அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 23 January 2020

சொத்துப் பங்கீட்டை சமன் செய்யும் முறைகள்

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு நான்கில் ஒரு பங்கு (¼), சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு (½), சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு (), சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு (), சிலருக்கு ஆறில் ஒரு பங்கு (), சிலருக்கு எட்டில் ஒரு பங்கு () என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்பதை முந்திய பதிவுகளில் அறிந்துக் கொண்டோம்.

இவ்வாறு சொத்துக்களைப் பங்கிடும்போது சில நேரங்களில் பங்குகளில் பற்றாக்குறையோ அல்லது மீதப்படுதலோ ஏற்பட்டால், அவரவரின் சதவிகிதங்களுக்கு ஏற்றவாறு பிரிக்க இயலாதபட்சத்தில் எல்லோருக்கும் சரியான முறையில் எவ்வாறு பிரிக்கவேண்டும் என்பதற்காக, இந்த சொத்துப் பங்கீடுகள் மூன்று வகைகளாக அமைக்கப்பட்டுள்ளன.


Friday, 17 January 2020

பாகப்பிரிவினைப் பற்றி கேள்வி கேட்கும்போது...

பாகப்பிரிவினை சம்பந்தமாக கேள்வி கேட்பவர் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு சொத்துப் பங்கீடு பற்றி கேள்வி கேட்கும்போது தன்னை மையமாக வைத்து மற்ற உறவினரைக் குறிப்பிட்டால் பதில் சொல்பவருக்கு குழப்பம் ஏற்படும். அதுபோன்று, நாம் கொடுக்கும் விபரங்கள் தவறாக இருந்தாலோ, ஏதாவது விடுபட்டிருந்தாலோ அதனடிப்படையில் அளிக்கும் ஃபத்வாவும் தவறாக அமைந்துவிடும். எனவே வாரிசுரிமைச் சட்டம் குறித்து நாம் மார்க்கத் தீர்ப்பு கேட்கும்போது, சொத்துக்கு உரிமையாளர் யாரோ அவரை மையமாக வைத்துதான் அவருடைய மற்ற உறவுகளைக் குறிப்பிட வேண்டும். அத்துடன் வாரிசுகள் யாரும் விடுபட்டுவிடாமல் சொத்தைப் பெறக் கூடியவர்கள் அனைவரையும் குறிப்பிட வேண்டும். (சொத்துக்கான வாரிசுகளின் பட்டியலை கீழுள்ள விளக்கப் படத்தில் பார்க்கவும்) ▼

Islamic Inheritance Tree

Wednesday, 1 January 2020

சொத்துக்களைப் பங்கிடும் முறைகள்

இஸ்லாமிய வாரிசுரிமையின் மூன்று வகை பங்குதாரர்களில் முதல் இரண்டு வகையினர் பற்றி முந்திய பதிவுகளில் சில உதாரணங்களோடு பார்த்தோம். இப்போது சொத்துக்களைப் பிரிக்கும் முறைகளைப் பற்றி சற்று கூடுதல் விளக்கங்களோடு பார்க்க இருக்கிறோம்.

திருக்குர்ஆனில் வாரிசுரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகள் அனைத்துமே பின்ன (Fraction) வடிவத்தில் அமைந்தவை. அதுபோல், பின்னங்களின் விகிதங்கள் (Percentage of a Fraction) ஒவ்வொன்றும் வாரிசுரிகளின் நிலைக்கு ஏற்ற மாதிரி வேறுபட்டவையாக இருக்கும். அதேசமயம் இதை கணக்கிடுவதற்கு பெரிய கணக்கியல்கள் தேவைப்படாமல், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நாம் பயின்ற, பின்ன எண்களைக் கணக்கிடும் சிறிய அளவிலான சுலபமான கணக்குகளே போதுமானவையாக இருக்கும். யாரெல்லாம் வாரிசுகள்? யார் யாருக்கு எவ்வளவு பங்குகள்? எந்த சூழ்நிலையில் எவ்வளவு கிடைக்கும், பங்கின் விகிதங்கள் எப்படி மாறும்? என்பதையெல்லாம் சரியாக கவனித்து கணக்கிடுவதுதான் இதில் மிக முக்கியமானதாகும்.


நாம் காலப்போக்கில் பேனாவையும் பேப்பரையும் பெருமளவில் மறந்துவிட்டு, கணக்கு என்றாலே கால்குலேட்டரும் கையுமாக இருக்கும் இன்றைய நிலையில் சிறிய நினைவூட்டலாக, பின்ன எண்களைக் கணக்கிடும் அடிப்படை சிலவற்றை மட்டும் பார்த்துவிட்டு அத்துடன் சொத்துக்களைப் பங்கிடும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

Friday, 27 December 2019

சொத்துரிமையில் முன்னுரிமை

இறைவேதமான அல்குர்ஆனின் கட்டளைப்படி இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் வாரிசுகளாக வரக்கூடியவர்களையும், அவர்களில் முதல்வகை பங்குதாரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகள் பற்றியும், அளவு நிர்ணயிக்கப்படாத பங்குதாரராக வரக்கூடிய ஒரு வாரிசு மரணித்தவரின் மகன் என்பதையும் முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

இறந்தவரின் மகனுக்கு பங்குகள் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் அவர் இரண்டாம் வகை பங்குதாரர்களில் இடம்பெறுவார் என்றாலும், அவர்தான் முதல்வகை பங்குதாரர்களைவிட முன்னுரிமை பெற்றவராவார். அதாவது, நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகளின்படி பங்குகளை உரியவர்களுக்கு பிரித்துக் கொடுத்தப்பின் மீதியுள்ள அனைத்தும் மகனுக்கு சேர வேண்டும் என்று மரணித்தவரின் மகனுக்கு ஒரு முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுக்கிறது. எல்லோருக்கும் கொடுத்ததுபோக மீதியைக் கொடுப்பது எப்படி முன்னுரிமையாகும் என்று இங்கே நினைக்கத் தோன்றலாம். மகனுக்கு கொடுப்பது மீதி பங்குகள் என்றாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தோமானால், பெரும்பாலான நேரங்களில் மற்ற வாரிசுகளைவிட கூடுதல் சதவிகித பங்கைதான் மகன் அடைவார்.


Thursday, 19 December 2019

அல்குர்ஆன் கூறும் ஆறுவகை பங்குகள்

இஸ்லாமிய சமூகம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை குர்ஆனின் கட்டளைச் சார்ந்த கோட்பாடுகள் வரையறுக்கின்றன. அத்துடன், ஹதீஸ்கள் என்று சொல்லப்படும் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் குர்ஆனின் ஒவ்வொரு கோட்பாடுகளையும் சார்ந்துதான் நமக்கு வாழ்வியலாக்கித் தரப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில், ஒரு மனிதன் தன் சொத்துக்களுக்கு அவன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவன் விரும்பிய விதத்தில் தானாகவே முடிவுசெய்து தன் வாரிசுகளுக்கு பங்கிட்டு கொடுக்க முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கும் பட்டியல் முறையில்தான் பங்கீடு செய்யவேண்டும். ஒரு குடும்ப சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக உள்ளுக்குள்ளேயே மாறிக் கொண்டிருக்காமல், அச்சொத்துக்களால் பலருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே இதன் முக்கிய அம்சமாகும்.

நேர்மையான, அற்புதமான, விரிவான இந்த பின்னக் கணக்கீட்டு முறை (Fraction) ஏக இறைவனான அல்லாஹ்வால் இறுதியாக அருளப்பட்ட வேதமான குர்ஆனில் தவிர மற்ற வேதங்களிலோ, அறிவில் சிறந்த மனிதர்கள் இயற்றிய எந்த சட்டங்களிலோ முழுமையாக காணமுடியாது. ஏனெனில் குர்ஆன் கூறும் இந்த பங்கீட்டு முறை எல்லாம் வல்ல இறைவன் வகுத்த விதியாகும். இதில் அவனல்லாத வேறு எவரது தலையீடும் இல்லை. இஸ்லாமியச் சட்டங்களிலேயே இந்த பாகப்பிரிவினைச் சட்டம்தான் மிக மிக நுட்பமானதாக அமைந்துள்ளது!


இந்த சட்டத்தின் மூலம் யாரெல்லாம் வாரிசுகள்? அவர்கள் எந்த வகையில் ஒருவருக்கு வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்படவேண்டிய வாரிசுகள் யார், யார்? அவர்களில் யாருக்கு எவ்வளவு பங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்ற விபரங்களை எல்லாம் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது. ஒருவர் மரணித்துவிட்டால் அவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகள் எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதை குளறுபடிகளின்றி கையாள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கவேண்டிய இந்த பங்கீட்டு அளவுகளை இங்கே பார்ப்போம்.