அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

Thursday, 25 June 2026

ஆஷூரா நோன்பின் பல நிலைபாடுகள்!

கேள்வி: ஆஷூரா நோன்பு பற்றி வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்கள் பலவித கருத்துக்களில் அறிவிக்கப்பட்டிருப்பது ஏன்? ஆஷூராவுக்கு உள்ள பல நிலைபாடுகளை முரண்பாடின்றி எப்படி புரிந்துக்கொள்வது? அதைப்பற்றி விளக்கவும்.

பதில்:

ஆஷூரா நோன்பு சம்பந்தமான செய்திகள் ஒரே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டவை அல்ல; அவை பல்வேறு காலகட்டங்களில் இருந்த ஆஷூராவின் நிலைகளைச் சொல்லும் செய்திகளாகும்.

அதாவது, ஆஷூரா நோன்பு பற்றி மாறுபட்ட நிலைபாடுகள் இருந்துள்ளன. அவற்றை நாம் தெளிவாகத் தெரிந்துக் கொள்வோம்:

Monday, 11 May 2026

பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?


மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு சரியானதாக உள்ளது.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

سنن الترمذي – 320 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ القُبُورِ، وَالمُتَّخِذِينَ عَلَيْهَا المَسَاجِدَ وَالسُّرُجَ

மண்ணறைகளைச் சந்தித்து வரும் பெண்களையும், அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும், பள்ளி எழுப்புபவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : திர்மிதீ

இது பலவீனமான அறிவிப்பாகும். இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக அபூ சாலிஹ் என்பார் இதை அறிவிப்பதாக இதில் சொல்லப்பட்டுள்ளது.

இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர், அபூ ஹாதிம், நஸாயீ, யஹ்யா பின் மயீன் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

سنن الترمذي – 1056 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ زَوَّارَاتِ القُبُورِ

மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ

அபூஹுரைரா (ரலி) வழியாக உமர் பின் அபீ சலமா என்பவர் இதை அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஅபா, முஹம்மது பின் சஅத், இப்னு ஹுஸைமா, நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி)

سنن ابن ماجه ت الأرنؤوط (2/ 514)- لَعَنَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – زُوَّارَاتِ الْقُبُورِ

மண்ணறைகளை அதிகமாகச் சந்திக்கச் செல்லும் பெண்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)

நூல்: இப்னு மாஜா

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் ஏற்கத்தக்கவர்களாக உள்ளதால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். ஆனாலும் இந்தத் தடை பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.

இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றது.

صحيح مسلم – قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம்

المستدرك على الصحيحين للحاكم – أَنَّ عَائِشَةَ أَقْبَلَتْ ذَاتَ يَوْمٍ مِنَ الْمَقَابِرِ فَقُلْتُ لَهَا: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، مِنْ أَيْنَ أَقْبَلْتِ؟ قَالَتْ: مِنْ قَبْرِ أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، فَقُلْتُ لَهَا: أَلَيْسَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ زِيَارَةِ الْقُبُورِ؟ قَالَتْ: نَعَمْ، كَانَ قَدْ نَهَى، ثُمَّ أُمِرَ بِزِيَارَتِهَا

அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார் :

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளைச் சந்தித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறை நம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள்.

மண்ணறைகளுக்குச் செல்லக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடை செய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்திக்க ஏவினார்கள் எனக் கூறினார்கள்.

நூல்: ஹாகிம்

صحيح مسلم – فَقَالَ: إِنَّ رَبَّكَ يَأْمُرُكَ أَنْ تَأْتِيَ أَهْلَ الْبَقِيعِ فَتَسْتَغْفِرَ لَهُمْ “، قَالَتْ: قُلْتُ: كَيْفَ أَقُولُ لَهُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ ” قُولِي: السَّلَامُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُونَ ”

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

உம் இறைவன் பகீஉ வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான் என்று (என்னிடம்) ஜிப்ரீல் கூறினார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத்தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன் என்று சொல் என்றார்கள்.

நூல்: முஸ்லிம்

(இந்த துஆவின் பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

ஆண்களும், பெண்களும் கப்ரு ஜியாரத் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னர் தடை செய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்கு கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள் என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து மறுமை சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் ஆண்களானாலும், பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை.




Sunday, 26 October 2025

கால்நடைகளிலுள்ள சில உறுப்புகளை சாப்பிடக்கூடாதா?

கேள்வி:

நாம் உண்ணக்கூடிய கால்நடைகளில் சில உறுப்புகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லக்கூடிய கீழ்க்காணும் இந்தச் செய்தி  ஆதாரப்பூர்வமானதா?

"ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எந்தப் பிராணியாக இருந்தாலும் இந்த உறுப்புகளை சாப்பிடக்கூடாது :

1) இரத்தம்

2) பித்தப்பை

3) ஆண்குறி

4) பெண்குறி

5) நீர்ப்பை

6) கட்டி / கழலை

7) இரண்டு விதைகள்

(நூல் : சுனனுல் குப்ரா : 19700)

Saturday, 18 October 2025

பற்களுக்கு க்ளிப் போடுவது, உடல் எடையைக் கூட்டுவது அல்லது குறைப்பது போன்றவை அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:

"அல்லாஹ்வுடைய படைப்பை (மனிதர்கள்) மாற்றி அமைப்பார்கள்" என்று ஷைத்தான் கூறுவதை வைத்து, பல்லுக்கு கம்பி கட்டக்கூடாது என்று கூறுகிறார்கள். அப்படியானால் உடல் எடையைக் குறைப்பது, கூட்டுவது போன்றவையும் கூடாதுதானே?

பதில்:

உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில், "பற்களுக்கு க்ளிப் போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?" என்பதைப் பற்றி பார்ப்போம்.

பற்கள் நேர்மாறாகவோ, குறுகலாகவோ, வளைந்தோ அல்லது அதிக இடைவெளியில் இருந்தாலோ அதை சரிசெய்யும் சிகிச்சையே (Braces Treatment) ப்ரேஸ் சிகிச்சையாகும். அதாவது, பற்களுக்கு க்ளிப் போடுவதாகும்.

பற்களை சீரமைக்க செய்யப்படும் இந்த க்ளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து, சரியான அமைப்புக்கு கொண்டுவரும் முறை ஆகும். 

மருத்துவர் குறிப்பிடும் காலகட்டம்வரை அதை அணிந்திருந்துவிட்டு, பிறகு அவ்வப்போது கழற்றி, மாட்டக்கூடிய க்ளிப்பை ஒரு வருடத்துக்கு அணிந்திருக்க வேண்டியிருக்கும். இது இயற்கையான அமைப்புக்கு மாற்றமாக உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக செய்யப்படும் சிகிச்சைதான் தவிர, இதில் எந்தவித உருவ மாற்றமும் ஏற்படாது.

மலையளவு கடன் இருந்தாலும்...?

கேள்வி:

இதை ஓதினால் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக் கடனை அல்லாஹ் நீக்குவான் என்பதாக ஒரு துஆவை சொல்கிறார்கள். அந்த துஆ இடம்பெறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?




Friday, 10 October 2025

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் கட்டணம் பெற்று, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுவது இஸ்லாத்தில் கூடுமா?

கேள்வி:

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் நுழைவுக் கட்டணம்போல் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுகிறது. இது இஸ்லாத்தில் கூடுமா?

'இஸ்லாமியக் கேள்வி பதில் போட்டி' என்ற பெயரில் இப்படி நடத்தப்பட்டாலும், இது ஒரு சூதாட்டம் போன்ற தோற்றம் தருகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.

பதில்:

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:

"நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!" (திருக்குர்ஆன் 5:90)

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனைவிட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது" எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:219)

திருக்குர்ஆனில் அல்லாஹ் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளான் என்பதால் சூதாட்டம் ஒரு தீயச் செயல் என்பதை அதிகமான இஸ்லாமிய மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று புரிந்துள்ளனர். ஆனால் "சூதாட்டம்" என்றால் என்ன என்பது குறித்த சரியான விளக்கம் பெரும்பாலான மக்களிடம் இல்லை.


Sunday, 14 September 2025

அழகுக்கலை நிபுணருக்கான கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கேள்வி: மணப்பெண் அலங்காரம் (Bridal Mack up), மருதாணி இடுவது (Mehandhi) போன்ற (Beautician Course) துறைச் சார்ந்த கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

பதில்:

இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது மறுமை வெற்றிக்கானது. நம் வாழ்வில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடுத்திருக்கிறதோ, எவையெல்லாம் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து இருக்கிறதோ, அவை சார்ந்த எந்தக் கல்வியையும் நாம் கற்கக் கூடாது. அதேசமயம் இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும், அவரவர் தேர்ந்தெடுக்கும் கல்வியைக் கற்றுத் தேர்வதற்கு முழு சுதந்திரமும் அளித்திருக்கிறது!


Saturday, 6 September 2025

கணவனுடைய ஹராமான வருமானம், மனைவிக்கு ஹலாலா?

கேள்வி: கணவனுடைய வருமானம் ஹராம் என்றால், மனைவிக்கு அவர் தரும் நகை, வீடு ஹலாலா?

பதில்:

நபி (ஸல்) அவர்கள் எந்த காலத்தை எச்சரித்தார்களோ அந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ

"தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2059)

இன்று வசதியற்றவர்கள், வசதிபடைத்தவர்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரக்கூடிய வருமானத்தின் வழியைப் பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல், எப்படியோ பணம் வந்தால் சரி என்ற நோக்கத்தில் பலவிதமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பலதரப்பு மக்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர!)

Monday, 4 August 2025

மண்ணறையில் இருப்பவர்களின் தவிப்புப் பற்றி சொல்லப்படும் செய்தி சரியானதா?

கேள்வி: மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் - என்று வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹான செய்தியா? விளக்கம் தாருங்கள்.

பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி ❌ "ளயீஃப்" ❌ என்ற பலவீனமான தரத்தில் அமைந்துள்ள செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரக்கூடிய அந்த செய்தி பற்றிய விபரங்களைக் கீழே காணலாம்:

Thursday, 31 July 2025

பெற்றோர்களை நோவினை செய்வது பற்றி இஸ்லாம் எச்சரிப்பது என்ன?

கேள்வி: என் மகன் பெரியவர்கள் பிரச்சனையில் தன் பிள்ளைகளை எங்களிடம் காட்டுவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது சரியா?

பதில்: பெற்றோரைப் பேணும் விஷயத்தில், ஒவ்வொரு பிள்ளைகளும் சொல்லாலோ, செயலாலோ தங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடக்கக்கூடாது என்று இஸ்லாம் பல வகைகளில் எச்சரிக்கை செய்கிறது.

இஸ்லாமிய மார்க்கம் என்பது இந்த உலக மாந்தர்களுக்கு மிகப் பெரிய அருளாகும்! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடுத்த அந்தஸ்தை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இஸ்லாம் தந்திருக்கின்றது! அந்த வகையில் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (99% பேர்) தங்கள் பெற்றோர்களை நன்றாகவே கவனித்து வருகின்றார்கள். இஸ்லாத்தை சரியாகப் புரியாத சிலரைத் தவிர, வேறு யாரும் அவர்களை முதியோர் இல்லங்களுக்கும் அனுப்புவதில்லை, அல்ஹம்துலில்லாஹ்!


Monday, 28 July 2025

குப்புறப் படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறையா?

கேள்வி: குப்புறப் படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறை என்று வரக்கூடிய, இப்னு மாஜாவிலுள்ள 3724 - வது ஹதீஸ் ஸஹீஹானதா?

பதில்: இது ஸஹீஹான ஹதீஸல்ல; "ளயீஃப்" என்று சொல்லப்படும் பலவீனமான செய்தி. ஏனெனில், குப்புறப்படுக்கக் கூடாது என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அவற்றில் சில ஹதீஸ்களையும், அவை பலவீனமாக இருப்பதற்கான காரணங்களையும் கீழுள்ள விபரங்களில் காணலாம்.


Thursday, 24 July 2025

ஃபஜ்ரு தொழுகைக்கு தாமதமாக சென்றால், ஜமாஅத் தொழுகை முடிந்தப் பிறகு முன் சுன்னத்தைத் தொழலாமா?

கேள்வி: ஃபஜ்ரு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு தாமதமாக செல்பவர்கள், ஃபர்ளு தொழுகையின் ஜமாஅத்தில் கலந்துக் கொண்டு ஃபஜ்ரை நிறைவேற்றிய பிறகு, ஃபஜ்ரின் முன் சுன்னத்தை தொழுவதற்கு ஆதாரம் உள்ளதா?

பதில்:

ஆம்; ஃபர்ளு தொழுகைக்கான சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழுவதற்கு முடியாமல் போகும் சமயத்தில், கடமையான தொழுகைக்குரிய ஜமாஅத்தில் சேர்ந்து தொழுது முடித்தப்பிறகு, விடுபட்ட அந்த சுன்னத் தொழுகையைத் தொழுதுக் கொள்ளலாம் என்பதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.


Saturday, 19 July 2025

"ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்து இருப்பேன்" என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

கேள்வி: 

மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்பினங்கள் ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.

அல்லாஹ்வுக்கு அடுத்து ஸஜ்தா செய்ய, ஒருவேளை அனுமதி கிடைத்து இருந்தால், அது கணவனுக்காகதான் என்று நபி (ஸல்) கூறியதாக சொல்வது உண்மையா?

தயவுசெய்து விளக்கம் தரவும்.

பதில்:

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

அவற்றில் இப்னு ஹிப்பான் (4171), பைஹகீ - குப்ரா (14711), இப்னுமாஜா (1853), முஸ்னது அஹ்மத் (21986) போன்ற பல அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும், இதே கருத்தில் ஏற்கத் தகுந்த சில ஹதீஸ்களும் உள்ளன.

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால், ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்திருப்பேன். (ஆனால் அதையும்கூட நான் அனுமதிக்கவில்லை)"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ (1159)

முஹம்மத் பின் அம்ர் —> அபூ ஸலமா —> அபூ ஹுரைரா (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர் தொடரில், அபூ ஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ள மேற்கண்ட இந்த ஹதீஸ், "ஹஸன் ஃகரீப்" என்ற நடுத்தரமான தரத்திலுள்ள செய்தியாகும். (இதுபோன்ற தரத்தில் இன்னும் சில அறிவிப்புகளும் உள்ளன.)

அடுத்து இந்த ஹதீஸின் விளக்கத்தைக் கேட்டுள்ளீர்கள்.


Sunday, 13 July 2025

இஷா தொழுகையின் இறுதி நேரம் எது?

கேள்வி: இஷா தொழுகை எத்தனை மணி வரை தொழலாம்? இஷா தொழுகையின் வக்து எப்போது முடிவடைகிறது?

பதில்: இஷா தொழுகையின் இறுதி நேரம் பற்றி இரண்டு விதமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்,

«« மூன்றில் ஒரு பகுதி வரை »»

صحيح مسلم

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ - يَعْنِي الْيَوْمَيْنِ - ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ،… وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ.. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: 

«وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நம்முடன் தொழுகையில் கலந்துக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.

இதையடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், (மேற்கு வானத்தின்) செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம், இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்தப் பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள்.

பின்னர், "கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (1078, 1079)

       «« இரவின் பாதிவரை »»

"وَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ"

"இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதிவரை உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: முஸ்லிம் (1074, 1075, 1076)


Friday, 4 July 2025

டயாபர் (Diaper) கட்டியிருக்கும் நபர் எப்படி தொழுவது?

கேள்வி: உடம்பு சரியில்லாமல் டயாபர் கட்டி இருக்கும் நபர் தொழுவது எப்படி?  என்பதனைப் பற்றி விளக்கம் தாருங்கள்.

பதில்: இதுபற்றி நேரடியாக எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸ்களில் இல்லாவிட்டாலும், இதற்கு நாம் எந்த முடிவை எடுப்பது என்பதை மறைமுகமாகச் சொல்லக்கூடிய, வேறு வடிவத்திலுள்ள இதுபோன்ற ஒரு பிரச்சனைக்கு நபி(ஸல்) அவர்கள் தீர்வு சொன்ன ஆதாரம் உள்ளது.

Tuesday, 1 July 2025

குழந்தைப் பிறந்தவுடன் நாம் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாதவையும்

கேள்வி: குழந்தைப் பிறந்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப் பிறந்தவுடன் அதன் சார்பாக சிலவற்றை செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அவை அனைத்துமே கட்டாயமாக செய்யவேண்டும் என்றோ, உடனே செய்யவேண்டும் என்றோ கிடையாது. என்றாலும், அவற்றில் நபிவழி என்பதற்காக செய்யப்படுவதும், நாள் குறிப்பிட்டு செய்யவேண்டும் என சொல்லப்பட்டவையும் உண்டு. 

அவற்றை எப்படி செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்ட ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நமது வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களின் உடனடி தேவைக்கருதி இப்போதைக்கு சுருக்கமாக கூறியுள்ளோம். ஆதாரங்களோடு பின்னர் பதிவு செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

அவற்றை இப்போது ஒவ்வொன்றாக பார்ப்போம்:

Sunday, 29 June 2025

சுவர்க்கம் நுழைய மரணத்தைத் தவிர எதுவும் தடையாக இருக்காது!

கேள்வி: குப்ரா - நஸாயீ (9848) - வது ஹதீஸின் விளக்கம் என்ன?

"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருவாரோ அவருக்கு, மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது!" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: ஸுனன் அல்குப்ரா - நஸாயீ (9848)

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதுபோல்,  சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்? 

"கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருபவருக்கு மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய அவருக்கு எதுவும் தடையாக இருக்காது" என்பதன் விளக்கம் என்ன?

பதில்: பொதுவாக இஸ்லாம் சொல்லக்கூடிய எல்லா அமல்களும் மறுமைப் பலன்களைத் தரக்கூடியவை என்றாலும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் பல நல்லமல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு ஃபர்ளு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் 'ஆயத்துல் குர்ஸியை' தொடர்ந்து ஓதிவரக்கூடிய அமலும் ஆகும்.

இப்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். "ஆயத்துல் குர்ஸியை ஓதினால் சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?" என்று கேட்டுள்ளீர்கள்.

அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள வாசக அமைப்பை விளங்குவதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதன் பொருளை நீங்கள் சரியாக விளங்கவில்லை. ஒரு வாக்கியத்தில் சொல்லக்கூடிய மையக் கருத்தை உறுதிபட சொல்வதற்காக, அரபி மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இவ்வாறு சில வாக்கியங்களைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒரு வழக்கம்.

இதை ஒரு அழகிய உதாரணத்தோடு பார்ப்போம்:

Thursday, 26 June 2025

இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்ப்பது பற்றிய தீர்வு என்ன?

கேள்வி: இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத கல்லூரி மற்றும் இஸ்லாத்துக்கு முரணானவற்றை சொல்லும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாமா? ஏற்கனவே அந்தப் பள்ளியில் சேர்த்திருந்தால் என்ன செய்வது?

பதில்: கல்வியைப் பொறுத்தவரை, நம் பிள்ளைகளுக்கு இயன்றவரை தரமான கல்வியைதான் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், உலகக் கல்விக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ அதைவிட, மார்க்கத்தைப் பேணுவதற்குதான் மிக முக்கியத்துவமும், முதலிடமும் கொடுக்க வேண்டும். எனவே, நாம் எந்த சூழ்நிலையிலும் உலக ஆதாயங்களுக்காக இஸ்லாத்துக்கு முரணானவற்றை செய்யக்கூடியவர்களாக ஆகிவிடாமல், மார்க்கத்திற்குக் கட்டுப்பட்ட நிலையில் பிள்ளைகளைப் படிக்கவைக்கக் கூடியவர்களாக இருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் பல காலங்களாகவே நம் சமுதாய மக்கள் இதைப்பற்றி கவனம் செலுத்தாமல், கல்வித் தரத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து, கிறிஸ்தவ மிஷினரி கல்விக் கூடங்களிலும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், வித்யாலயா பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.

Sunday, 1 June 2025

கார்ட்டூன் படங்கள் மற்றும் டி.வி. யில் தெரியும் உருவங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன?

கேள்வி:

உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது. அதனடிப்படையில்.. டிவி பார்க்கும்போதும், கார்ட்டூன் படங்கள் ஓடும்போது வரக்கூடிய உருவங்களும் இதில் அடங்குமா?

பதில்:

உருவப்படங்களையும், உருவச் சிலைகளையும் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்பது நம்மில் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ள ஒன்று.

ஆனால் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர். இவற்றை சற்று விரிவாக நாம் ஆராய்ந்தாலே தெளிவு கிடைக்கும்.

Wednesday, 28 May 2025

CREDIT CARD (கடன் அட்டை) பயன்படுத்துவது கூடுமா?

தற்போது CREDIT CARD ("க்ரெடிட் கார்டு") எனும் கடன் அட்டை பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகின்றது. வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த கார்டை வைத்து நமக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டையை பயன்படுத்தியவர் 45 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல், நாம் கடனாகப் பெற்று செலவழித்த தொகையை மட்டும் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் அந்தத் தொகைக்கான வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும்.

 

 
 

குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் செலுத்திவிடும்போது அதற்கு வட்டி செலுத்தும் நிலை வராது என்பதால் இது குற்றமாகாது; வட்டி வாங்கிய குற்றமும் சேராது. ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் செலுத்தத் தவறினால் வட்டி கட்டும் குற்றத்தைச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாம் குற்றவாளியாக ஆகும் நிலை ஏற்படலாம்.

பயணிக்கும் பாதை