தன்னைத் தானே சுழன்றுக்கொண்டே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பூமி சின்னதாக ஒரு குலுங்கு குலுங்கினாலே ஆங்காங்கே பூமி பிளக்கிறது. கட்டிட்டங்கள் சரிந்து கற்குவியல்கள் ஆகின்றன. அதன் அதிர்ச்சியில் அலைக்கழிக்கப்படும் அலைகள் ஊருக்குள் எகிறிப் பாய்ந்து 'சுனாமி'யாக பெயர் சூட்டப்படுகிறது. பல லட்சம் மக்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளுமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துப் போகிறார்கள். இவை அனைத்தும் இயற்கைதானா? இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?
Showing posts with label படிப்பினை. Show all posts
Showing posts with label படிப்பினை. Show all posts
Wednesday, 11 April 2012
Wednesday, 16 March 2011
இயற்கைச் சீற்றங்கள் சொல்லும் செய்தி!
உலகின் தொழில் நுட்பங்களில் முன்னேறிவரும் நாடுகளில் முக்கியமான நாடு ஜப்பான். சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முழ நீளமுள்ள குட்டி விமானத்தை ரிமோட் மூலம் பறக்கச் செய்து லாவகமாக தரையிறங்கும் விளையாட்டுப் பொருளை, தானே கண்டுபிடித்து விளையாடிப் பார்த்து நம்மை வியப்பில் ஆழ்த்திய சின்னஞ்சிறு சிறுவர்கள் ஜப்பான் மண்ணின் மைந்தர்களே! எந்தவொரு வெளிநாட்டுப் பொருட்களும், குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் நமக்கு அறிமுகம் ஆனபோது, அது "Made in Japan" என்றால் அதற்குதான் முதலிடம். அந்தளவுக்கு தரமும், நுட்பமும் நிறைந்த உற்பத்திகளுக்கு சொந்தக்காரர்கள் ஜப்பானியர்கள். உயரத்தால் குறைந்தவர்கள் என்றாலும் இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் அறிவினால் நிறைந்தவர்கள்! அவர்களின் நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும், சாலை அமைப்புகளிலும் மின்னும் தொழில் நுட்பங்கள், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகளுக்கு சாட்சி சொல்லும்!
Subscribe to:
Posts (Atom)

