அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 9 May 2011

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்ற வருடம் செப்டம்பர் 30ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி/ராமஜென்ம பூமி நிலப் பிரச்சனையில், நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை இஸ்லாமியர்களுக்கும் மற்ற இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் வழங்கவேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (திங்கள் கிழமை) காலை விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முதல் கட்டமாக இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அலகாபாத் நீதிமன்றம் அளித்திருந்த‌ தீர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் (அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும்) மிகவும் ஆச்சரிய‌மானதாகவும் (Strange and surprising) உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இவ்வாறு பிரித்து தீர்ப்ப‌ளித்துள்ளது, இதே போன்று பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்துவிட்டது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு மிகவும் வினோதமாகவும், விந்தையாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என வக்ஃபு வாரியமும், ஜமாஅத்தே உலமா அமைப்பும் தங்கள் மேல் முறையீடு மனுக்களில் குறிப்பிட்டிருந்தன. ராமர் பிறந்த இடத்தில் அந்தக் கட்டடம் இருந்தது என தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்ப‌தாகவும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேல் முறையீட்டு மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை வழங்கி உத்தரவிட்டுள்ள‌து.

எவராலும் தீர்க்க முடியாத வகையிலேயே அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்றும் 'இந்த வழக்கை நாங்கள் ஆய்வு செய்வோம், ஆய்வு முடிந்து மறு தீர்ப்பு வரும் வரை பிரச்சனைக்குரிய இடம் தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்' என்றும், சர்ச்சைக்குரிய நிலத்தைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் பரப்பளவில், மத ரீதியிலான எவ்வித நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றமாவது நீதியை நிலைநாட்டும் என்ற இந்திய மக்களின் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால், அது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இந்திய நீதி மன்றங்களுக்கே பெருமைச் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம்!

(செய்திக் கோவை)

இது தொடர்பான மற்ற செய்திகளைக் காண:

தமிழகம் தழுவிய மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்!
சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!
சென்னை போராட்டக் காட்சிகள் (முழு வீடியோ)!
சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 1)
சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 2)

6 comments:

 1. ம்ம்.. தர்மத்தைக் கவ்விய சூது விலக்கப்படும் காலம் மெல்லத் துவங்கிவிட்டது. முஸ்லிம்களின் பொறுமைக்கு இறைவன் பலன் தருகிறான்.

  ReplyDelete
 2. @ ஹுஸைனம்மா...

  //ம்ம்.. தர்மத்தைக் கவ்விய சூது விலக்கப்படும் காலம் மெல்லத் துவங்கிவிட்டது. முஸ்லிம்களின் பொறுமைக்கு இறைவன் பலன் தருகிறான்//

  நிச்சயமா ஹுஸைனம்மா! "அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்" என்று சொல்வார்கள். ஆனால் அன்று அரசன்(ஆட்சியில் இருந்தவன்) கேட்காவிட்டாலும் இறைவனின் உதவி பொறுமையாளர்களுக்கு என்றும் இருக்கும், இன்ஷா அல்லாஹ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.

  ReplyDelete
 3. சிறந்த தீர்ப்பு. நீதி வெல்லும் என்பது திரும்பவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 4. @ சுவனப்பிரியன்...

  //சிறந்த தீர்ப்பு. நீதி வெல்லும் என்பது திரும்பவும் நிரூபிக்கப்பட்டுள்ளது//

  தீர்ப்புக்கு ஸ்டே ஆர்டர் கொடுத்ததும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க இறைவன் உதவி செய்வானாக! வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 5. சிறந்த தீர்ப்பு.


  சோதனைகள் வரும் ஆனால் அவைகள் முறியடிக்கப்படும்..

  ReplyDelete
 6. @ அன்புடன் மலிக்கா...

  //சோதனைகள் வரும் ஆனால் அவைகள் முறியடிக்கப்படும்..//

  நிச்சயமா மலிக்கா! இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை