கேள்வி: மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் - என்று வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹான செய்தியா? விளக்கம் தாருங்கள்.
பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி ❌ "ளயீஃப்" ❌ என்ற பலவீனமான தரத்தில் அமைந்துள்ள செய்தியாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரக்கூடிய அந்த செய்தி பற்றிய விபரங்களைக் கீழே காணலாம்:
❌ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ❌
மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் ஆவார்.
தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தமக்கு வந்து சேரும் துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றார்.
அந்தப் பிரார்த்தனை அவரை வந்தடைந்தால், உலகையும், அதில் உள்ள அனைத்தையும் விட அது அவருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.
நிச்சயமாக, அல்லாஹ் மண்ணறையிலுள்ளவர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களின் பிரார்த்தனையால் மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான். மேலும், உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: ஷுஃ'புல் ஈமான் (7527)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . பைஹகீ இமாம்.
2 . அபூபக்ர்-அஹ்மத் பின் முஹம்மத் பின் இப்ராஹீம்-அல்உஷ்னானீ
3 . அபூஅலீ-ஹுஸைன் பின் அலீ
4 . ஃபள்ல் பின் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் பின் ஸுலைமான்-அல்அன்த்தாகீ
5 . முஹம்மத் பின் ஜாபிர் பின் அபூஅய்யாஷ்-அல்மிஸ்ஸீஸீ
6 . அப்துல்லாஹ் பின் முபாரக்
7 . யஃகூப் பின் கஃகாஃ
8 . முஜாஹித்
9 . இப்னு அப்பாஸ் (ரலி)
இந்த அறிவிப்பு பற்றிய விமர்சனங்கள்:
1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ (4 - வது அறிவிப்பாளர்) ஃபள்ல் பின் முஹம்மத் என்பவர், ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலும், கருத்திலும் தில்லுமுல்லு வேலையை செய்பவர் என்று இப்னு அதீ அவர்கள் விமர்சித்துள்ளார்.
இவர் பொய் சொல்பவர் ஹதீஸை இட்டுக்கட்டக்கூடியவர் என்று தாரகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா - 7/126, லிஸானுல் மீஸான் - 6/351)
2 . மேலும் இதில் வரும் ராவீ (5 - வது அறிவிப்பாளர்) முஹம்மத் பின் ஜாபிர் பின் அபூ அய்யாஷ் என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.
(நூல்: மீஸானுல் இஃதிதால் - 7300)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3. அல்பானீ அவர்கள் இதை மிகவும் முன்கரான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அள்ளயீஃபா-799)
(இந்தச் செய்தி இவரின் வழியாகவே வேறு சில நூல்களிலும் வந்துள்ளது.)
இந்த செய்தியைப் பதிவு செய்த பைஹகீ இமாம் கூறுகிறார்:
'அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தி "ஃகரீப்" என்னும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இது ஹுராசானில் உள்ள அறிஞர்களிடையே பரவலாகக் காணப்படவில்லை. நான் இதை ஃபள்ல் பின் முஹம்மத் என்ற இந்த ஆசிரியரிடமிருந்து மட்டுமே எழுதிக் கொண்டேன்' என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹாஃபிள் அபூ அலீ (ரஹ்) அவர்கள் கூறினார்.
மேலும் இந்தச் செய்தி பற்றி அஹ்மத் (பைஹகீ இமாம்) அவர்கள் கூறுகிறார்:
"முஹம்மத் பின் ஹுஸைமா - அல்பஸரீ - அபூ பக்ர் அவர்கள் இந்தக் கருத்தில் சிலதை, முஹம்மத் பின் அபூ அய்யாஷ் —> இப்னுல் முபாரக் என்ற அறிவிப்பாளர் தொடரில் அறிவித்துள்ளார். இப்னு அபூ அய்யாஷ் மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார். அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்"
(ஷுஃ'புல் ஈமான் - 7527: 7527)
أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْأُشْنَانِيُّ، أنا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، نا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ سُلَيْمَانَ الْأَنْطَاكِيُّ، نا مُحَمَّدُ بْنُ جَابِرِ بْنِ أَبِي عَيَّاشٍ الْمِصِّيصِيُّ، نا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، نا يَعْقُوبُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ، يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ، فَإِذَا لَحِقَتْهُ كَانَتْ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ، وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ
قَالَ أَبُو عَلِيٍّ الْحَافِظُ: ” وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ الْمُبَارَكِ، لَمْ يَقَعْ عِنْدَ أَهْلِ خُرَاسَانَ، وَلَمْ أَكْتُبْهُ إِلَّا مِنْ هَذَا الشَّيْخِ “، قَالَ الْإِمَامُ أَحْمَدُ رَحِمَهُ اللهُ: قَدْ رَوَاهُ بِبَعْضِ مَعْنَاهُ مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ الْبَصْرِيُّ أَبُو بَكْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَيَّاشٍ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، وَابْنِ أَبِي عَيَّاشٍ، يَنْفَرِدُ بِهِ، وَاللهُ أَعْلَمُ
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஷுஃஅபுல் ஈமான் (7527, 8855), அல்பிர்ரு வஸ்ஸிலா - இப்னுல் ஜவ்ஸீ (178)
البر والصلة لابن الجوزي (ص: 132)
178 – أخبرنا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ حَسُّونٍ، قَالَ: أَنْبَأَ الْمُبَارَكُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، قَالَ: أَنْبَأَ عَبْدُ الْعَزِيزِ الْأَرْجِيُّ، قثنا أَبُو بَكْرٍ الْمُفِيدُ، قثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْعَسَّانِيُّ، قثنا مُحَمَّدُ بْنُ جَابِرٍ، قثنا ابْنُ الْمُبَارَكِ، قثنا يَعْقُوبُ بْنُ الْقَعْقَاعِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَدِيَّةُ الأَحْيَاءِ إِلَى الأَمْوَاتِ الاسْتِغْفَارُ لَهُمْ، وَإِنَّ اللَّهَ تَعَالَى لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ الدُّورِ أَمْثَالَ الْجِبَالِ»
❌ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ❌
உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான். நிச்சயமாக அல்லாஹுதஆலா, வீடுகளில் வசிப்பவர்களின் துஆவின் காரணமாக மண்ணறையில் உள்ளவர்களுக்கு, மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னுல் ஜவ்ஸீ
2 . அலீ பின் முஹம்மத் பின் ஹஸ்ஸூன்
3 . முபாரக் பின் அப்துல்ஜப்பார்
4 . அப்துல்அஸீஸ்-அல்அர்ஜீ
5 . அபூபக்ர்-அல்முஃபீத் (முஹம்மத் பின் அஹ்மத்)
6 . அஹ்மத் பின் முஹம்மத்-அல்அஸ்ஸானீ
7 . முஹம்மத் பின் ஜாபிர் பின் அபூஅய்யாஷ்-அல்மிஸ்ஸீஸீ
8 . அப்துல்லாஹ் பின் முபாரக்
9 . யஃகூப் பின் கஃகாஃ
10 . முஜாஹித்
11 . இப்னு அப்பாஸ் (ரலி)
تاريخ بغداد ت بشار (2/ 204)
فإنه كان سافر الكثير، وكتب عن الغرباء، وروى مناكير، وعن مشايخ مجهولين،
سير أعلام النبلاء (16/ 269):
190 – المُفِيْدُ مُحَمَّدُ بنُ أَحْمَدَ بنِ مُحَمَّدِ الجرْجَرَائِيُّ
الشَّيْخُ، الإِمَامُ، المُحَدِّثُ الضَّعِيْفُ، أَبُو بَكْرٍ مُحَمَّدُ بنُ أَحْمَدَ بنِ مُحَمَّدِ بنِ يَعْقُوْبَ الجرْجَرَائِيُّ المُفِيْدُ.
ميزان الاعتدال (3/ 461)
قلت: مات سنة ثمان وسبعين وثلثمائة، وله أربع وتسعون سنة.
وهو متهم.
- இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் ராவீ (5 - வது அறிவிப்பாளர்) அபூபக்ர் - அல்முஃபீத் என்பவர், பலவீனமானவர்கள் மற்றும் அறியப்படாதவர்கள் வழியாக பல முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என கதீப் பஃக்தாதீ அவர்கள் விமர்சித்துள்ளார்.
- தஹபீ அவர்கள், இவரை பலவீனமான ஹதீஸ் அறிஞர் என்றும், பொய்யரென சந்தேகிக்கிப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: தாரீஃஹ் பஃக்தாத்-2/204, ஸியரு அஃலாமின் நுபலா-190, மீஸானுல் இஃதிதால்-3/461)
மேலும் இதில் சிகப்பு நிறத்தில் கூறப்பட்டுள்ள வேறு சில அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்கள் ஆவார்கள்.
[இந்த ஹதீஸ் ஆய்வறிக்கைக்காக உழைத்தவர்களுக்கு அல்லாஹுதஆலா அருள்புரிவானாக!]
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!