அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 9 February 2013

'பேச்சுலர்ஸ் சமையல்' போட்டியும் பரிசும்


"சமையல் அட்டகாசங்கள்" ஜலீலாக்கா அவர்கள் சென்ற டிசம்பர் மாதம் நடத்திய பேச்சுலர்ஸ் சமையல் போட்டிக்கு அனுப்பி வைத்த என்னுடைய சமையல் குறிப்புகள் இவை. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்படி அழைத்த ஜலீலாக்காவுக்கு என் நன்றிகள் :)

வெளிநாடுகளில் தனியாக சமையல் செய்துக்கொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்றார்போல் சுலபமான குறிப்புகளாக அவர்கள் கேட்டிருந்ததால், ஏற்கனவே இந்த தளத்தில் கொடுக்கப்ப‌ட்ட குறிப்புகளிலிருந்து சுலபமானவை மட்டும் ஈவெண்டுக்காக அனுப்பி வைக்கப்ப‌ட்டன. கீழே கொடுக்கப்பட்டுள்ள‌ அந்த குறிப்புகள் உங்களுக்கும் உதவலாம். (அவற்றின் பெயர்களின் மீது க்ளிக் பண்ணி பார்க்கவும்.)

 மரவள்ளிக் கிழங்கு அடை


      ஹகீம் பொரியல் (காட்டுக்கறி)
  

      நண்டு முருங்கைக்காய் குருமா


முள்ளங்கிக் கீரை வதக்கல்
                                                
                                     
     காக்கி மில்க் ஷேக்



                                         

இந்த குறிப்புகளில்  'முள்ளங்கிக் கீரை வதக்கல்''மரவள்ளிக் கிழங்கு அடை' ஆகிய இரண்டு குறிப்புகளும் தேர்வு செய்யப்பட்டு, ஜலீலா அக்காவின் 'சென்னை ப்ளாஸா' சார்பாக‌ பரிசும் நான்கு வகையான‌ சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டி நடத்திய‌ ஜலீலாக்கா மற்றும் தேர்வுசெய்த நடுவர் குழுவினருக்கு நன்றி!
                               
அவர்களின் கடை முகவரி:-

CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Near (EA/Marina Beach/Rathna Cafe)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497
Mr.Kamaluddin: 00971 50 5453400

பேச்சுலர்ஸ்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சமையல் குறிப்புகளும், அதற்கான‌ பரிசு மற்றும் சான்றிதழ்களும்

வெற்றி பெற்றதற்கான பரிசு









10 comments:

  1. அழகான படங்கள்.அருமையான குறிப்புகள். வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. //அழகான படங்கள்.அருமையான குறிப்புகள்//

      "சமைத்து அசத்தலாம்" மூலம் அசத்திக் கொண்டிருக்கும் உங்களிடமிருந்தே பாராட்டுக்களா..?!! :) ரொம்ப நன்றி ஆசியாக்கா :-)

      Delete
  2. மிக அருமையான குறிப்புகள் மிக்க நன்றி அஸ்மா

    ReplyDelete
    Replies
    1. //மிக அருமையான குறிப்புகள்//

      'சமையல் அட்டகாசங்கள்' ஓனரே வந்து சர்ட்ஃபிகேட் கொடுத்துட்டீங்க..? :) ரொம்ப நன்றி ஜலீலாக்கா, போட்டிக்கு அழைத்தமைக்கும் சேர்த்து :)

      Delete
  3. சலாம் சகோ,

    படங்களும்,குறிப்புகளும் அருமை,அதிலும் நண்டு முருங்கைக்காய் குருமா படத்தை பார்த்தாலே நாஊறுகிறது.சுவையான சமையல் சமைக்க வேண்டும் என்ற ஆசை இறந்தாலும் அதற்க்கான பக்குவம் என்னிடம் இல்லை,மற்றப்படி நாங்கலாம் சுடுதண்ணிய சூப்பரா வைக்குற ஆளு.


    என் பதிவு:நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம்
    (சமையல் பத்தின பதிவுன்னு நம்பிவந்தா நிர்வாகம் பொறுப்பில்ல)
    tvpmuslim.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. //படங்களும்,குறிப்புகளும் அருமை,அதிலும் நண்டு முருங்கைக்காய் குருமா படத்தை பார்த்தாலே நாஊறுகிறது//

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

      // நாங்கலாம் சுடுதண்ணிய சூப்பரா வைக்குற ஆளு//

      அப்டியா..!!! செம டேலண்ட்தான் :-)

      //நெய்ச் சோறு,கறிச் சாப்பாடு -மவ்லித் மாதம் (சமையல் பத்தின பதிவுன்னு நம்பிவந்தா நிர்வாகம் பொறுப்பில்ல)//

      அந்த பதிவை முக்கியமா பார்க்க வேண்டியவங்க சுன்னத் ஜமாஅத் காரங்கள்ல...? :))

      Delete
  4. கீரைப்பொரியலைக் கூட அழகாகக் காட்டியிருக்கீங்க....வெற்றி பெற்றதற்கு வாழ்துக்கள் அக்கா... insha Allah, i'll try my favorite fruit juice..

    ReplyDelete
    Replies
    1. //கீரைப்பொரியலைக் கூட அழகாகக் காட்டியிருக்கீங்க....வெற்றி பெற்றதற்கு வாழ்துக்கள் அக்கா...//

      அது படத்திலும் அழகா இருப்பது மாதிரி, டேஸ்ட்டும் அருமையா இருக்கும்! கூடவே ரொம்ப சத்தானது :) வாழ்த்துக்கு நன்றி பானு.

      //insha Allah, i'll try my favorite fruit juice..//

      ட்ரை பண்ணிட்டு நிச்சயம் சொல்லுங்க :)

      Delete
  5. அஸ்மா நீங்க என்ன ஃபோட்டோக்ராஃபரா..ரொம்ப அழகான தெளிவான படங்கள்.அருமையான குறிப்புகள் அதுவும் இந்த மதிய வேளையில்..அந்த நண்டுகறி இருக்கே வா வா ந்னு கூப்பிடுது.எதை செய்தாலும் தெளிவா ஒழுங்கா செய்வது அஸ்மா தான்.மா ஷா அல்லாஹ்

    thalika

    ReplyDelete
    Replies
    1. //அஸ்மா நீங்க என்ன ஃபோட்டோக்ராஃபரா..ரொம்ப அழகான தெளிவான படங்கள்//

      பிடித்த எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்போதும் எனக்கு :) அதுபோல் ஃபோட்டோக்ராஃபியும் கற்றுக்கொள்ள ஆசைதான்.. முடியலயே! :( அதற்கு இன்னும் அதிகமான முயற்சிகள் எடுக்கவேண்டுமென்று நினைக்கிறேன். ஆனா என் ஃபோட்டோக்கள் உங்களுக்கெல்லாம் பிடித்திருப்பது சந்தோஷமா இருக்கு ருபீனா :‍) அதிலும் உங்க ரசனை கரெக்ட்டா இருக்கும்னு எனக்குத் தெரியும் ;)

      //அருமையான குறிப்புகள் அதுவும் இந்த மதிய வேளையில்..அந்த நண்டுகறி இருக்கே வா வா ந்னு கூப்பிடுது//

      வா வா ன்னு கூப்பிட்டா அப்போ நீங்க எங்க வீட்டுக்குதான் வரணும். ஏன்னா அது எங்க வீட்டில சமைச்சதுல்ல..? :))

      //எதை செய்தாலும் தெளிவா ஒழுங்கா செய்வது அஸ்மா தான்.மா ஷா அல்லாஹ்//

      அல்ஹம்துலில்லாஹ்! தேங்க்ஸ்மா.. :)

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை