை அணிவது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சர்ச்சையாக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் ஃபிரான்ஸில் பொது இடங்களில் எங்கும் முகத்திரை அணியக்கூடாது. வீதிகளிலோ, அரசு அலுவலகங்களிலோ, வணிக வளாகங்களிலோ அல்லது விளையாட்டு மைதானங்களிலோ முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்த தடையை மீறி ஒரு ஆண் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி முகத்திரை அணியச்சொன்னால், அந்த ஆணுக்கு 30 ஆயிரம் யூரோ அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று ஃபிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
இது பாதுகாப்போ மதமோ சம்மந்தப்பட்டது அல்ல என்றும் மாறாக பொது விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய ஒன்று என்றும் சட்டத்துறை அமைச்சர் ஆளியோட் மேரி தெரிவித்துள்ளார். மேலும் ஃபிரான்ஸ் ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் அனைத்து மதங்களுக்கும் சம மதிப்பளிக்கப்படும் என்றும், ஆனால் விரும்பியோ கட்டாயப்படுத்தப்பட்டோ முகத்தை மறைப்பது சமூக நடைமுறைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் சில பகுதிகளில் சர்ச்சை இருந்து வருகிறது. இந்த நிலையில் ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஜி, இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணமாக எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு நேரடியாக சென்று 'நிகாப்' (முகத்திரை) சம்பந்தமாக இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்ட முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
குறிப்பு:-
பெண்கள் முகத்தை மறைப்பது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயம் இல்லை. ஆனால் ஒரு பெண் விரும்பினால் முகத்திரை அணிந்துக்கொள்ள தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இதைப் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!)
ஃபிரான்ஸில் நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இந்த முகத்திரை விஷயமாக இஸ்லாம் கூறும் சட்டங்களை சரியான முறையில் புரிந்து வைத்துள்ளதால், இதற்கு எந்த இஸ்லாமிய அமைப்புகளின் சார்பிலும் இங்கு எதிர்ப்புகள் எழவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
முகத்தை மறைப்பதால் பல கெட்டவிசயத்துக்கு வழிவகுக்கும் இந்த சட்டம் வரவேற்க்கப்படும் விசயம்.
ReplyDeleteஇஸ்லாத்திர்க்கு புரமானதல்ல.
@ ராஜவம்சம்...
ReplyDelete//முகத்தை மறைப்பதால் பல கெட்டவிசயத்துக்கு வழிவகுக்கும் இந்த சட்டம் வரவேற்க்கப்படும் விசயம்.
இஸ்லாத்திர்க்கு புரமானதல்ல.//
சரியா சொன்னீங்க. கருத்துக்கு நன்றி!
உங்கள் திருவாரூர் மாவட்ட பெருநாள் தொழுகை சேர்த்துவிட்டேன், பார்க்கவும்!
முகத்தை மறைப்பது மட்டும் தான் கூடாத...? அல்லது தலை முக்காடுமா...? அஸ்மா...
ReplyDeleteநீங்க No Image கு பதிலா அல்லாஹு போட்டு இருப்பது நல்ல இருக்கு லாத்தா..
ReplyDeleteநல்ல பகிர்வு அஸ்மா..
ReplyDelete@ Barakath...
ReplyDelete//முகத்தை மறைப்பது மட்டும் தான் கூடாத...? அல்லது தலை முக்காடுமா...?// (ஃபிரான்ஸின் சட்டத்தை கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்) முகத்தை மறைப்பது மட்டும்தான் கூடாது என்று சட்டமாக்கப்பட்டுள்ளது. முக்காடுக்கும் சட்டம் கொண்டு வந்தால் அதை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றை உலகில் எவரும் கட்டாய சட்டமாக்கி முஸ்லிம்கள் மீது திணிக்க முடியாது.
@ Barakath...
ReplyDelete//நீங்க No Image கு பதிலா அல்லாஹு போட்டு இருப்பது நல்ல இருக்கு லாத்தா//
template சரி பண்ணும்வரை இப்படி ஓடட்டுமே என்றுதான்!
@ Starjan ( ஸ்டார்ஜன் )...
ReplyDelete//நல்ல பகிர்வு அஸ்மா..//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!
eppadi ezhudhanumo appadi thelivaa ezhudhitteenga..thanglish dhaan ..hehee konjcham avasaram
ReplyDeleteThalika
@ Thalika...
ReplyDeleteஉங்க கமெண்ட் பார்த்தவுடனே இது தளிகாவாதான் இருக்கும்னு நினைத்தேன்(அதான் தங்க்லீஷ்):) "நட்ஸ் குல்ஃபி" பக்கத்தில் நீங்க ஏதோ சொல்லியிருந்தீங்க.
//மேலும் விரும்பக் கூடிய இதற தலைப்புகளின் மேல் என்றுமே முதல் கமென்ட் மேல் ஏறி நிற்கிறது அஸ்மா..அது என்ன வென்று பார்க்கவும்//
எனக்கு புரியவில்லை. என்ன சொன்னீங்கன்னு மீண்டும் சொல்லுங்களேன் ருபீனா! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!
அஸ்மாக்கா, அழகாச் சொல்லிருக்கீங்க. முகத்தை மறைப்பதைத்தான் தடை செய்திருக்கிறார்கள் என்பது நிறைய பேருக்குப் புரியாமல் குழப்பம் செய்கிறார்கள்!!
ReplyDelete@ ஹுஸைனம்மா...
ReplyDelete//முகத்தை மறைப்பதைத்தான் தடை செய்திருக்கிறார்கள் என்பது நிறைய பேருக்குப் புரியாமல் குழப்பம் செய்கிறார்கள்!!//
நீங்கள் சொல்வதுபோல் நிறைய குழப்பங்கள் ஆங்காங்கே வந்தது உண்மைதான் மிஸஸ். ஹுசைன்! முதலில் இந்த ஃபிரெஞ்ச் காரங்களுக்கு 'புர்கா'வுக்கும் 'நிகாப்'க்குமுள்ள வித்தியாசம் புரியாமல், 'புருக்கா அணிவது மற்ற மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது, அதனால் அதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படும்' என்று டிவி, பத்திரிக்கை நியூஸ்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனாலும் கூட குழப்பங்கள் வந்தன. ஆனால் அவர்கள் சொல்வது 'நிகாப்'பற்றிதான் என்று அப்போதே எங்களுக்கு புரிந்தது. பிறகுதான் 'புர்கா' என்ற வார்த்தையை விடுத்து, 'நிகாப்'என்ற சொல்லைக் குறிக்கும் (ஃப்ரெஞ்ச் மொழியில்)'voile intégral' என்ற சொல்லை பயன்படுத்தினார்கள்.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றிமா!