அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 17 September 2010

சென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி




சென்னையில் போலி கிரிடிட் கார்டுகள் தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி: கும்பல் தலைவன் போலீஸ் என் கவுண்டரில் பலி
சென்னை அண்ணாநகர் பொன்னி காலனியை சேர்ந்தவர் அனந்தராமன். இவரது மனைவிக்கு ஐ.சி. ஐ.சி.ஐ. பாங்கில் கணக்கு உள்ளது. இந்த கணக்கில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் ரூ.53 ஆயிரத்துக்கு விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருப்பதாக “ஸ்டேட் மெண்ட்” வந்தது.

ஆனால் அனந்தராமன் குடும்பத்தினர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். துணை கமிஷனர் பன்னீர்செல்வம் உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். அப்போது திருட்டுதனமாக கிரிடிட் கார்டு மூலம் விமான டிக்கெட் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கிரிடிட் கார்டை கொடுத்து பெட்ரோல் போடும்போது அங்குள்ள ஊழியர்கள் கார்டை தேய்க்கும்போது இன்னொரு மிஷினான “ஸ்கிம்மர்” என்ற மிஷினிலும் கிராஸ் செய்து மற்றொரு கார்டில் உள்ள விவரங்களை பதிய வைத்து விடுகின்றனர். பின்னர் அதை கம்ப்யூட்டரில் சொருகி அதில் உள்ள விவரங்களை வைத்து போலி கிரிடிட் கார்டு தயாரித்து கோடிக்கணக்கில் பணம் எடுத்துள்ளனர்.

இந்த மோசடியில் கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த வினோத்குமார், இலங்கை நிமல்ராஜ், சென்னை அருண்குமார், எழிலரசன், தீனதயாளன், திருச்சி அருண்ராஜ், கந்தன், ராமலிங்கம் உள்பட பல ஊர்களை சேர்ந்தவர்கள் கிரிடிட் கார்டு தயாரித்து பெங்களூர், மும்பை போன்ற ஊர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அண்ணாநகர் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஜஸ்டின் என்பவர் “ஸ்கிம்மர்” மிஷின் மூலம் கிரிடிட் கார்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து போலி கார்டு தயாரிக்க மூல காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மிஷினை வழங்க மூலகாரணமாக இருந்த பெங்களூரை சேர்ந்த ஏ.கே.சிங் என்பவரை பிடிக்க போலீசார் பெங்களூர் விரைந்தனர். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பெங்களூர் போலீசார் என் கவுண்டரில் அவனை சுட்டுக் கொன்றுவிட்டனர். இவனது கூட்டாளிகளும் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை தேடிவருகிறார்கள்.

இந்த கும்பல் தமிழ்நாடு, ஆந்திரா, மும்பை, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலி கிரிடிட் கார்டு மூலம் அடுத்தவர் பாங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கார், லேப்- டாப், கம்ப்யூட்டர், ஆடம்பர பொருட்களுடன் இவர்கள் வலம் வந்ததும் தெரிய வந்துள்ளது.


இவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது பற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 5 வருடமாக இந்த கும்பல் போலி கிரிடிட் கார்டு மூலம் பணம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் கிரிடிட் கார்டை கடைக்காரர்கள் கையில் கொடுக்கமாட்டார்கள். மிஷினை தந்ததும் அதில் நாம் “ஸ்கிராச்” செய்யனும்.

ஆனால் இங்கு நாம் கிரிடிட் கார்டை கடைக்காரரிடம் கொடுக்கிறோம். அதை சிலர் தவறாக பயன்படுத்தி போலி கார்டை தயாரித்து விடுகிறார்கள். எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். 
பேட்டியின்போது கூடுதல் கமிஷனர்கள் ரவி, ஷகில் அக்தர், இணை கமிஷனர் தாமரைகண்ணன் உடன் இருந்தனர்.

இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய திருமங்கலம் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு, திருமங்கலம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் என்.பி.ராஜேந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோரை கமிஷனர் வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினார்.

நன்றி: மாலை மலர்

12 comments:

  1. அருமையான தகவல் அஸ்மா.. எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.. நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. உம்ரா - ஒரு இனிய பயணம்

    http://ensaaral.blogspot.com/2010/09/blog-post_17.html

    ReplyDelete
  3. oops...So many ways to earn with no work at all!!...subhanallah!!

    ReplyDelete
  4. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //அருமையான தகவல் அஸ்மா.. எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.. //

    ஆமாம், இதுபோன்ற செய்திகள் எல்லா மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதால்தான் உடனே இங்கு பதிந்தேன். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நானா!

    ReplyDelete
  5. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //உம்ரா - ஒரு இனிய பயணம்//

    பார்த்தேன்... அருமையாக இருந்தது. தொடர்ச்சியும் போடுங்கள்.

    ReplyDelete
  6. @ அன்னு...

    //oops...So many ways to earn with no work at all!!...subhanallஅஹ்!!//

    இந்தியாவில்தான் அன்னு இப்படிலாம் ரொம்ப யோசித்து யோசித்து திருடுறாங்க! இங்கேயெல்லாம் அந்த மாதிரி பிரச்சனைகள் கிடையாது. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  7. அஸ்மா.., நானா என்றால் காக்கா., அண்ணனா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. நீங்கள் பாசத்தோடு அழைத்தது..

    ReplyDelete
  8. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    // நானா என்றால் காக்கா., அண்ணனா.. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. நீங்கள் பாசத்தோடு அழைத்தது..//

    அண்ணன் = காக்கா = (எங்க ஊர் வழக்கத்தில்) நானா :) நீங்க சொன்னது சரியே! :)

    ReplyDelete
  9. இப்போ எப்படி உங்க side bar "No Image " கு பதில படம் வருது...!!!!!!!!!!??

    ReplyDelete
  10. ம்ம்ம்ம் நல்லது..

    ReplyDelete
  11. @ Barakath...

    //இப்போ எப்படி உங்க side bar "No Image " கு பதில படம் வருது...!!!!!!!!!!??//

    செட்டிங்ல மாற்றினேன் பரக்கத்.

    ReplyDelete
  12. @ Riyas...

    //ம்ம்ம்ம் நல்லது..//

    ம்ம்ம்ம்...?? நல்லதா...??? :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை